சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏங்க.. நான் அப்படியா செய்தேன்.. திமுகவை சீண்டிய எடப்பாடி பழனிசாமி.. இதுதான் காரணமா?.. பரபர விவாதம்

எடப்பாடி பழனிசாமியின் திருப்பத்தூர் பேச்சு விவாதங்களை கிளப்பி விட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: திருப்பத்தூரில் நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி குறித்து எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தற்போது பல்வேறு விவாதங்களை சோஷியல் மீடியாவில் கிளப்பி விட்டு வருகிறது. திமுக குறித்து எடப்பாடி பழனிசாமி அப்படி என்ன பேசினார்?

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.. இதை எதிர்கொள்ள அதிமுகவும் தயாராகி வருகிறது.. இதற்கான பிரச்சாரத்தை முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருப்பத்தூரில் இருந்து தொடங்கியிருக்கிறார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக டெல்லி பயணம்.. 2 நாளில் நடக்க போகும் 3 முக்கிய சந்திப்புகள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக டெல்லி பயணம்.. 2 நாளில் நடக்க போகும் 3 முக்கிய சந்திப்புகள்

முன்னதாக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டமும் நடந்துள்ளது.. இதில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி வீரமணி மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

 தில்லுமுல்லு

தில்லுமுல்லு

பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, "திமுக ஆட்சியின் தில்லுமுல்லுகளை தான் மக்களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும்... திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் மறந்துவிட்டது. ஆனால் எதிர்க்கட்சியான அதிமுகவை பழிவாங்குவதை மட்டுமே இப்போது வேலையாக செய்து வருகிறது... தேசியமயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அன்று ஸ்டாலின் சொன்னார்..

 கல்வி செலவு

கல்வி செலவு

ஆனால் இப்போது கூட்டுறவு வங்கிகளில் மட்டும் தள்ளுபடி என்கிறார்கள். அதற்கும் பல கட்டுப்பாடுகளை சொல்கிறார்கள்... அதேபோல, நீட் தேர்வு விவகாரத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை நம்முடைய ஆட்சியில்தான் வழங்கினோம்.. கல்வி செலவையும் நாம்தான் ஏற்றோம்.. கிராமங்களுக்கு நாம் நிறைய சாதனைகளை செய்துள்ளோம்.. அதையெல்லாம் சொல்லி வாக்கு கேளுங்கள்" என்று கூறியுள்ளார்.

அவதூறு

அவதூறு

இறுதியில் எடப்பாடி பேசிய பேச்சுதான் ஹைலைட் ஆகி உள்ளது.. "திமுகவுக்கு அதிமுக மீது வழக்குபோடுவது, அவதூறு பரப்புவது, ரெய்டு நடத்துவதுதான் முதல் வேலையாக இருக்கிறது.. நாங்கள் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்குகளை திமுக மீது போட்டிருக்கலாம்.. ஆனால், எங்கள் ஆட்சியில் அப்படி செய்தோமோ? இல்லையே" என்று பேசியுள்ளார்.. இதை கேட்டுதான் அதிமுகவினர் அதிர்ந்து போய்விட்டனராம்.

 பாஜக மேலிடம்

பாஜக மேலிடம்

எடப்பாடியின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அவர் இவ்வாறு பேச என்ன காரணம்? என்ற கருத்துக்களும் பதிவாகி வருகின்றன.. இந்த 5 வருட காலத்தில் அதிக அளவு பாஜக மேலிடத்தையே அதிமுக நம்பியிருந்து வந்தது.. ஆனால், ஆட்சி மாறிய பிறகு, பாஜகவுடனான இணக்கம் குறைந்துள்ளது.. குறிப்பாக, அதிமுகவிடமிருந்து பாஜகவே விலகல் போக்கை கடைப்பிடித்ததாக கூறுகிறார்கள்.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

இதற்கு காரணம், அடுத்தடுத்து ஊழல் புகார்களில் மாஜிக்கள் சிக்கி வருவதை பாஜகவே விரும்பவில்லை.. ஊழலுக்கு எதிரான அஸ்திரத்தை வைத்து மட்டுமே பாஜக ஆட்சி செய்து வருவதால், அதிமுகவுக்கு எந்த விதத்திலும் அது கை கொடுக்கவில்லை.. புளியந்தோப்பு கட்டிட விவகாரம், கொடநாடு விவகாரத்தில் நேரடியாக சட்டசபையில் விவாதம் நடைபெற்ற நிலையில், எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் ஆளுநரை சந்திக்க அன்றைய தினமே ஓடினர்.. ஆனாலும் அது பெருமளவு கை கொடுக்கவில்லை. பாஜக அதிமுகவை கைவிட்டுவிட்டதாகவே தெரிகிறது.

 புளியந்தோப்பு

புளியந்தோப்பு

அதேபோல திமுகவை எடுத்து கொண்டால், ஒருபக்கம் மாஜிக்களிடம் ரெயிடு நடத்தி கொண்டே, கொடநாடு விஷயத்தில் தீவிரம் காட்டி வருகிறது.. புளியந்தோப்பு கட்டிட விவகாரம் ஒருநாள் மட்டும் வெடித்து கிளம்பிய நிலையில், ஓபிஎஸ்ஸை திமுக இதுவரை கண்டுகொள்ளவே இல்லை என்றும், கொடநாடு மேட்டருக்கே திமுக முக்கியத்துவம் தந்து வருவதாகவும் எடப்பாடி பழனிசாமியே தனக்கு நெருக்கமானவர்களிடம் ஏற்கனவே புலம்பினாராம்..

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

அதனால்தான், நடந்துமுடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணித்தபோதுகூட, செய்தியாளர்களிடம் 2 முறை எடப்பாடி பழனிசாமி பேட்டி தந்திருந்தார்.. அந்த 2 பேட்டிகளிலும் அவர் சொன்ன வார்த்தை "திமுக புள்ளிகள் மீதும்தான் கோர்ட்டில் கேஸ் இருக்கிறது.. அவங்க என்ன தப்பே செய்யவில்லையா" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.. அதாவது தன் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய் என்பதை நிரூபிப்பதற்கு பதிலாக, திமுகவும் குற்றமிழைத்தது என்பதையே எடப்பாடி பழனிசாமி திரும்ப திரும்ப வலியுறுத்தினார்.

 நடவடிக்கை

நடவடிக்கை

இப்போதும் அதுபோன்றே ஒரு கருத்தை சொல்லி உள்ளார்.. "நாங்கள் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்குகளை திமுக மீது போட்டிருக்கலாம்.. ஆனால், எங்கள் ஆட்சியில் அப்படி செய்தோமோ? இல்லையே" என்று பேசியுள்ளது, ஏதோ டீல் பேசுவது போல இருப்பதாக கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.. "நாங்கள் உங்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை, நீங்களும் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என்பது போல எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக பேசுகிறாரே என்ற முணுமுணுப்புகளும் கிளம்பி உள்ளன.

English summary
Why Edapadi palanisamy says about ADMK Gov and no case against DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X