விஜயகாந்துக்கு என்ன ஆனது? எப்படி இருக்கிறார்? விஷயம் கேட்டதும் தமிழ்நாடு முழுக்க நடந்த சம்பவம்! ப்பா
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவருக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு அவ்வப்போது இப்படி உடல்நிலை மோசமானது வழக்கம்.

இதற்காக அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதும் வழக்கம். ஆனால் இந்த முறை அவரின் உடல்நிலை மிகவும் நலிவுற்றதாக கூறப்படுகிறது.
விஜயகாந்த் உடல்நிலை; விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ரத்த கொதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை மோசமாகி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கியமாக நுரையீரல் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ள மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது, என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு முழுக்க நடந்த சம்பவம்: அவருக்கு உடல்நிலை மோசமாகி உள்ள நிலையில் தமிழ்நாடு முழுக்க நடந்த சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாடு முழுக்க உள்ள முக்கியமான கோவில்களில் அவருக்காக பிரார்த்தனை நேற்றும், இன்றும் நடத்தப்பட்டது.
சென்னை, கோவை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, திருவாரூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற முக்கியமான மாவட்டங்களில் அவருக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது. விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவருக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு இடையே அவருக்கு தீவிரமாக பிரார்த்தனை செய்யப்பட்டது.
அவரின் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள், அவரால் பயன் அடைந்தவர்கள் என்று பலர் சிறப்பு பரிகார பூஜை, பிரார்த்தனை, அர்ச்சனை செய்தனர். அவர் உடனடியாக உடல் சரியாகி திரும்பி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.

பிரார்த்தனை: விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரின் உடல்நிலையை பல அரசியல் தலைவர்கள் விசாரித்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூட அவரின் உடல்நிலையை விசாரித்துவிட்டார். சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விஜயகாந்த் உடல்நிலையை நேரில் கண்காணித்து வருகிறார்.
அவருக்காக பலர் கோவில்களில் சென்று பாலபிஷேகம் உட்பட பல இடங்களில் உடனடியாக உடல் சரியாகி திரும்பி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் விஜயகாந்த் உடல்நிலையை பற்றி அவரின் குடும்பத்தினரிடம் விசாரித்ததோடு அவர் உடனே குணமடைய வேண்டும் என்று வேண்டியுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications