‛மோடி’ அஸ்திரம்! என்டிஏவில் அதிமுக ஏன்? ஓ பன்னீர் செல்வத்துக்கு கட்டம் கட்டும் எடப்பாடி! பின்னணி
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உள்ள நிலையில் ‛மோடி' அஸ்திரத்தை பயன்படுத்தி ஓ பன்னீர் செல்வத்தை வீழ்த்த எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார் என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் தற்போதே பணிகளை தொடங்கி விட்டன. தேசிய அளவில் பார்த்தால் அதிமுக பாஜக கூட்டணியில் உள்ளது. திமுக என்பது காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் இணைந்த ‛‛இந்தியா'' எனும் எதிர்க்கட்சிகளின் கூட்டணயில் இருக்கிறது.

இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி எப்படி அமையும்?, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வியூகம் என்ன? மதுரையில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 20ம் தேதி நடக்கும் மாநாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெளிவாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ரவீந்திரன் துரைசாமி ‛ஒன்இந்தியா' யூ டியூப் சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியின் விபரம் வருமாறு:
கேள்வி: மதுரை மாநாடு தொடர்பாக முக்குலத்தோர் சாதிய அமைப்புகள் எடப்பாடி பழனிச்சாமியை உள்ளே விடமாட்டோம். எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்கள். இவர்களை ஓ பன்னீர் செல்வம் தரப்பு துண்டிவிட்டதார்களாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கூறுகிறார்களே?
ரவீந்திரன் துரைசாமி: ஆட்சி அதிகாரத்திலும், ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சேர்ந்து இருந்தபோதே முக்குலேத்தோர் பசும்பொன்னில் எடப்பாடி பழனிச்சாமியினர் பேனரை கிழித்தனர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஓ பன்னீர் செல்வத்தின் கல், மண் வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். இதுவெல்லாம் மக்களின் உணர்வு தான். முக்குலத்தோரை பொறுத்தவரை சாதிவாரி கணக்கெடுப்பில் அநீதி இருப்பதாக கூறுகின்றனர்.

மேலும் சசிகலாவை அரசியல் ரீதியாக வீழ்த்தியது, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை காலி செய்துவிட்டார்கள் இடஒதுக்கீடு தாண்டி இந்த அரசியல் ரீதியான கோபமும் உள்ளதாக பார்க்கின்றேன்.
கேள்வி: மதுரை மாநாடு எடப்பாடி பழனிச்சாமிக்கு எவ்வளவு முக்கியத்துவமானது?
ரவீந்திரன் துரைசாமி: எடப்பாடி பழனிச்சாமியின் வியூகம் என்னவென்றால் அதிமுக என்பது முக்குலத்தோர். அதில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா எதிர்க்கிறேன் என்ற பெயரில் ஆர்பி உதயக்குமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக வைத்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக எனும் அரசியல் அமைப்பை கைப்பற்ற வேண்டும் என்ற புள்ளியில் நகர்கிறார். முக்குலத்தோர் பிரிவு தலைவர்களை எதிர்த்துவிட்டு ஆர்பி உதயக்குமார் மூலம் அந்த மக்களிடமே அவர் சரணடைகிறார்.

அதாவது சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர் செல்வத்தை எதிர்க்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆர்பி உதயகுமாரை துணை எதிர்க்கட்சி தலைவராக நியமனம் செய்துள்ளார். தற்போதைய சூழலில் முக்குலத்தோர் மத்தியில்அரசியல் ரீதியாகவும், இடஒதுக்கீடு ரீதியாகவும் மனக்கசப்பு உள்ளது. இதனை எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோதே காட்டியுள்ளனர். அந்த வகையில் இது எடப்பாடி பழனிச்சாமிக்கு முக்கியமானது.
கேள்வி: ஓ பன்னீர் செல்வம் குறித்து அண்ணாமலை பேசினாலே அவரை அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்கிறார்களா?

ரவீந்திரன் துரைசாமி: பிரதமர் வேட்பாளர் மோடி என்ற புள்ளியில் பாஜகவுடன் இருந்து ஓ பன்னீர் செல்வத்தை வீழ்த்தி விட எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார். இதனால் தான் ஓ பன்னீர் செல்வம் விஷயத்தில் முட்டுக்கட்டை போடுகிறார்கள். 2024ல் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் சமமாக வாக்கு ஈர்ப்பாளராக உள்ளனர்.மக்களவை தேர்தல் என்பது பிரதமர் மோடியை மையமாக வைத்து தான் உள்ளது. இதில் எடப்பாடி பழனிச்சாமி ரிஸ்க் எடுத்தால் மோசம் போகலாம்'' என்றார்.












Click it and Unblock the Notifications