சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மரியாதை நிமித்தமா.. மேட்டரே வேற! விஜயை புதுவை ரங்கசாமி சந்தித்தது ஏன்? 1 மணி நேரம் என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் விஜயை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பு தமிழ்நாடு அரசியல் உலகில் பெரிய கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுகிறது. வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கட்சியின் கொடி மற்றும் விஜய் புகைப்படத்தை பயன்படுத்தி பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரத்தை ஆரவாரமாக தொடங்கி உள்ளனர்.

பனையூர் வீட்டிற்கு நேரடியாக வந்த புதுவை முதல்வர் ரங்கசாமி.. நடிகர் விஜய் உடன் மீட்டிங்.. என்ன காரணம்பனையூர் வீட்டிற்கு நேரடியாக வந்த புதுவை முதல்வர் ரங்கசாமி.. நடிகர் விஜய் உடன் மீட்டிங்.. என்ன காரணம்

 அரசியல் சந்திப்பா?

அரசியல் சந்திப்பா?

இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பு கிடையாது. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றுதான் வெளியில் கூறப்பட்டு வந்தது. ஆனால் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு கிடையாது என்றே நடிகர் விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்த மீட்டிங் 1 மணி நேரம் நடந்துள்ளது. சிற்றுண்டி அருந்தியபடி இவர்கள் ஆலோசனை செய்துள்ளனர். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் இவ்வளவு நேரம் நீடித்து இருக்காது.

பேசியது என்ன?

பேசியது என்ன?

இதில் அரசியல் பற்றி பல விஷயங்களை நடிகர் விஜய் ரங்கசாமியுடன் பேசி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றி முக்கியமான சில ஆலோசனைகளை விஜய் கேட்டதாக கூறப்படுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கம் சிறப்பாக செயல்பட்டது. 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர், தேமுதிக போன்ற கட்சிகளை விட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர்.

வெற்றி

வெற்றி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் போட்டியிட்டனர். ஊரக உள்ளாட்சி தேர்தல் என்பதால் இவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். விஜய் மக்கள் இயக்க கொடியை வைத்தும், விஜயின் புகைப்படத்தை வைத்தும் பிரச்சாரம் செய்தனர். இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர்கள் உட்பட 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் மக்கள் இயக்கம் களமிறங்கி உள்ளது.

வெற்றி

வெற்றி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் போட்டியிட்டனர். ஊரக உள்ளாட்சி தேர்தல் என்பதால் இவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். விஜய் மக்கள் இயக்க கொடியை வைத்தும், விஜயின் புகைப்படத்தை வைத்தும் பிரச்சாரம் செய்தனர். இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர்கள் உட்பட 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் மக்கள் இயக்கம் களமிறங்கி உள்ளது.

அறிவுரை

அறிவுரை

இந்த நிலையில் நகராட்சி தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை பெறுவது எப்படி என்ற ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக டெல்டா மாவட்டங்களிலும், வடமாவட்டங்களில் எப்படி வியூகங்களை வகுப்பது என்று விஜய் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. அடிமட்ட அளவில் கட்சியை வளர்ப்பது குறித்த அடிப்படை விஷயங்களை விஜய் இந்த சந்திப்பில் ஆலோசனை செய்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் பேசினார்கள்

அரசியல் பேசினார்கள்

அரசியல் எதுவும் பேசப்படவில்லை என்று வெளியில் சொல்கிறார்கள்.. ஆனால் அதில் உண்மை இல்லை. அரசியலும் இந்த மீட்டிங்கில் பேசப்பட்டது என்கிறார்கள். மேலும் புதுவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று விஜயிடம் ரங்கசாமி கேட்டதாகவும் கூறப்படுகிறது. புதுவையில் விஜய் கட்சி என்ஆர் காங்கிரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று இந்த சந்திப்பில் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது

English summary
Why Puducherry CM Rangaswamy suddenly meets Actor Vijay in his house? What is the reason?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X