சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நடிகர் சூர்யா மீது அப்பா சிவகுமார் கடும் கோபம்? ஜெய்பீம் பட விவகாரத்தில் தலையிடாததன் பரபர பின்னணி!

Google Oneindia Tamil News

சென்னை: ஜெய்பீம் பட சர்ச்சைகள் தொடர்பாக திடீரென இயக்குநர் ஞானவேல் வருத்தம் தெரிவித்துள்ளார். இயக்குநர் ஞானவேலின் இந்த அறிக்கையின் பின்னணிதான் இப்போது திரைத்துறையில் ஹாட் டாப்பிக்காக உலா வருகிறது.

Exclusive; இன்னும் 5 நாட்கள்தான் இருக்கு.. புதிர் போட்டு பேசிய தமிழ்நாடு வெதர்மேன்.. என்ன நடக்கும்? Exclusive; இன்னும் 5 நாட்கள்தான் இருக்கு.. புதிர் போட்டு பேசிய தமிழ்நாடு வெதர்மேன்.. என்ன நடக்கும்?

ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமூகம் காயப்படுத்தப்பட்டிருப்பதாக சூர்யாவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் வெடித்த சர்ச்சைகள் அனேகமாக இயக்குநர் ஞானவேலின் வருத்தம் தெரிவித்துள்ள அறிக்கைக்கு பின்னர் ஓயும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் திரைத்துறையில் ஞானவேலின் இந்த அறிக்கையின் பின்னணி குறித்து சில விஷயங்களும் விவாதிக்கப்படுகின்றன.

நடிகர் சிவகுமார் அட்வைஸ்

நடிகர் சிவகுமார் அட்வைஸ்


ஜெய்பீம் விவகாரத்தில் சூர்யாவுக்கும் அவரது தந்தை சிவக்குமாருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, 'பெரும்பான்மை சமூகத்தை வம்புக்கு இழுத்திருக்க வேண்டாம்; படத்தை தயாரிக்கும் போதே இந்த மாதிரியான பிரச்சனைகளில் கவனமாக இருந்திருக்க வேண்டும் ' என்று சொல்லி, வருத்தம் தெரிவிக்க சூர்யாவை வலியுறுத்தினாராம் சிவக்குமார்.

ஜோதிகா பிடிவாதமா?

ஜோதிகா பிடிவாதமா?

ஆனால், சூர்யாவோ இதை ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தில் சுமூகமான சூழல் தற்போது இல்லை எனவும் கூறப்படுகிறது. சூர்யாவைப் பொறுத்தவரையில் மனைவி ஜோதிகா சொல்லே மந்திரம். இதைத் தெரிந்துதான் சூர்யாவுக்கு, சிவக்குமார் அட்வைஸ் செய்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

கார்த்தி திரைப்படங்களுக்கும் சிக்கல்?

கார்த்தி திரைப்படங்களுக்கும் சிக்கல்?

இதனிடையே திரைத்துறையை சேர்ந்த வன்னியர். சமூகத்தினரிடம் இந்த விவகாரம் குறித்து சூர்யா கருத்து கேட்டுள்ளார். அப்போது, எங்களை எப்படி வேண்டுமானாலும் நீங்கள் நினைத்துக்கொள்ளுங்கள். அதனால நீங்க கேட்டதற்காக சொல்கிறோம். இந்த சர்ச்சையை ஆரம்பத்திலேயே முடித்திருக்க வேண்டும். இந்தளவுக்கு வளரவிட்டிருக்கக் கூடாது. வன்னிய சமூக இளைஞர்கள் நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை. ஏதோ, இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்திருப்பதால் விளைவுகள் தெரியவில்லை. இனி நீங்க எடுக்கப் போகும் எல்லா படத்தையும் ஓ.டி.டி.யிலேயே ரிலீஸ் செய்து விடுவீர்களா? தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டீர்களா? அப்போதுதான் உங்களுக்கு பாதிப்பின் விளைவுகள் தெரியும். உங்களுக்கு மட்டுமல்ல; உங்கள் தம்பி கார்த்தியின் படத்துக்கும் சிக்கல் உருவானால் என்ன பண்ணுவீர்கள் ? இன்றைக்கு உங்களுக்கு ஆதரவா நிற்கிற சினிமா புள்ளிகள் பிரச்சனையின்னு வரும்போது நிற்பார்களான்னு தெரியாது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

இயக்குநர் ஞானவேல் அறிக்கை

இயக்குநர் ஞானவேல் அறிக்கை

இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஞானவேலுவை தொடர்பு கொண்டு பேசினாராம் நடிகர் சூர்யா. இதனடிப்படையில்தான் ஞானவேல் தற்போது வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறாராம். இருந்தபோதும் நடிகர் சூர்யா வருத்தம் தெரிவித்திருந்தால் காயப்படுத்தப்பட்ட எங்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். இதனையும் இப்போதைக்கு சமாதானமாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது என்கின்றனராம் பாமக மூத்த தலைவர்கள்.

English summary
Here is an story on Jai Bhim Director Gnanavel's Statement on the movie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X