ராமநாதபுரம் விசிட்: மாஜி ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் போகாத ஆளுநர் ஆர்.என்.ரவி- அடுத்த சர்ச்சை!
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது ராமநாதபுரம் மாவட்ட பயணத்தின் போது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் செல்லாதது குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 2 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்த பயனம் தொடர்பாக ஆளுநர் ரவி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ராமநாதபுரம் சகோதர, சகோதரிகள், மகன்கள், மகள்களின் அன்பும் பாசமும் என்னை மிகவும் கவர்ந்தன. புதுமை வடிவிலான இயற்கை வேளான்மை, இயற்கை விவசாயம் அல்லது தன்னார்வத்துடன் எதையாவது புதியதாக செய்து பலரை ஊக்குவிக்கும் நம் இளம் தொழில்முனைவோர் ஆகட்டும் அல்லது நம் நாட்டுக்குப் பெரிதாக எதையாவது செய்யும் டங்களுடைய கனவுகளை பிரதிபலிக்கும் நம்பிக்கை நிறைந்த மாணவர்கள் ஆகட்டும் அல்லது எதிர்நீச்சல் போட்டு துணிச்சலாகவும் கடினமாகவும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு மக்களுக்கு உணவளிப்பதுடன் நம் தேச வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் மீனவர்கள் ஆகட்டும், அனைவரும் என்னை மிக ஆழமாக கவர்ந்துள்ளனர். நமது விவசாயிகள், மீனவர்கள், மாணவர்களுடனான எனது சந்திப்பு மிகவும் நிறைவைத் தந்தது.

சுதந்திரப் போராட்ட வீரர்களான இமானுவேல் சேகரன், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆகியோர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தும் போது, தேசத்துக்காக அவர்கள் செய்த தியாகங்களால் நான் பணிவும் ஊக்கமும் அடைந்தேன். தேசத்துக்காக அவர்கள் செய்த தியாகங்களால் நான் பணிவும் ஊக்கமும் அடைந்தேன். அந்த தலைவர்கள் நம் வாழ்கால, வருங்கால சந்ததியினர், அமிர்த காலத்தில் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற தங்களுடைய கனவுடன் கூடிய பாரதத்தைக் கட்டியெழுப்ப உந்துசக்தியாக இருப்பர். நமது பிரதமர் மோடி மீது மக்கள் கொண்டுள்ள அபரித அன்பும் அவரது எழுச்சியூட்டும் தலைமை மீது கொண்டுள்ள நம்பிக்கையும் வெகு அற்புதம். இவ்வாறு ஆளுநர் ரவி கூறியுள்ளார்.

இந்த பயணத்தின் போது நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி செல்லவில்லை. இது இப்போது சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக நாம் விசாரித்த போது, ஏற்கனவே ராமேஸ்வரம் கோவில், கலாம் நினைவிடம் ஆகியவற்றை ஆளுநர் ஆர்.என்.ரவி பார்வையிட்டிருக்கிறார். இம்முறை அவரது பயணத்தில் ராமேஸ்வரம் இடம்பெறவில்லை. இதனால் ராமேஸ்வரம் அருகே உள்ள கலாம் நினைவிடத்துக்கு அவர் செல்லக் கூடிய சாத்தியமும் இல்லை என்கின்றனர்.












Click it and Unblock the Notifications