என்னாச்சு.. சசிகலா விடுதலையில் ஏதும் சிக்கல் இல்லையே.. கவலையில் அமமுக.. டெல்லி விரைந்த தினகரன்
டிடிவி தினகரனின் டெல்லி பயணம் பல சந்தேகங்களை எழுப்பி வருகிறது
சென்னை: சசிகலா விடுதலையில் ஏதோ சிக்கல் வரப் போவதாக பேசிக் கொள்கிறார்கள். இந்த நிலையில்தான் திடீரென டெல்லி பறந்த டிடிவி தினகரன் விஜயத்தால் அது மேலும் வலுவாகியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது தண்டனைக் காலம் முடிவடைவதையொட்டி நல்லெண்ண அடிப்படையில் விடுதலையாகும் காலம் நெருங்கி விட்டது.
ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் இப்போது ஒரு சிக்கல் வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சசிகலா
அதாவது சசிகலா சிறையில் இருந்தபோது அவருக்கு தனியாக சமையல் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டதாகவும். சசிகலா, இளவரசி ஆகியோர் ஷாப்பிங் போய் வந்ததாகவும் பரபரப்பான புகார் எழுந்தது. இதுதொடர்பாக வீடியோக்களும் வெளியாகின. இதுதான் இப்போது சசிகலாவுக்கு எதிராக கையில் எடுக்கப்படுவதாக சொல்கிறார்கள்.

அதிகாரிகள்
இதுதொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. ஆனால் அதில் சசிகலா லஞ்சம் கொடுத்து அதிகாரிகளை தன் பக்கம் மடக்கினார் என்று சொல்லப்படவில்லையாம். இப்போது அதைச் சேர்க்க முயற்சிகள் நடக்கிறதாம். முயற்சி செய்வது யார் என்று தெரியவில்லை.. ஆனால் சசிகலா வருகையை விரும்பாத சிலர்தான் டெல்லிக்கு அழுத்தம் கொடுத்து இதைச் செய்வதாக சொல்கிறார்கள்.

அதிர்ச்சி
இதனால் அமமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. சசிகலா பெயரை வழக்கில் சேர்த்து விட்டால் அவர் விடுதலையாக முடியாத நிலை ஏற்படும். குறைந்தது, அந்த புதிய வழக்கின் விசாரணை முடியும் வரை வெளியே வர முடியாது. இதைத்தான் அவரது எதிர்ப்பாளர்களும் விரும்புகிறார்களாம். அதாவது சசிகலா தமிழக சட்டசபைத் தேர்தல் முடியும் வரை வெளியில் வராமல் இருந்தால் நல்லது என்று இவர்கள் டெல்லி தரப்பிடம் அழாத குறையாக கோரிக்கை வைத்துள்ளனராம்.

பாதகம்
சசிகலா மட்டும் வெளியே வந்து விட்டால், அவரது சமுதாய ஓட்டுக்கள் மொத்தமாக பிரிந்து போகும் வாய்ப்புள்ளதாக அவரது எதிர்ப்பாளர்களில் ஒரு தரப்பு அஞ்சுகிறதாம். அப்படி நடந்தால் தங்களுக்குப் பாதகம் என்பது இவர்களின் கவலையாகும். எனவே அது நடக்காமல் இருக்க வேண்டுமானால் சின்னம்மா உள்ளேயே இருந்தால்தான் நல்லது என்று இவர்கள் பதறுகிறார்களாம்... இந்த சதி வேலைகளை முறியடிக்கும் வகையில்தான் தினகரன் டெல்லி போனதாக தகவல்கள் கூறுகின்றன. என்ன நடக்குதுன்னே புரியலையே!
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications