தமிழிசை தந்தது பேட்டி அல்ல.. "சில ஆளுநர்களுக்கு" பாடம்.. முரசொலி வைத்த பஞ்ச்!
சென்னை: என்னை யாரும் அவமதிக்கவும் இல்லை; நான் அவமானப்படவும் இல்லை; நாங்கள் முறத்தால் புலியை அடித்த பரம்பரை என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ரொம்பவே சீறியிருந்தார். தமிழிசை சவுந்தரராஜனின் இந்த உறுமலுக்கும் சீற்றத்துக்கும் காரணமே திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் சிலந்தி என்ற புனை பெயரில் எழுதப்பட்ட ஒரு கட்டுரைதான்.
முரசொலி நாளிதழில் நேற்று கடைசிபக்க கட்டுரையாக சிலந்தி என்ற புனை பெயரில் மேதகு தமிழிசை தந்தது பேட்டி அல்ல- சில ஆளுநர்களுக்கு உணர்த்திடும் பாடம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதன் விவரம்: ஆளுநர் தமிழிசை, கொஞ்சம் அப்பிராணி! பேட்டிதரும் போது சில செய்திகளை சூசகமாக சொல்ல வேண்டும் என்பதையறியாமல் படாரென போட்டு உடைத்துவிடுகிறார். தனக்கு உரிய மரியாதையை தெலுங்கானா அரசு தரவில்லை எனக் கூறுவது ஆளுநரின் ஆதங்கம்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அரசியல் நோக்கோடு ஆளுநர் செயல்படுவதாக தெலங்கானாவின் ஆளும் அரசு பல நேரங்களில் ஆளுநர் செயல்பாடுகள் குறித்து விமர்சித்துள்ளது .
மாநிலத்தின் உயர்ந்த பதவிக்கு கூட நிறைய முட்டுக்கட்டைகள் போடப்படுகிறது என வாய்விட்டு அழாத குறையாக ஆளுநர் தமிழிசை பேட்டி தந்துள்ளார்! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த மாநிலத்து ஆளுநராகப் பதவி ஏற்றபோது இந்த மாநிலத்துக்காக என்னை அர்ப்பணித்துக் கொள்வது என உறுதி பூண்டேன். ஆனால் அதை சாத்தியமாக்க நான் எந்த முயற்சி எடுத்தாலும் அது எளிதான காரியமாக இல்லை. உதாரணமாக நான் இந்த மாநிலத்தின் பழங்குடியினர் திருவிழாவுக்கு செல்ல எனது அலுவலகம் ஹெலிகாப்டர் கேட்டது. ஆனால் ஹெலிகாப்டர் தரப்படுமா இல்லையா என்பது பற்றி மாநில அரசு எதுவுமே கூறவில்லை எனவும் அங்கலாய்த்துள்ளார் என எழுதப்பட்டுள்ளது.

முற்பகல் செய்யின் பிற்பகல்..
ஏன் இந்த நிலை ஆளுநருக்கு ஏற்பட்டது. ஆளுநர் முற்பகல் செய்ததை பிற்பகலில் அனுபவிக்கிரார் அவ்வளவுதான். இதில் அங்கலாய்க்க என்ன இருக்கிறது? தெலுங்கானாவில் அமைச்சரவைக் கூட்டம் கூட்டி கவுசிக் ரெட்டி என்பவரை மேலவை உறுப்பினராக ஆளுநருக்கான கோட்டாவில் நியமிக்க பரிந்துரை கூறியது. மாநில அமைச்சரவை கூடி பரிந்துரைத்த அந்த கோப்பு, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது; அனுப்பி பல நாட்களாகியும் ஆளுநரிடம் இருந்து எந்த பதிலும் இல்லாத நிலையில் ராஜ்பவனில் அந்த கோப்பு தூங்கியது! அப்போதே ஆளுநர்க்கும் அரசுக்கும் இடையே அங்கு பனிப்போர் தொடங்கிவிட்டது!

தமிழிசை பாணியில் பதிலடி
ஒரு அமைச்சரவை முடிவுக்கு அன்று ஆளுநர் முட்டுக்கட்டை போட்டார்! இன்று அந்த முட்டுக்கட்டையை ஆளுநருக்கு அரசு போடுகிறது! மாநிலத்துக்காக தன்னை அர்ப்பணிக்க முடிவு செய்யும் ஆளுநர்கள், அந்த மாநிலத்தின் மக்களாள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோடு ஒத்துப் போய் செயல்பட்டிருந்தால் அவர்களது அர்ப்பணிப்பு உணர்வுகள் வரவேற்று பாராட்டப்பட்டிருக்கும்! கெளசிக் ரெட்டியை நியமிப்பதில் ஏதாவது சங்கடங்கள் இருந்தால் அதனை அரசுக்கு தெரிவித்திருக்க வேண்டும். அதனைச் செய்யாமல் அன்று அரசு அனுப்பிய கோப்பு ஏற்கப்படுகிறதா? இல்லையா? என்ற நிலையை ஆளுநர் தமிழிசை ஏற்படுத்தியடஹ்ற்கு பதிலடியாக, ஹெலிகாப்டர் தரப்படுமா இல்லையா? என்பது பற்றி மாநில அரசு தமிழிசை பாணியில் எதுவும் கூறாமல் இருந்துவிட்டது.

