பைடன் டூ மோடி வரை.. தலைவர்களின் பாதுகாவலர்கள் கருப்பு கண்ணாடி அணிவது ஏன் தெரியுமா? 3 காரணம் இதோ
சென்னை: அமெரிக்க அதிபர் ஜோபைடன் முதல் நம் நாட்டின் பிரதமர் மோடி வரை அனைவரின் பாதுகாவலர்களும் கருப்பு நிற சன்கிளாஸ் அணிந்து இருப்பதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் அதன் பின்னணியில் பாதுகாப்பு தொடர்பான 3 முக்கிய காரணங்கள் உள்ளது உங்களுக்கு தெரியுமா?
பொதுவாக ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின்போது அவர்களை சுற்றி கருப்புநிற உடை அணிந்து மெய்க்காவலர்கள் வலம் வருவதை நாம் பார்த்து இருக்கிறோம். இவர்கள் தான் அந்தந்த தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பாதுகாவலர்கள்.

கட்டுமஸ்தான உடல்வாகுடன் சுறுசுறுப்பாக தலைவர்களை சுற்றி வலம் இவர்கள் இந்தியாவில் உள்ள போலீஸ் மற்றும் ராணுவ படைப்பிரிவை சேர்ந்தவர்கள். இவர்கள் கோர்ட் அணிந்து மிடுக்கான நடையில் கண்களில் சன்கிளாஸ் அணிந்து 360 கோணத்தில் கண்களை சுழற்றி பாதுகாப்பு பணியை மேற்கொள்வதை நாம் பார்த்து இருக்கலாம்
கருப்புநிற சன்கிளாஸ் ஏன்: சரி இந்தியாவில் இருக்கும் பாதுகாவலர்கள் இப்படி இருக்க வெளிநாட்டு தலைவர்களான அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட பலரது மெய்க்காப்பாளர்களும் ஏறக்குறைய இதே பாணியில் தான் உடை அணிவார்கள். குறிப்பாக இந்திய உள்பட வெளிநாட்டு தலைவர்களின் மெய்க்காவலர்கள் அனைவருமே கண்களில் கருப்புநிற சன்கிளாஸ் அணிந்து இருப்பார்கள். நாம் பல இடங்களில் பார்த்து இருக்கலாம். இருப்பினும் ஏன் இந்தியா உள்பட அனைத்து நாட்டு தலைவர்களின் மெய்க்காவலர்களும் கருப்புநிற சன்கிளாசஸ் அணிவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என நினைத்து பார்த்தது உண்டா?.
3 முக்கிய காரணங்கள்: ஆம், இது வெறும் ஸ்டைலுக்காக அணிவது கிடையாது. மாறாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் முதல் பிரதமர் மோடி உள்பட பல நாடுகளின் தலைவர்களின் பாதுகாவலர்கள் கருப்பு நிற சன்கிளாசஸ் அணிவதன் பின்னணி 3 முக்கிய காரணங்கள் உள்ளன. அவை அனைத்தும் பாதுகாப்பு சார்ந்தவையாகவே இருக்கின்றன. அந்த 3 காரணங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த செய்திகள் பார்க்கலாம்.
முதலாவது காரணம்: இது நாம் அனைவரும் அறிந்ததே. அதாவது மதிய வேளைகளில் சூரியவெளிச்சம் என்பது மிகவும் அதிகமாக இருக்கும். இந்த வேளையில் கண்கள் சோர்வடையலாம். அதோடு கண்எரிச்சல், கண்ணீர் வரலாம். இதனை தடுப்பதில் கருப்புநிற சன்கிளாசஸ் உதவுகிறது. மேலும் பத்திரிகையாளர்கள் போட்டோக்கள் எடுக்கும்போது விழும் பிளாஷ் லைட்டில் இருந்து கண்களை இந்த சன்கிளாசஸ் பாதுகாக்கும். இதனால் தலைவர்களின் மெய்க்காப்பாளர்களான பாதுகாவலர்கள் கருப்புநிற கண்ணாடி அணிகின்றனர்.
2வது காரணம்: கருப்பு நிற சன்கிளாஸை ஒருவர் அணிந்தால் அவரது கண்களை யாராலும் நேரடியாக பார்க்க முடியாது. அதாவது வெளியில் இருந்து பார்ப்போருக்கு கருப்பு கண்ணாடி மட்டுமே தெரியும். இதன்மூலம் பாதுகாவலர்கள் யாரை, எந்த பக்கமாக பார்க்கின்றனர்? என்பதை எதிரிகள் அறியாமல் குழப்பத்திலேயே இருக்க வைக்க முடியும். இது 2வது காரணமாகும்.
3வது காரணம்: அதாவது 3வது காரணம் என்பது நேரடி பார்வையை தவிர்ப்பது. பொதுவாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாவலர்களின் கவனத்தை சிதறடிக்கும் முயற்சி நடக்கலாம். பொதுவாக இருவரின் கண்கள் நேரடியாக சில வினாடிகள் பார்த்தாலே கவனச்சிதறல் ஏற்படும். ஆனால் பாதுகாவலர் கருப்பு கண்ணாடி அணிந்தால் அவர் யாரை பார்க்கிறார் என்பதை பிறரால் அறிய முடியாது. இதனால் கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்பில்லை. இந்த 3 காரணங்கள் தான் பெரிய பெரிய தலைவர்களின் பாதுகாப்பில் ஈடுபடும் பாதுகாவலர்கள் கருப்பு நிற சன்கிளாசஸ் அணிய முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications