சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"2 பேரை தூக்கறோம்".. யாரு நயினாரா? திமுகவிலா?.. மேடையில் ஒரே பூரிப்பு.. டக்கென திரும்பிய பாஜக

பாஜகவின் நயினார் நாகேந்திரன் திமுகவில் இணைய போகிறாரா என்ற டவுட் கிளம்பி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: நயினார் நாகேந்திரன், நெல்லையில் பேசிய பேச்சு, திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளிடம் குழப்பத்தை தந்து வருகிறது.. அத்துடன் சோஷியல் மீடியாவில் விவாதத்தையும் கிளப்பி வருகிறது
யாராக இருந்தாலும், அதிருப்தி காரணமாகவே ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு செல்வார்கள்.. ஆனால் இன்னொரு கட்சிக்கு சென்றும் அதிருப்தியிலேயே இருக்கிறார்கள் என்று முணுமுணுக்கப்படுபவர்கள் 2 நபர்கள்.

ஒருவர் திமுகவில் இருந்து பாஜகவுக்கு போன விபி துரைசாமி, மற்றொருவர், அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு போன நயினார் நாகேந்திரன்.

ஒரே குரூப் தானா? 6 திருமணம் செய்து மோசடி! அதிகாலையில் எஸ்கேப்பான சந்தியா! இதான் இவங்களுக்கு வேலையே! ஒரே குரூப் தானா? 6 திருமணம் செய்து மோசடி! அதிகாலையில் எஸ்கேப்பான சந்தியா! இதான் இவங்களுக்கு வேலையே!

தர்மசங்கடங்கள்

தர்மசங்கடங்கள்

இவர்கள் இருவருமே அரசியலில் சீனியர்கள்.. மூத்த தலைவர்கள்.. இதில், நயினாரை பொறுத்தவரை, அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தவர்.. எடுத்த எடுப்பிலேயே துணைத்தலைவர் பதவியை தந்தது பாஜக.. எம்பி தேர்தலிலும் சீட் கொடுத்தது. ஆனால் நயினாருக்கோ, மாநில தலைமை பதவி காலியாக இருந்தபோது, அதன் மீது ஒரு கண் இருந்ததாகவும், குறிப்பாக, நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு இடையேதான் பலத்த போட்டியே இருந்ததாகவும் அப்போது சலசலக்கப்பட்டது.

 DRAVIDIAN STOCK

DRAVIDIAN STOCK

பிறகு நிர்வாகிகள் மாற்றத்திலாவது தனக்கு பெரிய பொறுப்பு அதாவது பொதுச்செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.. ஆனால், அதிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. பிறகு பாஜக சட்டமன்ற குழு தலைவர் பதவியை நயினாருக்கு தந்தது என்றாலும், பாஜகவின் கொள்கை, கோட்பாடுகள் நயினாருக்கும் நெருடலை தந்து வருவதாக சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, நீட் விவகாரத்தில்கூட, தமிழக மக்களின் ஆதரவுக்கு குரல் என்றுதான் நயினார் பேசியிருந்தார்.. இப்படி பேசியதுகூட, பாஜக மீதான தன்னுடைய அதிருப்தியின் வெளிப்படாகவே பார்க்கப்பட்டது.

 நிறம் மாறும் நயினார்?

நிறம் மாறும் நயினார்?

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் முன்பு நயினார் பேசிய பேச்சினால், தமிழக அரசியல் கட்சிகள் குழம்பி போய்விட்டன.. "தமிழக முதல்வர் நெல்லைக்கு அடிக்கடி வரவேண்டும். முதல்வரின் வருகையால் அனைத்து சாலைகளும் நிச்சயமாக வேலை பார்க்கப்படுகிறது, பழுதுபார்க்கப்படுகிறது. இதனால் எங்களுக்கு எல்லாம் சந்தோஷமாக இருக்கிறது. எனவே முதல்வர் அடிக்கடி வந்து நிறைய நலத்திட்டங்களை எங்களுக்கு தர வேண்டும்" என்று நயினார் நாகேந்திரன் பேசியிருந்தார். நயினார் பேசியதை ஸ்டாலினும் உற்று கவனித்து கொண்டிருந்தார்.

