ஜெ. ஆட்சியில் சட்டசபையில் வேட்டியை உருவினார்கள்.. பேண்ட்டுக்கு மாற காரணம் சொன்ன பரிதி இளம்வழுதி!
Recommended Video

சென்னை: ஜெயலலிதா ஆட்சியில் சட்டசபையில் வேட்டியை உருவிவிட்டார்கள் என்பதற்காக பேண்ட் அணிய ஆரம்பித்ததாக கூறியவர் பரிதி இளம்வழுதி என்பது உங்களில் எத்தனை பேருக்கு நினைவில் உள்ளது?
திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய பரிதி இளம்வழுதி, கடந்த 1991ம் ஆண்டு திமுக சார்பில் சட்டசபைக்கு சென்ற ஒரே தலைவராகும். துறைமுகம் தொகுதியில் வென்ற கருணாநிதி, திமுகவின் மோசமான தோல்விக்கு, பொறுப்பேற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், பரிதி இளம்வழுதி மட்டுமே சட்டசபைக்கு திமுக சார்பில் செல்ல வேண்டிய நிலை.
அப்போது அதிமுக அரசிற்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் பரிதி இளம்வழுதி. இதனால், அதிமுகவினரிடம் எதிர்ப்பையும் சம்பாதித்தார்.
[தனி நபராக சட்டசபை புகுந்து ஜெயலலிதாவையே கலங்கடித்த 'இந்திரஜித்' பரிதி இளம்வழுதி!]

பேண்ட், சட்டை
இந்த நிலையில்தான், திடீரென வேட்டி, சட்டை என்ற அரசியல்வாதிக்கு உரித்தான ஆடை கலாச்சாரத்திலிருந்து, பேண்ட், சட்டைக்கு மாறினார், பரிதி இளம்வழுதி. அந்த காலகட்டத்தில் பேண்ட், சட்டை போட்ட தமிழக அரசியல்வாதியை பார்ப்பது அரிது. இதன்பிறகாவது இந்திய கம்யூனிஸ்ட் தளி ராமச்சந்திரன், பாமக வேல்முருகன், மார்க்சிஸ்ட் கட்சியின் டில்லிபாபு, மகேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிகுமார் போன்ற சிலர் பேண்ட் அணிந்து சட்டசபை வந்தனர். ஆனால் இந்த மாற்றத்திற்கு வித்திட்டது என்னவோ, பரிதி இளம்வழுதிதான்.

பெல்ட்டை கட்டிக்கொண்டேன்
இதுகுறித்து ஒரு சுவாரசிய தகவலை பின்னர், பரிதி இளம்வழுதி பகிர்ந்து கொண்டார். சென்னை பெரியார் திடலில், நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றபோதுதான், அந்த உண்மையை போட்டு உடைத்தார், பரிதி இளம்வழுதி. ஜெயலலிதா ஆட்சியில் சட்டமன்றத்திலே தன்னந்தனியாக இருந்து போராடிய என்னுடைய வேட்டியை உருவி விட்டார்கள். அதற்குப் பிறகு தான் சட்டமன்றத்திற்கு பேண்ட் போட்டு, பெல்ட்டை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு போனேன். பேண்ட்டை உருவினாலும் பரவாயில்லை என்று போனேன். அதனால்தான் இன்றுவரை பேண்ட் போட்டுக் கொண்டிருக்கின்றேன் என்றார். விழாவில் பங்கேற்றவர்கள் இதை கேட்டு குலுங்கி சிரித்துவிட்டனர்.

துணிவு கிடைத்தது
அந்த அராஜகத்தை, கொடூரதனத்தை சமாளிப்பதற்கு எனக்கு எங்கேயிருந்து துணிவு கிடைத்தது என்றால், அந்த தைரியம், துணிவு, பகுத்தறிவு இங்கேயிருந்துதான் கிடைத்தது. இந்த இடத்திலிருந்து ஒருவர் தயாராகிவிட்டால், அவர் எங்கே வேண்டுமானாலும் சிறப்பாகப் பணியாற்றுவார் என்று, திமுகவில் இருந்தது குறித்து பெருமையாக பேசினார்.

பெல்ட்டை கட்டிக்கொண்டேன்
இதுகுறித்து ஒரு சுவாரசிய தகவலை பின்னர், பரிதி இளம்வழுதி பகிர்ந்து கொண்டார். சென்னை பெரியார் திடலில், நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றபோதுதான், அந்த உண்மையை போட்டு உடைத்தார், பரிதி இளம்வழுதி. ஜெயலலிதா ஆட்சியில் சட்டமன்றத்திலே தன்னந்தனியாக இருந்து போராடிய என்னுடைய வேட்டியை உருவி விட்டார்கள். அதற்குப் பிறகு தான் சட்டமன்றத்திற்கு பேண்ட் போட்டு, பெல்ட்டை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு போனேன். பேண்ட்டை உருவினாலும் பரவாயில்லை என்று போனேன். அதனால்தான் இன்றுவரை பேண்ட் போட்டுக் கொண்டிருக்கின்றேன் என்றார். விழாவில் பங்கேற்றவர்கள் இதை கேட்டு குலுங்கி சிரித்துவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications