கட்சி ஆரம்பிச்சு.. 1 வருடம் ஆச்சு.. விஜய்க்கு பறந்த மேஜர் வார்னிங்.. பனையூரில் அல்லோகலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து 1 வருடம் ஆகிவிட்டது. கடந்த பிப்ரவரியில் தொடங்கப்பட்ட இந்த கட்சியில் பல அரசியல் ரீதியான சிக்கல்கள் நிலவி வருகிறதாம். முக்கியமாக இக்கட்சியில் புதிதாக நிர்வாகிகள் யாரும் இணையவில்லை. பெரிய அளவில் இது தொடர்பாக விஜய்க்கும் முக்கியமான சில தகவல்கள் சென்றுள்ளதாம்.

சமீபத்தில் விஜயின் கட்சியில் ஆதவ் அர்ஜுனா இணைந்தார். த.வெ.க.வின் தேர்தல் வியூகம் அமைக்கும் பணிகளை முன்னெடுக்கிறது ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனம். இதற்கான ஒப்பந்தத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யும், வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனத் தலைவர் ஆதவ் அர்ஜுனாவுக்குமிடையே அக்ரிமெண்ட் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே, த.வெ.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் இந்த அக்ரிமெண்ட்டில் சைன் பண்ணியிருக்கிறார் விஜய்.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

ஆனால் இவரை தவிர பிரபல முகங்கள் யாரும் கட்சியில் இணையவில்லை. முக்கியமாக இக்கட்சியில் புதிதாக நிர்வாகிகள் யாரும் இணையவில்லை. கமல் கட்சி தொடங்கிய போது மநீமவில் கொத்து கொத்தாக நிர்வாகிகள் பலர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் இணைந்தார். ஆனால் தவெகவில் அப்படி இல்லை.

கட்சி மோதல்:

முதல் கட்டமாக தமிழக வெற்றி கழகத்தில் உட்கட்சி பூசல் உள்ளது. மேலே இல்லை என்றாலும் மாவட்ட அளவில் உள்ளூர் அளவில் மோதல் உள்ளது.

உள்ளூர் அளவில் இப்போதுதான் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதை அங்கே இருக்கும்.. பதவி எதிர்பார்த்து காத்திருந்த மற்ற நிர்வாகிகள் ஏற்கவில்லை . இதனால் கொடி ஏற்றுவது தொடங்கி போஸ்டர் அடிப்பது வரை பல மோதல்கள் நடக்கின்றன.

ஒரே மாவட்டத்தில் பல விஜய் ரசிகர் குழுக்கள் இருக்கும். மன்றங்கள் ஒன்று என்றாலும் குழுக்களாக இவர்கள் பிரிந்து இருப்பார்கள். இதன் காரணமாகவே இவர்களுக்கு இடையே பதவி பெறுவதில் பூசல் நிலவி வருகிறதாம்.

முக்கியமாக் போஸ்டர் மற்றும் கொடி ஏற்றுவதில்தான் அதிக அளவில் மோதல் நிலவி வருகிறதாம். பல மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை மற்ற ரசிகர்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

விவாதங்களில் மோதல்:

தனது கட்சி நிர்வாகிகள் விவாத நிகழ்ச்சிகளில் பேசும் விஷயங்கள் கட்சித் தலைவர் விஜயை அப்செட்டாக்கி உள்ளதாம். அதன்படி சமீபத்தில் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிர்வாகி ஒருவர்.. விஜயை எதிர்கொள்ள அதிமுக, திமுக இரண்டிற்கும் பயம். அதாவது இவர்கள் 2026ல் கூட்டணி வைப்பார்கள். அதாவது விஜயை எதிர்க்க அதிமுக - திமுக கூட்டணி வைக்கும் என்று கூறினார்.

சமீபத்தில் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இன்னொரு நிர்வாகி ஒருவர்... திமுக தனி தொகுதிகளை விசிகவிற்கு வழங்கும். பொது தொகுதியில் விசிகவை திமுக நிற்க விட்டதே இல்லை என்று கூறி இருந்தார். அதாவது வரலாறு தெரியாமல்.. விஜய் கட்சி நிர்வாகி பேசி இருந்தார்.

அது மட்டுமின்றி விவாத நிகழ்ச்சிகளுக்கு வரும் மற்ற கட்சியினர் பொதுவாக அரசியல் ரீதியாக நிறைய படித்திருப்பார்கள். அரசியல் வரலாறுகள் தெரிந்து இருக்கும். தமிழக அளவில் கட்சி தொடர்பான வரலாறுகள் தெரிந்து இருக்கும்.

ஆனால் விஜய் கட்சியினர் இதற்கு புதிது. இத்தனை காலம் அதில் பலர் ரசிக சண்டை போட்டு வந்தனர். ஆனால் இவர்கள் இப்போது திடீரென அரசியல் பேச தொடங்கி உள்ளனர். ஆனால் அரசியல் சண்டை என்பது சினிமா சண்டை போன்றது அல்ல. இதில் வரலாறு, உண்மையான நம்பர்ஸ், புள்ளி விவரம் முக்கியம். ஆனால் விஜய் ரசிகர்கள் இன்னும் அந்த அளவிற்கு பக்குவப்படவில்லையோ என்று தோன்றுகிறது.

இதன் காரணமாகவே விவாத நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழகத்தினர் திணறி வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் விவாத நிகழ்ச்சிகளில் பேசும் விஷயங்கள் கட்சித் தலைவர் விஜயை அப்செட்டாக்கி உள்ளதாம். ஏதாவது உளறுகிறார்களே என்று கோபத்தில் உள்ளாராம். இதனால் கட்சி சார்பாக புதிய செய்தி தொடர்பாளர்களை.. விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க புதிய நிர்வாகிகளை நியமிக்கும் திட்டத்தில் விஜய் இருக்கிறாராம். அனுபவம் பெற்றவர்களை களமிறக்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.

சுற்றுப்பயணம் சிக்கல்: விக்கிரவாண்டியில் த.வெ.க.வின் முதல் மாநில மாநாட்டை நடத்தியப் பிறகு கட்சியின் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து எவ்வித ஆக்சனையும் எடுக்காமல் இருந்து வரும் விஜய், கடந்த வாரம் முக்கியமான ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

அதில், மண்டல மாநாடுகளை நடத்துவது என அலசப்பட்டுள்ளது. அதாவது கோவை, சேலம், திருச்சி, நாகை அல்லது திருவாரூர், மதுரை, நெல்லை அல்லது கன்னியாகுமரி ஆகிய மாவட்ட தலைநகரில் மாநாடு நடத்தலாம் என்றும், இறுதியில் சென்னையில் நடத்தலாம் என்றும் யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனை அலசிய விஜய், சென்னையைத் தவிர்த்து 6 மாவட்டங்கள் வருகிறது.

6 மாவட்டங்களில் மாநாடு நடத்த வேண்டுமானால் ஒரு மாநாட்டுக்கும் மற்றொரு மாநாட்டுக்கும் குறைந்த பட்சம் 2 மாதங்களாவது இடைவெளி தேவைப்படும். அப்படியானால் கிட்டத்தட்ட 1 வருடம் தேவை. இது சாத்தியமா? மண்டல மாநாட்டிற்கே நேரம் செலவழித்தால் தேர்தல் பணிகள் எப்படி நடக்கும் ? அதற்கு நேரம் தேவைப்படாதா? இதற்கிடையில், என்னை மாவட்ட சுற்றுப்பயணம் வேறு போகச் சொல்கிறீர்கள்.

இதற்கெல்லாம் நேரம் இருக்குமா? செலவுகளை நம் கட்சியினர் சமாளிப்பார்களா? என்று கேள்விகளை எழுப்பியிருக்கிறார் விஜய்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+