சென்னை ஈசிஆர் கடற்கரையில் கருப்பு நிறத்தில் காணப்படும் மணல்! கடலிலும் மாற்றம்! பொதுமக்கள் அச்சம்!
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை கடற்கரைகளில் மணல் கருப்பு நிறத்தில் மாறியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள். இந்த மண்ணை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆய்வுக்குள்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை என்றாலே பிரம்மாண்டம்தான். நீளமான சாலையில் ஆங்காங்கே தெரியும் கடற்கரை, சவுக்கு தோப்பு, ஜில்லென்று வீசும் காற்று, நடுநடுவே வரும் ஊர்கள் என அழகாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேல் அமைதியாக இருக்கும்.

கிழக்கு கடற்கரை சாலை பகுதியில்தான் பனையூர், உத்தண்டி, அக்கரை, நீலாங்கரை, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கடற்கரைக்கு தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் வந்து இயற்கையை ரசித்துவிட்டு செல்வது வழக்கம்.
அது போல் இங்கு நடைப்பயிற்சி மேற்கொள்வோரும் வருகிறார்கள். வார இறுதி நாட்களில் மீன்களை வாங்கவும் அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் பனையூர், உத்தண்டி, அக்கரை, நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் உள்ள மணல் பரப்பு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக திடீரென கருப்பு நிறத்தில் மாறி காணப்படுகிறது.
இதனால் மணல் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கருப்பாகவே காணப்படுகிறது. இதை பார்க்கும் அப்பகுதி மக்கள், கடலில் இருந்து ஏதோ கழிவுகள் ஒதுங்கியிருப்பதாக கடற்கரையில் கால் வைக்கவே அச்சப்பட்டு மணல் திட்டுகளிலேயே அமர்ந்துவிட்டு செல்கிறார்கள். மேலும் அந்த கழிவுகளால் நோய் பரவுமோ என்ற அச்சம் வேறு நிலவுகிறது.
இதுகுறித்து மீனவர்கள் சிலர் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறுகையில் கடற்கரை மணற்பரப்பு பொதுவாக பழுப்பு, வெள்ளை , கருப்பு, மஞ்சள் என பல வண்ணங்களில் அடுக்குகளாக இருக்கும். கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் போது கடற்கரையின் மணற்பரப்பின் மேல் அடுக்கில் உள்ள வெள்ளை நிற மணல், அரிப்பு ஏற்பட்டு அடியில் உள்ள கருப்பு மண்ணை வெளிப்படுத்தும்.
இது பொதுவாக ஆடி முடிந்து ஆவணி மாதங்களில் மண் கருப்பு நிறத்தில் வெளியேறும். எனவே இது இயல்பானது. இதை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளனர். அது போல் டிசம்பர் மாதம், வடகிழக்கு பருவமழை வரை கடற்கரையில் மணல் கருப்பு நிறமாக மாறுவதால் ஆமைகளுக்கும் மீன்களுக்கும் மற்றும் சில உயிரினங்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. எந்த நோய்த் தொற்றும் ஏற்படாது என்றனர்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications