Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநரின் அடிப்படை வேலை பட்டமளிப்பு விழா! அதற்கும் ரவிக்கு நேரமில்லை? இழுத்தடிப்பால் மாணவர்கள் ஏக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகள் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், தற்போது வேறொரு விஷயமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்தி மாணவர்களுக்கு பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தராமல் திட்டமிட்டு தாமதம் செய்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

ஒருபக்கம், தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்து வரும் ஆளுநர் ரவி, வேந்தர் என்ற முறையில் பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவுக்கும் ஒப்புதல் தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார் என்றால், அவர் என்ன வேலை தான் செய்கிறார்கள் என சமூக வலைதளங்களில் குரல்கள் எழுந்துள்ளன.

பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த, மாணவர்களுடன் கலந்துரையாடல் போன்ற நிகழ்வுகளையும் நடத்த வேண்டும் என ஆளுநர் மாளிகை அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. மாணவர்கள் மத்தியில் ஆளுநர், அரசியல் கருத்துகளைப் பேசுவதற்காக இந்த திட்டமாம்.

பட்டம் வழங்காமல் இழுத்தடிப்பது மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் சில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவியை சந்தித்து பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி கேட்டதாகவும், ஆனால், இதுவரை அவர்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 தாமதிக்கும் ஆளுநர்

தாமதிக்கும் ஆளுநர்

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதலே சர்ச்சைகள் அவரைச் சுற்றி வருகின்றன. தமிழ்நாடு அரசு, சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிய 20க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலந்தாழ்த்தி வருகிறார். ஆன்லைன் சூதாட்டங்களால் தற்கொலைகளும், குடும்பச் சீரழிவுகளும் தொடர்கதையாகி வரும் சூழலில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது தமிழ்நாடு அரசு. ஆனால், அந்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார். ஆன்லைன் சூதாட்டங்களால் உயிரிழப்புகள் தொடர்ந்து வந்தாலும், அதனை கண்டுகொள்ளாமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது பொதுமக்களை கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

ஆளுநரால் கொதிக்கும் அரசியல்

ஆளுநரால் கொதிக்கும் அரசியல்

அதேசமயம், விழாக்களில் பங்கேற்று, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பதவிக்கும், ஆளுங்கட்சியான திமுகவின் கொள்கைகளுக்கும் எதிராகப் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சனாதான தர்மத்தை உயர்த்திப் பிடித்து ஆளுநர் பேசி வருவது பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில், திராவிடக் கருத்தியலையும் விமர்சித்துப் பேசியுள்ளார் ஆளுநர். மேலும், தமிழ்நாடு என்று கூறுவதை விட தமிழகம் என்று அழைப்பதே சரியானது என்றும் ஆளுநர் ரவி பேசியிருப்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளையும் கொந்தளிக்கச் செய்துள்ளது.

என்னதான் செய்கிறார் ஆளுநர்

என்னதான் செய்கிறார் ஆளுநர்

இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராகச் செயல்படும் ஆளுநர், பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்துவதையும் தாமதிக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஒருபக்கம் அரசின் மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்குவதில்லை, வேந்தராக, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களையும் நடத்துவதில்லை என்றால் என்னதான் செய்கிறார் ஆளுநர் என்ற கேள்விகளை எழுப்புகின்றனர் அரசியல் கட்சியினர். சனாதனத்திற்கு ஆதரவாகப் பேசி ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளைப் பரப்புவதுதான் ஆளுநரின் பணியா என்றெல்லாம் காட்டமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா

தமிழ்நாட்டில் அரசுக்கு சொந்தமாக 21 பல்கலைக்கழகங்கள் உள்ளன. பெரும்பான்மையான பல்கலைக் கழகங்களின் இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, மே அல்லது ஜூன் மாதங்களில் முடிவுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டு பட்டம் வழங்கப்படும். பட்டம் வழங்கும் நடைமுறைகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படுவது வழக்கம். ஆனால், 2021-2022ஆம் ஆண்டில், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தவிர வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் இதுவரை பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை.

 இன்னும் வழங்கப்படவில்லை

இன்னும் வழங்கப்படவில்லை

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு சுமார் 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு தற்காலிகச் சான்றிதழ் வழங்கப்படும். அதன் செல்லுபடியாகும் காலம் 6 மாதங்கள் தான். கடந்த ஜூன் மாதம் வழங்கப்பட்ட தற்காலிக பட்டச் சான்றிதழ் இப்போது காலாவதியாகி விட்டது. இதுவரை பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு பட்டச்சான்றிதழ்கள் இன்னும் வழங்கப்படவில்லை. அதனால், மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 அனுமதி கேட்டும் பதில் இல்லை

அனுமதி கேட்டும் பதில் இல்லை

பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து இன்னும் அனுமதி அளிக்கப்படாதது தான் தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் கடந்த சில வாரங்களுகு முன்னர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி கேட்டதாகவும், ஆனால், இதுவரை அவர்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், பட்டமளிப்பு விழா நடத்த முடியாமல், மாணவர்களின் கோரிக்கைகளுக்கும் பதிலளிக்க முடியாமல் திணறி வருகின்றன பல்கலைக்கழக நிர்வாகங்கள்.

கண்டனம்

கண்டனம்

இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று முடிந்து சுமார் 8 மாதங்கள் கடந்த பின்னும் இன்னும் பட்டம் வழங்கப்படாததால், மேற்படிப்பு, வேலைவாய்ப்பு என அனைத்து விதங்களிலும் மாணவர்கள் இன்னலைச் சந்தித்து வருகின்றனர். தற்காலிக சான்றிதழ் 6 மாதங்கள் வரைதான் செல்லுபடியாகும். அதற்குள் பட்டச் சான்றிதழை மாணவர்கள் உயர்கல்வி மேற்கொள்ளும் கல்வி நிலையங்களிலோ, வேலை செய்யும் நிறுவனங்களிலோ கேட்பார்கள். ஆனால், தமிழ்நாட்டின் ஆளுநர் ரவியின் தாமதத்தால் தமிழ்நாட்டில் உள்ள 20 பல்கலைக்கழகங்களில் படித்த மாணவர்களும் அல்லலுற்று வருகின்றனர். மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடலாமா என்று சமூக ஆர்வலர்கள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

காரணம் இதுதானா?

காரணம் இதுதானா?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பட்டமளிப்பு விழா நடத்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்காததற்கு பின்னணியில் ஒரு காரணமும் கிசுகிசுக்கப்படுகிறது. ஆளுநர் ரவி, பல்கலைக்கழக விழாக்களில் அரசியல், சனாதன கருத்துகளைப் பேசி வருகிறார். அதற்கேற்ற வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மாணவர்கள் மத்தியில் தான் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளைப் பரப்புவதற்காக நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பதற்காகவே பட்டமளிப்பு விழாக்களுக்கு அனுமதி தராமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாகக் கூறப்படுகிறது. ஆளுநரின் இந்தச் செயலுக்கு சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+