சிந்திக்க வேண்டாமா?
கவர்னர் மோசமாக நடத்தப்பட்டார் என்று எதிர்மறையாக வரலாறு எழுதப்படுவதை நான் விரும்பவில்லை என்று அங்கலயாக்கும் தமிழிசை, அதே நிலையில் கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆளும் கட்சியாகி உள்ள ஒரு அரசு- ஆளுநரால் அலட்சியப்படுத்தப்பட்டது என்று வரலாறு எழுதப்படுவதை வரவேற்கிறாரா? என்று கேட்டிடமாட்டார்களா? என்பதையும் பேட்டி அளிக்கும் முன் ஆளுநர் தமிழிசை சிந்தித்திருக்க வேண்டாமா? மாநிலத்துக் காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வதாகப் பேசும் ஆளுநர் கள்; தாங்கள் ஒன்றிய அரசின் ஆளும் கட்சியின் ஏஜண்ட் என்ற மமதையை துறந்து. மாநில நலனில் அக்கறை கொண்டு. மாநில அரசோடு இணைந்து செயல்பட்டால் இன்று ஆளுநர் தமிழிசைக்கு ஏற்பட்ட நிலை எந்த ஆளுநருக்கும் ஏற்பட்டிருக்காது என்பதை, அரசியல் சட்டம் தங்களது அதிகாரத்துக்குத் தந்துள்ள வரம்பை மீறிச் செயல் நினைத்திடும் தமிழக ஆளுநர் உள்ளிட்ட அனைத்து ஆளுநர்களுக்கும் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

எப்படி அரசுகள் ஏற்கும்?
மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களுக் கும், மக்கள் நலச் சட்டங்களுக் கும் ஆளுநர்கள் தடை ஏற்படுத்த நினைத்தால், தெலுங்கானாவில் ஆளுநர் தமிழிசை சந்தித்த அவலங்களைத்தான் சந்திக்க வேண்டிவரும்! ஜனநாயக நாடுகளில் ஒரு மாநில அரசு என்பது அம்மாநிலத் தின் பெரும்பான்மையான மக்க ளின் ஆதரவைப் பெற்று ஆட்சி பீடம் ஏறி, அந்த மாநிலத்தின் பணியாற்றும் அதிகாரிகளோடு கலந்தாலோசித்து - அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நன்மைக்காகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையின் ஒப்புதல் பெற்று இயற்றி அனுப்பிடும் சட்டங்களை, ஒன்றிய அரசின், ஆளுகின்ற கட்சியின் அரசியல் நியமனமாக விளங்கும் ஒற்றை நபர், அதுவும் அந்த மாநிலத் துக்கே தொடர்பற்ற ஒருவர் தடுத்து நிறுத்தி காலதாமதப் படுத்தி அதிலே அரசியல் செய் வதை எந்த அரசுதான் ஏற்கும்?

ஆளுநர்கள் உணரட்டும்
இரண்டு அதிகார மையங்களின் மோதலில், மக்கள் துன்பப்படக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில் மாநில அரசு, விட்டுக் கொடுத்துப் போக நினைக்கலாம்; ஆனால் மோதும் போக்கு அதிகமானால் அல்லது தொடர்ந்தால் ஆளுநர் தமிழிசைக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கும் ஏற்படலாம்; என்பதை தன்னிலை அறியாது பேசியும் செயல்பட்டுக் கொண்டும் இருக்கும் ஆளுர்கள் உணர்ந்திடவேண்டும்! இவ்வாறு முரசொலியின் சிலந்தி கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதுதான், என்னை யாரும் அவமதிக்கவும் இல்லை; நான் அவமானப்படவும் இல்லை; நாங்கள் முறத்தால் புலியை அடித்த பரம்பரை என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ரொம்பவே சீறியிருந்தார்.
-
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு -
விஜய் உடன் மல்லுக்கட்டும் இனிகோ இருதயராஜ்.. திருச்சி கிழக்கு திமுக வேட்பாளரின் பலம், பலவீனம் என்ன? -
காடுவெட்டி குரு மகள் பேச்சை பார்த்தீங்களா? அன்புமணிக்கு டபுள் டென்ஷன்.. வன்னியர் ஓட்டு யாருக்கு லாபம் -
செந்தில் பாலாஜின்னா தனி ரகம்! 200000 ஓட்டுக்காக வேலுமணி தந்த ஸ்டார் ஓட்டல் ட்ரீட்.. உடனே ட்விஸ்ட் -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
Praveen: காங்கிரஸ் தலைமை அனுமதியுடனே விஜய்யை சந்தித்தேன்! வெடிகுண்டு வீசிய பிரவீன் சக்கரவர்த்தி! -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
சாத்தூரில் நயினார் வெல்வாரா? தோற்கடிக்க ஸ்டாலின் 2 முக்கிய ‘மூவ்'.. இதை கவனிச்சீங்களா -
முதல்வர் பதவியை பிடுங்கிய பிறகும் இப்படியா! நிதிஷுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக.. ஜனாதிபதி மூலம் செக் -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர்












Click it and Unblock the Notifications