39 மணி நேரம்தான்.. அதுக்கு மேல கிடையாது.. ரூல்ஸ் போட்ட எடப்பாடி.. இனி அவரை அசைக்கவே முடியாது போலயே!
27ஆம் தேதி காலை 9 மணி முதல் வாக்கு எண்ணிக்கை செய்யப்படும் என்று அதிமுக தலைமை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார். இந்த தேர்தல் அறிவிப்பில் இடம்பெற்று இருக்கும் சில அம்சங்கள் காரணமாக.. அதிமுக உட்கட்சி மோதல் முடிவிற்கு வருகிறதோ என்று கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை நடத்தியது சரிதான் பொதுக்குழு சட்டப்படிதான் நடந்துள்ளது.
இதில் விதிமீறல்கள் எதுவும் இல்லை. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராக வேண்டுமானால் சிவில் வழக்கு தொடுக்கலாம். மற்றபடி பொதுக்குழு முறையாக விதிகளை பின்பற்றித்தான் நடந்து உள்ளதாக கூறப்பட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு
பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி வென்றுவிட்டாலும் தேர்தல் ஆணையம் இன்னும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது வரை ஓ பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணைப்பாளர். இதனால் ஒருங்கிணைப்பாளரை இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியில் இருந்து நீக்க முடியாது. தற்போது தேர்தல் ஆணைய விதிப்படி ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் இருக்கிறார். இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இதை இன்னும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ பன்னீர்செல்வம் தரப்பும் முறையிட்டு உள்ளன.

முறையீடு
இந்த முறையீட்டிற்கு இடையில்தான் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார். இந்த தேர்தல் அறிவிப்பில் இடம்பெற்று இருக்கும் சில அம்சங்கள் காரணமாக.. அதிமுக உட்கட்சி மோதல் முடிவிற்கு வருகிறதோ என்று கேள்வி எழுந்துள்ளது. தேர்தலில் போட்டியிட இன்று முதல் விண்ணப்பிக்கலாம். நாளை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மொத்தமே மனு தாக்கல் செய்ய 39 மணி நேரம்தான் கொடுக்கப்பட்டு உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்ப கட்டணம் 25 ஆயிரம் ரூபாய். 27ஆம் தேதி காலை 9 மணி முதல் வாக்கு எண்ணிக்கை செய்யப்படும் என்று அதிமுக தலைமை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ஏன் இப்படி?
இதில் எடப்பாடி பழனிசாமி பெரும்பாலும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில் வகுத்து இருக்கும் விதிகள் அப்படியானது. அதன்படி பொதுக்குழு தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட கட்சியில் 10 ஆண்டுகள் உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் தலைமைக்கழக நிர்வாகியாக இருந்திருக்க வேண்டும். 10 பொதுக்குழு உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும். 10 பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிய வேண்டும் என்று விதியில் கூறப்பட்டு உள்ளது.

விதி என்ன?
இதனால் எடப்பாடியை எதிர்த்து பெரும்பாலான நிர்வாகிகள் மனுதாக்கல் செய்ய முடியாது. கடந்த 5 வருடத்தில் தலைமை கழக நிர்வாகிகளாக இருந்தவர்கள் எல்லாம் எடப்பாடி டீமில்தான் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் கட்சியிலேயே இல்லை. அவருக்கு சாதகமாக இந்த விதி வழங்கப்பட்டு உள்ளது. அதனால் எடப்பாடி பழனிசாமி பெரும்பாலும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்றே கூறப்படுகிறது. அதாவது அவரை எதிர்த்து யாருமே போட்டியிட மாட்டார்கள்.போட்டியிடவும் விதி இடம் கொடுக்காது. அதனால் எடப்பாடி பழனிசாமியே எளிதாக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் கட்சியில் இல்லை என்பதால் அவரால் போட்டியிட முடியாது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications