ஈபிஎஸ் அணியில் இருந்து வெளியேறும் ‘முக்கிய’ தலை? எடப்பாடி மீது பயங்கர அப்செட்.. அதிமுகவில் சலசலப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை பொதுச் செயலாளருமான் கேபி முனுசாமி பங்கேற்காதது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொன்விழா ஆண்டு நிறைவை கொண்டாடுவது, சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவிருப்பது குறித்து ஆலோசனை நடந்தது.

அ.தி.மு.க துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, நேற்றைய கூட்டத்திற்கு வரவில்லை. இதற்கு என்ன காரணம் என விசாரித்தபோது, பரபர தகவல்கள் கிடைக்கின்றன.

அதிமுக மோதல்

அதிமுக மோதல்

அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே ஏற்பட்ட தலைமை மோதலால் இரு தரப்பினரும் தனித்தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதுமே ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து நீதிமன்றங்களில் இரு தரப்புக்கும் மாறி மாறி சாதகமாக தீர்ப்பு வருகிறது. இந்நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. அடுத்த மாதம் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

 மாசெக்கள் கூட்டம்

மாசெக்கள் கூட்டம்

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பு மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முக்கிய ஆலோசனை

முக்கிய ஆலோசனை

அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் வரும், 17, 20 மற்றும் 26-ஆம் தேதிகளில் நடைபெறும் என ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக தொடக்க விழா பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கட்சியை பலப்படுத்துவது குறித்தும், அமைப்பு ரீதியாக காலியாக உள்ள பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கே.பி.முனுசாமி மிஸ்ஸிங்

கே.பி.முனுசாமி மிஸ்ஸிங்

இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அணியின் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஈபிஎஸ் தரப்பில் விசாரிக்கையில், உடல்நலக் குறைவால் கேபி முனுசாமி இந்தக் கூட்டத்திற்கு வரவில்லை என அவர்கள் தெரிவித்தனர். ஆனால், உண்மையான காரணம் வேறு என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்செட்டில் முனுசாமி

அப்செட்டில் முனுசாமி

கே.பி.முனுசாமி கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார். ஆனால், சில வாரங்களாக அவரது முகத்தை எடப்பாடி பழனிசாமியுடன் பார்க்க முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி தன்னை மதிக்கவில்லை, முக்கியமான ஆலோசனைகளின்போது தன்னை அழைக்கவில்லை என கேபி முனுசாமி அப்செட்டில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

 எடப்பாடி மதிக்கவில்லை

எடப்பாடி மதிக்கவில்லை

எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோர் உடன் சென்றனர். துணை பொதுச் செயலாளரான தன்னை அழைத்துச் செல்லவில்லை என அவர் தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களிடம் புலம்பியதாகக் கூறப்படுகிறது. ஓபிஎஸ் அணியில் முன்பு இருந்தபோதும், எடப்பாடி பழனிசாமி அணிக்கு வந்தபிறகு ஓபிஎஸ்ஸை கடுமையாக தாக்கிப் பேசினேன், அதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்னை குறிவைத்து விமர்சித்தனர். ஆனாலும், எடப்பாடி பழனிசாமி என்னை கண்டுகொள்ளவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறாராம்.

கடந்த கூட்டத்தில்

கடந்த கூட்டத்தில்

மேலும், கடந்த முறை அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தியபோது எடப்பாடி பழனிசாமியும், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனும் மட்டுமே முன்வரிசையில் இருந்தனர். அவர்களைப் பார்த்தபடி எதிர் வரிசைகளிலேயே கேபி முனுசாமி உட்பட அனைவரும் அமர வைக்கப்பட்டனர். அப்போதே, முக்கிய நிர்வாகிகளை அருகில் அமர வைக்காமல் எல்லோருடனும் எதிரில் அமர வைத்தது குறித்து கேபி முனுசாமி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. அப்போது மற்ற நிர்வாகிகள், இப்படியே இருக்கட்டும் எனக் கூறி முனுசாமியை அமைதிப்படுத்தி விட்டனராம்.

சலசலப்பு

சலசலப்பு

அப்போது முதலே எடப்பாடி பழனிசாமியோடு முனுசாமி கொஞ்சம் மனத்தாங்கலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து முக்கியமான ஆலோசனைகளின்போதும், டெல்லி சென்றபோதும் தன்னை அழைக்காததால் எடப்பாடி பழனிசாமி மீது அவர் அப்செட்டில் இருந்து வந்ததாகவும், இதனால் தான் நேற்றைய கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், அதிமுக வட்டாரத்தில் கடும் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன.

அடுத்த தலை

அடுத்த தலை

முன்பு ஓபிஎஸ் அணியில் இருந்து வந்த முன்னாள் எம்.பி மைத்ரேயன், ஒற்றைத் தலைமை மோதல் ஏற்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக மாறினார். ஆனால் அவருக்கு முக்கியத்துவம் தரப்படாத நிலையில், அங்கிருந்து வெளியேறி மீண்டும் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். இந்நிலையில், முன்னர் ஓபிஎஸ்ஸின் வலது கரமாக இருந்த கேபி முனுசாமியும், ஈபிஎஸ் மீதான அப்செட்டால் ஓபிஎஸ் அணிக்குத் தாவுவாரா எனும் கேள்விகள் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+