அதிமுக பொதுச் செயலாளரானதும் புதிய பிரச்சார வாகனத்திற்கு மாறினார் எடப்பாடி பழனிசாமி.. என்ன ஸ்பெஷல்?
சென்னை: எடப்பாடி பழனிசாமி புதிய பிரச்சார வாகனத்தில் சேலத்தில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு வந்தது தொண்டர்களின் கவனத்தை ஈர்த்தது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை காரணமாக அதிமுக பிரிந்து கிடக்கிறது. அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியா கைப்பற்ற எடப்பாடிக்கு 98 சதவீத பொதுக் குழு உறுப்பினர்கள் ஆதரவு தந்தனர்.

இதையடுத்து பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பொதுச் செயலாளர் தேர்தலில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் தாம்தான் அதிமுக என ஓபிஎஸ் உள்ளிட்டோர் சொல்லிக் கொண்டு பல்வேறு கூட்டங்களை கூட்டி வருகிறார்கள.
2019 ஆம் ஆண்டு முதல் நடந்த தேர்தல்களில் தோல்வியை அடைந்து வந்த அதிமுக தற்போது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த தோல்விக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என ஒபிஎஸ் தரப்பினர் சொல்லி வருகிறார்கள்.
இதனால் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தனது செல்வாக்கை எப்படியாவது நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி இருக்கிறார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த சில நாட்களாக காலில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்காக சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரமாக அவரால் ஒரே இடத்தில் நிற்க முடியாத நிலை உள்ளது. இதனால் சேலத்திலேயே அவர் 20 நாட்களுக்கு மேல் தங்கியிருந்து ஓய்வு எடுத்து வந்தார்.
சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை பார்க்ககூட எடப்பாடி பழனிசாமியால் வர முடியாத நிலை இருந்தது. இதையடுத்து நீண்ட பயணங்களுக்கு எப்போதும் இன்னோவா மற்றும் டெம்போ டிராவலரை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் அதில் கால் வைக்க குறுகிய இடமாக இருப்பதாக புதிய வகை காருக்கு அவர் மாற திட்டமிட்டார்.
அதன்படி நேற்று சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த எடப்பாடி பழனிசாமி ஃபோர்ஸ் நிறுவனத்தின் அர்பானியா வகை வாகனத்தை பயன்படுத்தினார். மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் அதற்கு வசதியாக இந்த புதிய வாகனம் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications