Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மெட்ரோ மற்றும் பறக்கும் ரயில் இணைப்பு இழுபறியாக இருப்பது ஏன்? வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (MRTS) என்று அழைக்கப்படும் பறக்கும் ரயில் திட்டத்தை, சென்னை மெட்ரோ ரயில் நெட்வொர்க்குடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வருகிறது. ஏனெனில் இந்திய ரயில்வே வாரியம் இன்னும் கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கவில்லை என்று சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் (CUMTA) மூத்த அதிகாரிகள் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.

தமிழக அரசால் 60% நிதியுதவியுடன் பறக்கும் ரயில் திட்டம் (மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம்) தொடங்கப்பட்டது. இந்தப் பாதை பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வழியாகச் செல்கிறது. கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரையிலான இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.

Why is the Chennai Metro and MRTS connection a drag

MRTS என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த பறக்கும் ரயில் பாதை என்பது, உயர்மட்ட ரயில் பாதைகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தரைத்தளம் வணிக நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டிருந்தது.. இந்த இடத்தை வணிகமயமாக்குவதன் மூலம் கிடைக்கும் வாடகை தெற்கு ரயில்வேக்கு நிலையான போக்குவரத்து வசதியை மக்களுக்கு வழங்கும் என்ற நம்பிக்கை இருந்தது. மேலும் இந்த திட்டத்தினை விரிவாக்கம் செய்ய இந்த காலியிடங்கள் பயன்படும் என்று நம்பப்பட்டது.

பறக்கும் ரயில் சேவையை பொறுத்தவரை முதலில் திருமயிலை வரையிலும் பின்னர் திருவான்மியூர் வரையிலும் இறுதியாக வேளச்சேரி வரையிலும் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் பறக்கும் ரயில் பாதை தொடங்கும் சிந்தாதிரிப்பேட்டை தொடங்கி வேளச்சேரி முக்கிய இடங்களில் உள்ள நிலையங்களில் கிடைக்கும் பெரிய இடம் காலியாகவே உள்ளது. பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி வேளச்சேரி முதல் பரங்கிமலை உள்ள வழித்தடத்தில் 95 சதவீத பணிகள் முடிந்த போதிலும் இன்று வரை பணிகள் முடியவில்லை.. இன்னும் எத்தனை வருடங்கள் ஆகும் என்பதை தெற்கு ரயில்வே அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இதனிடையே பறக்கும் ரயில் திட்டத்தை, சென்னை மெட்ரோ ரயில் நெட்வொர்க்குடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வருகிறது. எனினும் இந்திய ரயில்வே வாரியம் இன்னும் கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கவில்லை என்று சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் (CUMTA) மூத்த அதிகாரிகள் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினர். கடந்த ஜனவரி மாதத்திற்குள் ஒப்புதல் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டத்தை பொறுத்தவரை தினமும் 4.25 லட்சம் பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் இருக்கிறது. ஆனால் தற்போது மோசமான பராமரிப்பு, குறைவான பயணிகள் மற்றும் அதிகரித்து வரும் நிதி இழப்பு காரணமாக பரிதவித்து வருகிறது. சென்னை மெட்ரோ மற்றும் எம்ஆர்டிஎஸ் இணைப்புப் பேச்சுவார்த்தைக்கு முன்பு பறக்கும் ரயில் திட்டம் ரூ.84.1 கோடி பற்றாக்குறையை சந்தித்துவந்தது. கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டத்தை பொறுத்தவரை குறைந்த கட்டண வருவாய் மற்றும் அதிக இயக்கச் செலவுகள், இதில் செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் பணியாளர்களுக்காக ஆண்டுதோறும் ரூ.101 கோடிக்கும் மேல் செலவாகிறது.
டிக்கெட் விற்பனையிலிருந்து கிடைக்கும் வருவாய் ரூ.18 கோடி தான்.

தற்போதைய நிலையில் பறக்கும் ரயில் வழித்தடத்தில் வேளச்சேரி முதல் பரங்கிமலை வழித்தடம் நீடிக்கப்பட்டு வருகிறது. அந்த வழித்தடத்தில் 3 ரயில் நிலையங்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக பறக்கும் ரயில் வழித்தடத்தில் 18 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்களுக்கு பரங்கிமலை வரை உள்ள மெட்ரோ மூலம் இணைப்பை ஏற்படுத்திவிட முடியும்.

எனவே சென்னை மெட்ரோ உடன் பறக்கும் ரயில் பாதையை ஒப்படைக்க தெற்கு ரயில்வே தயாராக உள்ளதாக கடந்த இரண்டு வருடம் முன்பு அறிவித்தது. ஆனால் இன்னமும் இந்திய ரயில்வே கொள்கை ரீதியாக ஒப்புதல் அளிக்கவில்லை.. அப்படி ஒப்புதல் அளித்த பின்னர் தான், பறக்கும் ரயில் வழித்தடமும், ரயில் நிலையங்களும் அடியோடு மாறும். அதுவரை சென்னை மக்கள் காத்திருக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் ஏசி ரயில்கள் அதிகம் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+