அமித் ஷா செய்த தவறு? தமிழிசையிடம் நடந்து கொண்ட விதம்.. அப்படியே எதிராக திரும்புதே? ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை நடத்திய விதம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் பாஜகவிற்கே எதிராக தமிழ்நாட்டில் திரும்ப தொடங்கி உள்ளது.

முன்னதாக லோக்சபா தேர்தலின் போது தமிழரான ஒடிசா விகே பாண்டியனை பாஜக கடுமையாக விமர்சனம் செய்தது. ஒடிசாவில் பிரதமர் மோடி பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தமிழ்நாட்டை சேர்ந்த விகே பாண்டியனை பாஜகவின் டாப் தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்தனர். ஒடிசாவில் நடந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி திடீரென தமிழ்நாட்டை தாக்கி பேசிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

lok sabha election 2024 tamilisai soundrarajan amit shah 2024

முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும், தமிழ்நாட்டை சேர்ந்த பிஜேடியின் முக்கிய தேர்தல் வியூகவாதியுமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனை மறைமுகமாக விமர்சித்த மோடி, பூரி ஜெகநாதர் கோவிலின் ரத்தின பண்டரின் (புதையல்) சாவியை அவர் தமிழ்நாட்டிற்கு எடுத்துக்கொண்டு போய்விட்டார். இங்கே இருக்க வேண்டிய சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது.

நமது சொந்த வீட்டின் சாவி கிடைக்காதபோது, ​​ஜெகநாதரை வேண்டிக்கொள்கிறோம், சாவியைக் கண்டுபிடிக்க அவரது வேண்டுதலை பெறுகிறோம்... ஆனால் அப்படிப்பட்ட கோவிலின் ரத்ன பண்டரின் சாவிகள் ஆறு ஆண்டுகளாக காணவில்லை. நாம் எங்கே போய் முறையிடுவது. ஸ்ரீ ரத்ன பண்டரின் சாவி தமிழகத்திற்குப் போய்விட்டதாக மக்கள் சொல்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு அனுப்பியது யார்?

விகே பாண்டியன் விமர்சனம்: இங்குள்ள விவசாயிகள் பிரச்சனையில் உள்ளனர். இளைஞர்கள் வேலைக்காக பிற மாநிலங்களுக்குச் செல்கின்றனர். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. கனிம வளங்கள் அதிகம் இருந்தும், இடம்பெயர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வளவு வளங்கள் இருந்தும் இங்குள்ள மக்கள் ஏன் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்? ஒடிசாவின் நிலையைப் பார்த்து நான் வேதனையடைந்தேன்.

ஒடிசாவின் வருந்தத்தக்க நிலைமைக்கு யார் பொறுப்பு? சில ஊழல்வாதிகளின் கட்டுப்பாட்டில் பிஜேடி அரசு உள்ளது. ஒரு சில ஊழல்வாதிகள் முதல்வர் அலுவலகம் மற்றும் இல்லத்தை ஆக்கிரமித்துள்ளனர். பிஜேடியின் சிறு தொழிலாளர்கள் இப்போது கோடீஸ்வரர்களாகிவிட்டனர், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்

எதிராக திரும்பும்; ஒடிசாவில் பிரதமர் மோடி பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தமிழ்நாட்டை சேர்ந்த விகே பாண்டியனை விமர்சனம் செய்தது அந்த கட்சிக்கே எதிராக திரும்பும் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடக்கும் போது பாஜகவை இது கண்டிப்பாக தமிழ்நாட்டில் பாதிக்கும்.

தமிழிசை: இப்படிப்பட்ட நிலையில்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை நடத்திய விதம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் பாஜகவிற்கே எதிராக தமிழ்நாட்டில் திரும்ப தொடங்கி உள்ளது.

தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை மற்றும் தமிழிசை இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பாஜக நிலைக்குழு உறுப்பினரான பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோரிடம் கட்சி மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணாமலை - தமிழிசை ஆதரவாளர்கள் இடையே மோதல் நீடிப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அமித் ஷா கண்டிப்பு; இதற்கு இடையில் இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவி ஏற்பு விழாவின் போது தமிழிசை சௌந்தரராஜனிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் வீடியோ இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக தற்போது திமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழிசையை அழைத்து கண்டிப்பது போல கையால் சைகையை காட்டுகிறார். இதற்கு தமிழிசை பதில் அளிக்கும் போது அதை ஏற்றுக்கொள்ளாமல் தமிழிசையை கண்டிக்கும் விதமாக அமித் ஷா மறுத்து பேசுகிறார்.

விமர்சனம்: இந்த விவகாரத்தில் இரண்டு விதமான கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. ஒன்று அண்ணாமலைக்கு ஆதரவானவர்கள்.. தமிழிசையை கடுமையாக கேலி செய்கின்றனர். உங்களுக்கு இதெல்லாம் தேவை. நீங்கள் பேசியதற்கு இப்போ பாருங்கள் பதிலடி கொடுத்துட்டாங்க.

உங்களுக்கு இதெல்லாம் தேவைதான். இனிமேல் தலைவரை பற்றி பேசவேண்டாம் என்று கூறி வருகின்றனர். இன்னொரு பக்கம் தமிழிசை ஆதரவாளர்கள், நாடார் சங்கங்கள்.. தமிழிசையை அவமானப்படுத்திவிட்டார்கள். ஒரு தமிழ் பெண்ணை.. நாடார் பெண்ணை அசிங்கப்படுத்திவிட்டார்கள்.

வடஇந்திய அரசியல் தலைவர்களை அமித் ஷா இப்படி கண்டிக்க முடியுமா? அவரால் ஸ்மிரிதி இராணியிடம் இப்படி பேச முடியுமா? ஆளுநராக இருந்த பெண்ணை.. தமிழ்நாடு பாஜகவிற்காக உழைத்த ஒரு பெண்ணை இப்படி நடத்துவது சரியா என்று விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+