தாமரையை வீழ்த்தும் வாள்! வடக்கில் பாஜகவை மிரளடித்த இடைநிலை சாதிகள்! எதிராக திரும்பிய ராஜபுத்திரர்கள்
சென்னை: கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூரில் உள்ள ராஜபுத்திரர்கள் எனப்படும் ராஜ்புத் சாதியினரின் மகாபஞ்சாயத்தில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று பேசப்பட்டு உள்ளதாம்.
டிக்கெட்டுகளுக்காக பாரதிய ஜனதா கட்சியால் (பிஜேபி) புறக்கணிக்கப்பட்டதால் சமூக உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் தங்கள் ஏமாற்றத்தை வாய்மொழியாக வெளிப்படுத்தினர். இதனால் பாஜகவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று பஞ்சாயத்தில் பேசப்பட்டு உள்ளதாம்.

மேற்கு உ.பி.யின் மீரட் மண்டலத்தில் உள்ள ஏழு இடங்களுக்கு, அந்த சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களை கட்சி நிறுத்தாததால், பாஜகவுக்கு பொதுவாக வாக்களிக்கும் ராஜ்புத் சமூகம் வருத்தம் அடைந்துள்ளது. மொராதாபாத் மண்டலத்தில் உள்ள ஏழு இடங்களில் ராஜ்புத் சமூகம் அதிக பிரதிநிதித்துவம் கொண்டது. ஆனால் அங்கே அவர்கள் வாய்ப்பு பெறவில்லை. இதன் காரணமாக அந்த சமுதாயத்தினர் கடுமையாக அப்செட் ஆகி உள்ளனர்.
ராஜபுத்திர அமைப்புகள் பாஜக மற்றும் காங்கிரஸிடம் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களை களமிறக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டன. இதை பாஜக கேட்காத காரணத்தால் அவர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.
2019 ஆம் ஆண்டில் மீரட் மண்டலத்தில் உள்ள ஏழு இடங்களிலும் பாஜக வெற்றி பெறுவதற்கு அவர்களின் ஆதரவு எவ்வாறு முக்கியமானது என்பதைச் சுட்டிக்காட்டி ராஜ்புத்த சமூகம் பாஜக கட்சியிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. நிச்சயமாக, மொராதாபாத் மண்டலத்தில் உள்ள 7 இடங்களில் பாஜக என்று இல்லை எந்த கட்சியாலும் ராஜ்புத் ஆதரவு இன்றி வெற்றிபெற முடியாது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் சமாஜ்வாதி கட்சியின் வலிமைமிக்க கூட்டணி அமைத்த போது கூட கடந்த முறை இங்கே ராஜ்புத் ஆதரவு இன்றி அவர்கள் வெற்றிபெற முடியவில்லை.
கடும் எதிர்ப்பு; ராஜ்புட் உள்ளிட்ட சத்திரிய வம்சத்து மன்னர்கள் இஸ்லாமியர்களுடன் நெருக்கமாக, அடிமை போல இருந்தனர். இஸ்லாமிய மன்னர்கள் கொடுத்ததை வைத்து ஆட்சி செய்தனர் . தங்கள் பெண்களை கூட இஸ்லாமியர்களுக்கு மனம் முடித்து கொடுத்தனர் என்று விமர்சனம் செய்யும் தொனியில் மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா பேசி இருந்தார். பாஜகவை சேர்ந்த மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா இதன் மூலம் சத்திரிய வம்சத்து அரசர்களை அவமதித்துவிட்டதாக சத்திரியர் இடையே விமர்சனம் வைக்கப்பட்டது.
மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலாவின் கருத்துக்கு எதிராக குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக 'சத்திரிய' சமூகத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான், உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் நேற்று 'சத்திரிய' சமூகத்தினர் பாஜகவிற்கு எதிராக பஞ்சாயத்து நடத்தினர். சத்திரிய சமூகத்தின் நலன்கள் மற்றும் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை 'எதிர்ப்பது' பற்றி இதில் ஆலோசிக்கப்பட்டது.
பாஜகவிற்கு எதிராக செயல்பட வேண்டும் என்று சத்திரிய ஜாதி பிரிவை சேர்ந்த உறுப்பினர்களுக்கு இந்த பஞ்சாயத்தில் அறிவுறுத்தப்பட்டது.
சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள நானௌடா என்ற இடத்தில் நடைபெற்ற இந்த பஞ்சாயத்தில் ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சத்திரிய சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர். உத்தர பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுக்க எந்த மாநிலத்திலும் சத்திரியர்கள் பாஜகவிற்கு வாக்களிக்க கூடாது என்று இதில் முடிவு எடுக்கப்பட்டது.
வடஇந்திய பஞ்சாயத்துகளில் எடுக்கப்படும் முடிவுகள், அதில் கலந்து கொள்ளும் எல்லோராலும் மிக தீவிரமாக கடைபிடிக்கப்படும் என்பதால் பாஜகவிற்கு இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிசான் மஸ்தூர் சங்கதன் தலைவரும், சமூகத் தலைவருமான தாக்கூர் பூரன் சிங் இது பற்றி கூறுகையில், பாஜக வேட்பாளர்களை தோற்கடிக்க எந்த கட்சிக்கு சிறந்த வாய்ப்பு உள்ளதோ அந்த கட்சிக்கு எங்கள் சமூகத்தினர் ஆதரவளிப்பார்கள். நாங்கள் எப்போதும் பாஜகவை ஆதரித்தோம், ஆனால் அவர்கள் ராஜ்புத் தலைவர்களை ஓரங்கட்டி வருகின்றனர். லோக்சபா தேர்தலுக்கான டிக்கெட் விநியோகத்தில் எங்கள் சமூகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது, என்றுள்ளார்.
பஞ்சாயத்தில் பேசிய பேச்சாளர்கள், தங்கள் சமூகத் தலைவர்களுக்கு பாஜக அமைப்பிலும் பதவி வழங்கப்படவில்லை. சமூகத்தினர் ஒற்றுமையாக இருந்து தேர்தலில் காவி கட்சியை எதிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, ஏப்ரல் 16 அன்று மீரட் மாவட்டத்தில் உள்ள சர்தானாவில் சமூகத் தலைவர்களின் மற்றொரு கூட்டத்தை நடத்த பஞ்சாயத்து முடிவு செய்தது.
மேற்கு உ.பி.யின் சஹாரன்பூர், மீரட், முசாபர்நகர், பாக்பத், கைரானா, காசியாபாத் மற்றும் கௌதம் புத் நகர் உள்ளிட்ட எட்டு மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதேபோன்ற பஞ்சாயத்துகள் சில நாட்களுக்கு முன்பு முசாபர்நகர் மாவட்டத்திலும் நடைபெற்றன. பாஜக வேட்பாளர் சஞ்சீவ் பாலியானை எதிர்க்குமாறு சமூகத்தினரை கேட்டுக் கொண்டார்.
குஜராத்தில் சத்திரிய சமூகத்தைச் சேர்ந்த மன்னர்கள் முஸ்லிம் ஆட்சியாளர்களின் துன்புறுத்தலுக்கு இணங்கி, அவர்களுக்குத் தங்கள் மகள்களைத் திருமணம் செய்து வைத்ததாக ரூபாலா கூறிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த சமூகத்தின் பஞ்சாயத்துகள் முடிவு எடுத்த நிலையில் தற்போது சத்திரியர்கள் vs பாஜக மோதல் வடஇந்தியாவில் தீ போல பரவ தொடங்கி உள்ளது.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications