சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவருக்கு எம்பி பதவியா? போச்சே போச்சே.. அவசரமாக வேலையில் இறங்கிய திமுக "அமைச்சர்".. இனிதான் கச்சேரி!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக சார்பாக ராஜ்ய சபா எம்பி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக மூத்த அமைச்சர் ஒருவர் முக்கியமான வேலைகள் சிலவற்றில் இறங்கி உள்ளதாக உடன் பிறப்புகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக அமைச்சரின் அந்த செய்தியை பற்றி பார்க்கும் முன் ஒரு பிளாஷ்பேக்.. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் ராஜேந்திரன். கடந்த சில மாதங்களுக்கு முன் ராஜேந்திரனை அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் தனது வீட்டிற்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

அடுத்த 3 மணி நேரத்தில்.. சென்னை உள்பட 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. நீங்க எந்த ஊரு! அடுத்த 3 மணி நேரத்தில்.. சென்னை உள்பட 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. நீங்க எந்த ஊரு!

இதையடுத்து அமைச்சர் வீட்டிற்கு சென்ற ராஜேந்திரனை, அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஜாதி ரீதியாக குற்றஞ்சாட்டியதாக புகார் எழுந்துள்ளது.

மோதல்

மோதல்

அப்போது இந்த மோதல் பெரிதாக உருவெடுக்க.. போக்குவரத்து துறையில் இருந்து ராஜகண்ணப்பன் மாற்றப்பட்டார். போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், அமைச்சர் கடந்த ஞாயிற்றுக்கிழமை என்னை வீட்டிற்கு வர சொன்னார். அவரை பார்க்கக் வீட்டிற்கு சென்ற போது.. அவருக்கு மரியாதை செய்தும் அவர் என்னை ஜாதி சொல்லி திட்டினார். எஸ்சி.. எஸ்சி என்று சொல்லி மீண்டும் மீண்டும் திட்டினார், என்று அப்போது பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மோதலுக்கு அப்போது காரணமாக இருந்தவர் அதிமுகவை சேர்ந்த தருமன்.

தருமன் அதிமுக என்ட்ரி

தருமன் அதிமுக என்ட்ரி

அப்பகுதி ஒன்றிய சேர்மனாக இருப்பவர்தான் அதிமுகவின் தருமன். முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக இருக்கும் ராஜேந்திரன், தருமனுக்கு மிகவும் நெருக்கம். திமுகவின் ராஜகண்ணப்பன் இங்கு எம்எல்ஏ ஆகி, அமைச்சரானாலும் , ராஜேந்திர அவரின் உத்தரவுகளை மதிக்காமல் தருமன் உத்தரவை அங்கு இருக்கும் ஒன்றிய அலுவலர்கள் பலர் கேட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜேந்திரனும் தருமன் சொல்வதை மட்டுமே கேட்டதாக கூறப்படுகிறது.

கோபம்

கோபம்

இந்த கோபத்தில்தான் ராஜகண்ணப்பன் ராஜேந்திரனை அழைத்து திட்டி சர்ச்சையில் சிக்கினார். தற்போது அதே தருமன்தான் அதிமுக மூலம் எம்பி ஆகிறார். இதனால் ராஜகண்ணப்பன் தரப்பு கடும் அப்செட்டில் இருக்கிறதாம், இவர் சேர்மேன் பதவியில் இருந்த போதே எல்லோரையும் கட்டுப்படுத்தினாரே.. இப்போது எம்பி ஆனால் இன்னும் சிக்கலாகிவிடுமே என்று அமைச்சர் தரப்பு அப்செட்டில் இருக்கிறதாம். அதோடு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதவியே சிக்கலில் இருக்கிறது.

அமைச்சரவை மாற்றம்

அமைச்சரவை மாற்றம்

அமைச்சரவை மாற்றம் நடந்தால் ராஜகண்ணப்பன் பதவியில் இருப்பதே சந்தேகம்தான் என்கிறார்கள். இதனால் தருமன் எம்பி ஆகும் நிலையில் சேர்மேன் பதவியை திமுகவை பெற வைக்க ராஜகண்ணப்பன் காய் நகர்த்தி வருகிறாராம். தருமன் எம்பி ஆனால் முதுகுளத்தூர் ஒன்றியத்தில் அதிமுக கவுன்சிலர் பலம் 3 ஆக குறையும். திமுக பலம் 4 ஆக இருக்கும். சுயேட்சைகள் பலம் 7 ஆக இருக்கும். இதனால் ராஜகண்ணப்பன் சுயேட்சைகளின் உதவியுடன் திமுக கவுன்சிலரை சேர்மேன் ஆக்க முயல்வார் என்கிறார்கள்.

அமைச்சரவை மாற்றம்

அமைச்சரவை மாற்றம்

பெரும்பாலும் ஜூன் - ஜூலை மாதத்தில் அமைச்சரவை மாற்றம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக சேர்மன் பதவியை எப்படியவாது திமுகவிற்கு கொண்டு வர ராஜகண்ணப்பன் காய் நகர்த்துவார் என்கிறார்கள். இதன் மூலம் தலைமையிடம் மீண்டும் நல்ல பெயர் எடுக்க முடியும் என்று அவர் நினைக்கிறாராம். அதோடு தருமன் அதிகாரத்தை ஒன்றியத்தில் குறைக்கவும் இது வழியாக இருக்கும் என்று ராஜகண்ணப்பன் தரப்பு நினைக்கிறதாம்.

English summary
Why is DMK minister not happy with AIADMK Dharman becoming MP for Rajya Sabha?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X