சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீர்ன்னு என்னாச்சு?.. அடுத்தடுத்த 3 மீட்டிங்.. முதல்வர் ஸ்டாலினின் தனி தனி "அசைன்மெண்ட்".. பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அடுத்தடுத்து முக்கியமான மூன்று மீட்டிங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் 2 மீட்டிங் ஏற்கனவே முடிந்துள்ள நிலையில் இன்னொரு மீட்டிங் விரைவில் நடக்க உள்ளது.

Recommended Video

    DGP Kandasamy உடன் 1 மணிநேர மீட்டிங்.. CM Stalin இடம் கொடுக்கப்பட்ட கோப்பு.. பரபரப்பு தகவல்கள்

    தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்ற பின் முழுக்க முழுக்க கொரோனா தடுப்பு பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். தற்போது கொரோனா கேஸ்கள் கொஞ்சம் சரிவை சந்தித்து உள்ள நிலையில், பொருளாதாரத்தை மீட்கும் பணிகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது.

    முக்கியமாக பல்வேறு வாக்குறுதிகளையே நிறைவேற்றுவது, முதலீடுகளை ஈர்ப்பது, நீட் தேர்வு தடை போன்ற விஷயங்கள் மீது தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    ஸ்டாலின் செம அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மூழ்கிய விவசாயிகள்.. முதல்வரை புகழ்ந்து.. உற்சாக கொண்டாட்டம்! ஸ்டாலின் செம அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மூழ்கிய விவசாயிகள்.. முதல்வரை புகழ்ந்து.. உற்சாக கொண்டாட்டம்!

    மீட்டிங்

    மீட்டிங்

    இதுகுறித்து ஆலோசனை செய்வதற்காக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 2 முக்கியமான மீட்டிங்குகளை நடத்தினார். இன்னொரு மீட்டிங்கை நடத்த உள்ளார். கடந்த 21ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திமுக எம்எல்ஏக்களுடன் முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் எம்எல்ஏக்களின் ஒரு மாத செயல்பாடு குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.

     முதல்வர் கேள்வி

    முதல்வர் கேள்வி

    இந்த மீட்டிங்கில் எம்எல்ஏக்களுக்கு முக்கியமான டாஸ்க் கொடுத்த முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணி குறித்து மாதம்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஒரு மாதத்தில் செய்தது என்ன, அதற்கு மக்கள் அளித்த ரெஸ்பான்ஸ் என்ன, மக்கள் வைக்கும் கோரிக்கை என்ன, தொகுதியில் நிலவும் பிரச்சனை என்ன என்பதை எல்லாம் பட்டியலியிட்டு மாதம் ஒருமுறை கண்டிப்பாக ரிப்போர்ட் கொடுக்க வேண்டும்.

    தேர்தல்

    தேர்தல்

    கொரோனா காலமாக இருந்தாலும் ஒரு பக்கம் தடுப்பு நடவடிக்கை, இன்னொரு பக்கம் தொகுதியை மேம்படுத்துவதில் முழு கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பாக மாத மாதம் ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில், நேற்று திடீரென அமைச்சர்களை முதல்வர் சந்தித்தார். எம்எல்ஏக்களுக்கு ஒரு வித டாஸ்க் கொடுத்துள்ள நிலையில், அமைச்சர்களுக்கு கூடுதல் டாஸ்க் ஒன்றை கொடுத்தார்.

    என்ன

    என்ன

    அதன்படி நேற்று மாலை 6 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள 10வது மாடியின் கூட்ட அரங்கில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் வகையில் அமைச்சர்கள் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உங்கள் துறையில் இருக்கும் தொழில் அதிபர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் உடன் பேசுங்கள்.

    அழைப்பு

    அழைப்பு

    தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுங்கள். தமிழ்நாட்டில் எளிதாக தொழில்களை செய்யலாம், சலுகைகளை அரசு கொடுக்கும் என்று அழைப்பு விடுங்கள். உங்கள் துறையில் அவ்வளவு முதலீட்டை ஈர்க்க முடியுமோ அவ்வளவு முதலீடுகளை ஈர்க்க வேண்டும். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் பல்வேறு முதலீடுகளை ஈர்த்திருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

     இன்னொரு மீட்டிங்

    இன்னொரு மீட்டிங்

    இப்படி இரண்டு மீட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்னொரு மீட்டிங் நடக்க உள்ளது. திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் ஜூன் 26ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்ட பகுதிகளுக்குத் இன்னும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

    தேர்தல்

    தேர்தல்

    செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் ஜூன் 26ஆம் நடக்க உள்ளது. தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும், உள்ளூர் அளவில் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட உள்ளார். மூன்று தனி தனி டாஸ்க்குகளை ,மையமாக வைத்து அடுத்தடுத்து இந்த மீட்டிங்குகள் நடந்த வருகின்றன.

    English summary
    Why is Tamilnadu CM M K Stalin holding one-by-one DMK party meetings with Ministers and Sectrataries?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X