ஈரான் மீது போர்.. சட்டென பின்வாங்கிய டிரம்ப்! பயந்துட்டாரா? திடீரென இப்படி ஒரு முடிவா? அப்போ இஸ்ரேல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா இல்லையா என்பது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு வாரங்களுக்குள் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. முதலில் 2 நாட்களுக்குள் முடிவு எடுப்பார் என்று கூறப்பட்ட நிலையில்.. அமெரிக்க அதிபர் தற்போது முடிவை தள்ளிப்போட்டுள்ளார். ஈரான் உடன் போருக்கு செல்ல அவர் தயாராக இல்லையோ என்ற கேள்வியை இது எழுப்பி உள்ளது.

Israel Iran

இஸ்ரேல்-ஈரான் மோதல்: டிரம்ப் முடிவெடுக்க கால அவகாசம்

இஸ்ரேல்-ஈரான் மோதல் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதா இல்லையா என்பது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. டிரம்பின் செய்தியை மேற்கோள் காட்டி வெள்ளை மாளிகை செய்திச் செயலாளர் கரோலின் லெவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஈரானுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளது. எனவே அடுத்த இரண்டு வாரங்களில் டிரம்ப் ஒரு முடிவை எடுப்பார்" என்றார்.

ஈரானுடன் ராஜதந்திர ரீதியில் தீர்வு காண டிரம்ப் தயாராக இருந்தாலும், ஈரான் அணு ஆயுதங்கள் பெறுவதைத் தடுப்பதே அவரது முக்கிய குறிக்கோள் என்று லெவிட் கூறினார். மேலும், ஈரான் யுரேனியம் செறிவூட்டுவதைத் தடை செய்ய வேண்டும் மற்றும் அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனை அகற்ற வேண்டும் என்று எந்த ஒப்பந்தமும் இதில் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

"அதிபர் டிரம்ப் எப்போதும் இராஜதந்திர தீர்வையே விரும்புகிறார். அவர் ஒரு சமாதானத்தை விரும்புபவர். வலிமையின் மூலம் அமைதியை நிலைநாட்டும் நபர் அதிபர் டிரம்ப். எனவே இராஜதந்திரத்திற்கு வாய்ப்பு இருந்தால், அதிபர் டிரம்ப் அதை எப்போதும் பயன்படுத்திக் கொள்வார்," என்று லெவிட் கூறினார்.

"அதே நேரத்தில் வலிமையைப் பயன்படுத்தவும் அவர் பயப்படவில்லை.. போருக்கு செல்லவும் அவர் தயாராகவே இருக்கிறார். அதன் காரணமாகவே அவர் 2 வாரங்கள் நேரம் எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளார், என்று கூறி உள்ளது.

ஈரான் மீது தாக்குதல் நடத்த டிரம்ப் ஒப்புதல்: இறுதி உத்தரவு நிறுத்தி வைப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்த தனது உயர்மட்ட உதவியாளர்களிடம் ஒப்புதல் தெரிவித்திருந்தார். ஆனால், இன்னும் இறுதி உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை நிறுத்தும் வரை பொறுத்திருந்து பார்க்க டிரம்ப் விரும்புவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஈரானின் ஃபோர்டோவ் செறிவூட்டல் ஆலை அமெரிக்காவின் இலக்குகளில் ஒன்றாக இருக்கலாம். இது நிலத்தின் அடியில் ஆழமாக கட்டப்பட்டுள்ளது. இதனை அழிப்பது மிகவும் கடினம். சக்திவாய்ந்த வெடிகுண்டுகளால் மட்டுமே அதை தகர்க்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தாக்குதல் நடத்த முடிவு செய்துவிட்டீர்களா என்று டிரம்ப்பிடம் கேட்டபோது, "நான் அதைச் செய்யக்கூடும், செய்யாமலும் போகலாம்" என்று பதிலளித்தார். மேலும், "அடுத்த வாரம் மிக முக்கியமானதாக இருக்கும். ஒரு வாரத்திற்குள் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்" என்றும் அவர் கூறினார். ஈரான் நிபந்தனையின்றி தனது அணு ஆயுத திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்பதை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.

ஏன் பின்வாங்கினார்?

டிரம்ப் இப்படி பயந்து பின்வாங்க முக்கியமான சில காரணங்கள் இருக்கலாம் என்கிறார்கள். ஈரான் மீது போர் தொடுக்கும் முடிவை டிரம்ப்பின் அமைச்சரவையை விரும்பவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதை கடுமையாக எதிர்க்கின்றனர். டிரம்பின் இந்த முடிவை அவரின் உள்வட்டமே எதிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

முதல் கட்டமாக டிரம்ப்பிற்கு நெருக்கமாக அமெரிக்காவின் உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் இந்த போர் முடிவை எதிர்த்து உள்ளார். ஈரான் அணு ஆயுதம் உருவாக்கி வருகிறது. அந்த நாடு அணு ஆயுதத்தை உருவாக்குவதில் முக்கிய கட்டத்தை எட்டிவிட்டது, இன்னும் சில வாரங்களில் ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும், இதனால் அவர்களை தாக்க போகிறோம் என்று டிரம்ப் கூறி இருந்தார். ஆனால் அமெரிக்காவின் உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட்.. ஈரான் அணு ஆராய்ச்சி செய்வது சரிதான். ஆனால் ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை. அந்த நாடு இப்போதைக்கு அணு ஆயுதம் உருவாக்கும் சூழல் இல்லை. இன்னும் பல வருடங்கள் ஆகலாம் அதற்கு . இப்போதைக்கு அணு ஆயுதம் உருவாக்கும் சூழல் அங்கே நிலவவில்லை என்று துளசி கப்பார்ட் எதிர்த்து உள்ளார்.

முக்கியமாக அரசியல் விமர்சகர்கள் டிரம்ப் செயலை கடுமையாக எதிர்க்கின்றனர். இதன் காரணமாக போர் தொடுக்கும் முடிவில் இருந்து டிரம்ப் விலக இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+