தலைவர் நீக்க மாட்டார்.. நம்பிக்கையா பேசுனாங்களே காயத்ரி.. ஆக்சன் எடுத்த அண்ணாமலை.. ஓ இதான் காரணமா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு உள்ளார். தற்போது அப்பதவிக்கு பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாஜகவில் எதிர்பார்த்தபடியே கட்சி நிர்வாகிகள் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் முதல் கட்டமாக பல்வேறு நிர்வாகிகள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது மாவட்ட பார்வையாளர்கள், துணை தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த புதிய பாஜக மாநில புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார் இன்று மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் புதிதாக 20 மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நியமனம்

நியமனம்

அதேபோல் 59 மாவட்ட தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 420 பொறுப்புகள் பாஜகவில் ஒவ்வொரு 3 ஆண்டுங்களுக்கும் மாற்றப்படும். அதன் அடிப்படையில்தான் இந்த முறையும் மாற்றம் நிகழ்ந்து உள்ளது. இதில் முழுக்க முழுக்க அண்ணாமலை ஆதரவாளர்களுக்குத்தான் அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதோடு மற்ற மூத்த நிர்வாகிகளுக்கான நியமனம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இன்று அறிவிப்பு

இன்று அறிவிப்பு

அதன்படியே புதிய பாஜக மாநில புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார் இன்று மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மாநில துணைத் தலைவர்களாக வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக மாநிலச் பார்வையாளர்களாக கராத்தே தியாகராஜன், எஸ்.ஜி.சூர்யா, சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக மாநில பொருளாளராக எஸ்.ஆர்.சேகர் தொடர்கிறார்; இணைப் பொருளாளராக எம்.சிவசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நீக்கம்

நீக்கம்

கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு உள்ளார். தற்போது அப்பதவிக்கு பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக பாஜகவின் கலை கலாச்சார பிரிவினுடைய மாநில தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம், தனது அணி நிர்வாகிகள் சிலரை நீக்கினார். அண்ணாமலை அனுமதி இல்லாமல் இவர்களை நீக்கியதாக கூறப்பட்டது. மேலும் அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமித்தது உத்தரவிட்டார்.

 காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

இபப்டி தன்னிச்சையாக காயத்ரி ரகுராம் செயல்பட்டது பெரிய சர்ச்சையானது. காயத்திரியின் இந்த அறிவிப்பு செல்லாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார். பழைய நிர்வாகிகளே தொடர்ந்து நீடிப்பார்கள் எனவும் அண்ணாமலை தெரிவித்தார். பொதுவாக நிர்வாகிகளை நீக்க, சேர்க்க மாநில தலைவர் ஒப்புதல் அளித்து, பின்னர் தேசிய தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் காயத்ரி தன்னிசையாக தன்னுடைய லெட்டர் பேடில் இப்படி அறிவித்தது சர்ச்சையானது.

 அண்ணாமலை

அண்ணாமலை

அவரின் செயலை தடுக்கும் வகையில் அண்ணாமலை இந்த நிர்வாகிகளை மீண்டும் நியமனம் செய்தார். அப்போதே இவர்களுக்குள் கசப்பு, மோதல் என்றெல்லாம் செய்திகள் வந்தன. இதையடுத்தே காயத்ரியை அண்ணாமலை நீக்க போவதாக செய்திகள் வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த செய்திகள் தீவிரமாக இணையத்தில் பரவின. ஆனால் காயத்ரி இதை மறுத்தார். என்னை பதவியில் இருந்து நீக்குவது பற்றி பாஜக நினைக்கவில்லை எங்கள் தலைவர் என்னை நீக்க மாட்டார்.

 மறுப்பு

மறுப்பு

கடினமாக உழைத்தவர்களுக்கு பதவி உயர்வு மட்டுமே பாஜக தருகிறது. பாஜக எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. இது பாரத தாய் பூமி எனவே பெண்கள் எப்போதும் வழி நடத்துவார்கள், என்று கூறினார். தான் பதவியில் நீடிப்போம் என்ற நம்பிக்கையோடு காயத்ரி இப்படி குறிப்பிட்டு இருந்தார். ஆனால் தற்போது கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு உள்ளார். தற்போது அப்பதவிக்கு பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+