"ஆடியோ".. பிடிஆர் சர்ச்சையில் ஸ்டாலின் அப்படி சொன்னது ஏன்? என்னது அண்ணாமலையா? நேரடி அட்டாக்!
சென்னை: அமைச்சர் பிடிஆர் ஆடியோ தொடர்பான சர்ச்சைகளை மட்டமான அரசியல் என்று முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கி தள்ளி உள்ளார். ஸ்டாலினின் இந்த நிலைப்பாடு குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பேட்டி அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ என்று ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது. திமுகவினர் மீதே குற்றச்சாட்டு வைக்கும் விதமாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.

இந்த ஆடியோவில் உண்மைத்தன்மை அறியப்படவில்லை. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இன்னொரு ஆடியோவும் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த இரண்டு ஆடியோக்களின் உண்மைத்தன்மை தெரியவில்லை. அமைச்சர் பிடிஆர் இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது, பொய்யானது என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று வெளியான ஆடியோ குறித்து பிடிஆர் விளக்கி உள்ளார். ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பொய்யான வீடியோக்களை வெளியிட்டு பிடிஆர் அளித்துள்ள விளக்கத்தில், இது தன்னுடைய குரல் இல்லை என்று அவர் விளக்கம் அளித்து உள்ளார்.
விளக்கம்
இந்த சர்ச்சைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று முற்றுப்புள்ளி வைத்தார். இன்று உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்கையில், பிடிஆர் ஆடியோ குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், இந்த ஆடியோ குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே இரண்டு முறை விளக்கம் அளித்துவிட்டார். இந்த மட்டமான ஆடியோ அரசியல் பற்றி நான் பேச விரும்பவில்லை.
மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மட்டமான அரசியல் செய்யும் நபராளுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை, என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
மொத்தமாக பிடிஆர் குறித்த சர்ச்சைகள், ஆடியோக்கள் அனைத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் இந்த வீடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.
பேட்டி
ஸ்டாலினின் இந்த நிலைப்பாடு குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், அமைச்சர் பிடிஆரை முதல்வர் ஸ்டாலின் பாதுகாக்கிறார் என்று சொல்ல முடியாது. பிடிஆர் நினைத்து இருந்தால் போலீசில் புகார் கொடுத்து இருக்கலாம். அவர் புகாரும் கொடுக்கவில்லை. அமைச்சராகவும் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்.
இப்போது திமுக பைல்ஸ் வெளியான இந்த சூழலில் அமைச்சரின் இந்த ஆடியோ பெரிய சர்ச்சையாகி உள்ளது. அமைச்சர் பேசியது உண்மையா, பொய்யா என்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டது என்று கூற முடியாது.

திமுகவிற்கு சங்கடம் உண்டாக்கும் விஷயம் இது. பொதுவெளியில் இதை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். கட்சிக்கும், ஆட்சிக்கும் பெரிய டேமேஜை இது ஏற்படுத்தும். தான் ஒரிஜினலை வெளியிடுவேன் என்று அண்ணாமலை கூறி உள்ளார்.
பிடிஆர் நினைத்து இருந்தால் வழக்கு தொடுத்து இருக்கலாம். நோட்டீஸ் அனுப்பி இருக்கலாம். அவர் புகாரும் கொடுக்க மாட்டேன்.. அமைச்சரவையிலும் தொடர்வேன் என்றால் அது தவறு தானே? இந்த ஆடியோவால் முதல்வருக்கு தர்மசங்கடம்.
அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினாலும் சிக்கல்.. அமைச்சரவையில் வைத்துக்கொண்டாலும் சிக்கல். இதனால் சங்கடமான சூழ்நிலை முதல்வருக்கு ஏற்பட்டு உள்ளது. அவரை தூக்கினால் அவர் பேசியது உண்மை என்று ஆகிவிடும், அவரை தூக்கவில்லை என்றால், நடவடிக்கை இல்லை என்று ஆகிவிடும்.
அதனால் அதை பற்றி பேசாமல் மட்டமான அரசியல் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். அண்ணாமலை பேசுவது மட்டமான அரசியல்தான். அதைதான் ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். அண்ணாமலை பெயரை சொல்லாமல் அவரை அட்டாக் செய்துள்ளார் ஸ்டாலின். இந்த ஆடியோ பொய் என்றால் எஸ்ஐடி போட்டு விசாரணை நடத்தி இருக்கலாம்.
அண்ணாமலை ஆடியோ, வீடியோ அரசியல் செய்கிறார். அண்ணாமலை என்றாலே ஆடியோ, வீடியோ அரசியல்தான் என்று பெயர் வந்துவிட்டது. அதை மொத்தமாக மட்டமான அரசியல் என்று ஸ்டாலின் அடித்து உடைத்து உள்ளார்.
இதை பெரிதாக்க கூடாது. அப்படியே விட்டுவிடலாம் என்று ஸ்டாலின் நினைத்து இருக்கலாம். இதை எல்லாம் பெரிதாக்க வேண்டாம்.. ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்று பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
-
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications