Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அலறிய மின்சார வாரியம்.. மூன்றாக உடைகிறது "இபி போர்ட்".. தங்கம் தென்னரசின் "கோல்டன்" பிளான்! ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்சார வாரியமான Tangedco அமைப்பை 3 ஆக பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அதாவது 3 நிறுவனங்களாக இதை மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பல்வேறு முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பதவி ஏற்றத்தில் இருந்தே பல அதிரடி முடிவுகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் புதிய முடிவு ஒன்றை லண்டன் ஆய்வாளர்கள் பரிந்துரையின் பெயரில் அவர் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

Why Tamil Nadu Tangedco EB board is spiliting up into Three? What is the reason behind it?

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் லண்டனில் இருந்து முக்கியமான டீம் ஒன்றை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அவர்களுக்கு சிறப்பு ப்ரொஜெக்ட் ஒன்றும் கொடுக்கப்பட உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை மனதில் வைத்து முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை வகுத்து உள்ளார். அதன்படி லண்டனில் இருக்கும் பிரபல கன்சல்டன்சி நிறுவனமான Ernst & Young நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி Ernst & Young நிறுவனம் தமிழ்நாட்டில் இருக்கும் 50 பொதுத்துறை நிறுவனங்களை ஆய்வு செய்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் ஆண்டு/காலாண்டு அறிக்கைகள், நடப்பு வருமான குறிப்புகள், இடைக்கால பொருளாதார அறிக்கைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன் போக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனர். அந்த நிறுவனங்களின் பல்வேறு பொருளாதார அறிக்கைகளை வைத்து இந்த நிறுவனம் அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

நிதி அமைச்சகத்தின் பிரிவான பொது நிறுவனங்களின் பணியகம் என்ற பிரிவுடன் இவர்கள் இணைந்து செயல்பட உள்ளனர். இந்த நிறுவனம் சமீபத்தில் மின்சார வாரியத்தில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வு முடிவில் மின்சார வாரியம் தொடர்பாக முக்கியமான பரிந்துரைகளை அந்த நிறுவனம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

[பரிந்துரை: அதன்படி மின்சார வாரியமான Tangedco அமைப்பை 3 ஆக பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அதாவது 3 நிறுவனங்களாக இதை மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மின்சார வாரியத்தின் கடன் 1.4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்த பரிந்துரை அறிக்கை இந்த கடன் நிலைமையை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

என்ன பரிந்துரை: மின் உற்பத்தி, விநியோகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய துறைகளை கவனிக்கும் வகையில் தனி தனி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று இந்த பரிந்துரையில் கூறப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாடு அரசுதான் இனி முடிவு எடுக்க வேண்டும். ஏற்கனவே சில மாநிலங்களில் மின்சார வாரியம் இப்படி 2-3 வகையாக பிரிந்து உள்ளது.

இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் இதே ஐடியா கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) 2017 இல், மின்சார வாரியத்தை தனி விநியோக மற்றும் உற்பத்தி நிறுவனங்களாக பிரிக்க பரிந்துரைத்தது. ஆனால் அப்போது இந்த மாற்றம் செய்யப்படவில்லை.

மாற்றங்கள் வரும்: டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் சில மாநிலங்கள் அவற்றின் மின் விநியோகம் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களின் பிரிவுக்குப் பிறகு சாதகமான முடிவுகளை பெற்றுள்ளன. அதாவது இந்த துறையை இரண்டாக பிரித்த பின் அவை சாதகமான முடிவுகளை பெற்றுள்ளன.

டாங்கெட்கோவை மூன்று நிறுவனங்களாக மாற்றினால், அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி செழித்து திறம்பட செயல்பட முடியும். இதனால் உற்பத்தி அதிகரிக்கும். கடன் அடியோடு குறையும் என்றும் மின்சார துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+