 2 எம்எல்ஏக்கள்

2 எம்எல்ஏக்கள்

திமுகவுக்கு நயினார் தலைமையில் ஆதரவுகள் தரப்போகிறார்களா? திமுக பக்கம் நயினார் நாகேந்திரன் தாவப்போகிறாரா? என்றெல்லாம் மீண்டும் சந்தேகங்களும், யூகங்களும் கிளம்பின.. இதற்கு பிறகு இந்த பரபரப்பு அடங்கிவிட்டது.. இன்று நெல்லை அரசு மருத்துவமனையில் நடந்த விழா ஒன்றில் மீண்டும் திமுகவை பாராட்டி உள்ளார் நயினார் நாகேந்திரன்.. அப்போது, "மா.சுப்ரமணியன் அன்று என்னை தொடர்பு கொண்டார். அப்போது அவர் விரைவில் திருநெல்வேலி வருகிறேன்... அப்போது உங்கள் கோரிக்கை குறித்த உத்தரவை போடுவோம்" என்றார்.. ஒரு செயலை செய்கின்றபோது எந்த கட்சியாக இருந்தாலும் எந்த ஆட்சியாக இருந்தாலும் பாராட்ட வேண்டும்... அதனால், அமைச்சர், முதல்வரை நான் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

 நயினாரா?

நயினாரா?

அன்று நயினார் பேசியதும் சரி, இன்று நயினார் பேசியதும் சரி, பாஜக தலைமையின் காதுக்கு சென்றுள்ளதாம். அதுமட்டுமல்ல, நெல்லை மாவட்டத்தில் எந்த அரசு விழா என்றாலும், நயினார் நாகேந்திரன் இப்போதெல்லாம் கரெக்ட்டாக ஆஜர் ஆகிவிடுகிறாராம்.. அதுமட்டுமல்ல, கூட்டணி கட்சியின் ஒருசில கோரிக்கைகள் இன்னமும் நிலுவையில் உள்ளபோது, நயினார் வைத்த கோரிக்கை மட்டும் உடனே நிறைவேற்றிவிடுகிறதாம் திமுக தரப்பு.. இதையும் பாஜக கவனத்தில் கொண்டு வருகிறது.

 தூக்க போறோம்

தூக்க போறோம்

சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார், பாஜக எம்எல்ஏக்கள் 2 பேரை தூக்க போறோம் என்று ட்விட் பதிவிட்டிருந்தது, மிகப்பெரிய சலசலப்பை அப்போது ஏற்படுத்தியது.. யார் அந்த 2 பேர் என்ற குழப்பம் ஏற்பட்ட நிலையில், முதல் பெயரே நயினாராக இருக்குமோ? என்ற சந்தேகம்தான் அதிகமானது.. ஆனால், அப்படி ஒரு நிகழ்வு எதுவுமே நடக்கவில்லை.. அதற்கு பிறகு, நெல்லையிலும் இதே போல பேச்சு வந்துபோனது, இப்போதும் அதே போல பேச்சு வந்துள்ளது.. செந்தில்குமார் சொன்ன அந்த 2 பேர் யார் என்று இதுவரை தெரியாவிட்டாலும், ஒவ்வொரு முறையும் நயினாரின் பெயரும் மீடியாவில் அடிபட்டு கொண்டே வருவதை சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.

 அரசியல் நாகரீகம்

அரசியல் நாகரீகம்

ஆனால், இதை அரசியல் நோக்கர்கள் வேறு விதமாக பார்க்கிறார்கள்.. பொதுவாக ஒரு கட்சி தலைவரை, மேடையில் உள்ள மாற்று கட்சியில் இருப்பவர்கள் மதித்து போற்றுவது வழக்கம்.. அன்று 1957-ல் அண்ணா முதல்முறையாக எம்எல்ஏவாக இருந்தபோது, தன்னுடைய காஞ்சிபுரம் தொகுதிக்கான கோரிக்கைகளை முன்வைத்து, தண்டலத்தில் கூட்டம் நடத்தி, அந்த கூட்டத்துக்கு முதல்வர் காமராஜரை அழைத்து, கோரிக்கைகளை தந்து, நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டார்.. அதனால், பொதுநிகழ்ச்சியில் பங்கெடுக்ககும்போது, இப்படி தலைவர்களிடம் கோரிக்கைகள் தருவதும், அதை நிறைவேற்றியதற்கு நன்றி சொல்வதும் நம்முடைய தமிழக அரசியலில் தொடர்ந்து இருந்தே வருகிறது. இதையெல்லாம் அரசியலாக்க பார்க்க தேவையில்லை என்கிறார்கள்..

English summary
Why is Nayanar Nagendran praising DMK and Will he join DMK soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X