தங்கர் பச்சானுக்கு எம்பி சீட்டு தந்தது ஏன்? அவர் பாமக உறுப்பினரா? அது சரியா?
சென்னை: பாமகவில் உறுப்பினரே இல்லாதவர்களுக்கு ஏன் எம்பி சீட் வழங்கப்பட்டது என்று அக்கட்சியிலிருந்து வெளியேறிய ராஜேஸ்வரி பிரியா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பாமக புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் புதுச்சேரியில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அதில், இளைஞர் சங்கத் தலைவர் பதவியை தனது மகள் வழி பேரன் முகுந்தனுக்கு வழங்குவதாக ராமதாஸ் அறிவித்தார். அதில் உடன்பாடு இல்லாத அன்புமணி, "கட்சிக்கு வந்து 4 மாதங்கள்தான் ஆகிறது. அவனுக்கு என்ன தெரியும்? குடும்பத்திற்குள் இருப்பவர்களுக்கே பதவியை தரவேண்டுமா?" என்று எதிர்க் குரல் எழுப்பி இருந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை உண்டாக்கி இருந்தது.

இந்தக் கூட்டத்தின் அன்புமணியின் கருத்தை மேடையிலேயே ராமதாஸ் எதிர்த்துப் பேசினார். "இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதை ஏற்காதவர்கள் யாராக இருந்தாலும் கட்சியை விட்டு விலகிக் கொள்ளலாம். இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் தான் இருப்பார். அதுதான் என் முடிவு" என்றார்.
இதனைத் தொடர்ந்து பாமக இரண்டாம் கட்ட தலைவர்களுடன் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸைச் சந்தித்துப் பேசினார் அன்புமணி. சந்திப்புக்குப் பின்னர், "இது பாமக உட்கட்சி விவகாரம் என்பதால் அதைப் பற்றி ஊடகங்கள் விவாதிக்க வேண்டிய தேவை இல்லை. நாங்கள் பார்த்துக் கொள்வோம்" என்றார்.
ஆனால், இந்த விவகாரம் ஒரு அறைக்குள் யாருக்கும் தெரியாமல் நடந்திருந்தால் யாருமே விவாதித்திருக்க மாட்டார்கள். பொது மேடையில் பலரது முன்பு நடந்து அதை ஊடகங்களும் காட்டிவிட்டதால், பலரும் கருத்துச் சொல்லவே செய்வார்கள் என்று கூறி இருக்கிறார் பாமகவிலிருந்து வெளியேறிய அனைத்து மக்கள் அரசியல் கட்சியை நடத்தி வரும் ராஜேஸ்வரி பிரியா.
இவர் பாமக மாநில இளைஞரணி செயலாளர் முன்பு இருந்தவர். அன்புமணியால் ஈர்க்கப்பட்ட இவர் கடந்த 2017 டிசம்பரில் கட்சியில் இணைந்தார். அடுத்த 4 மாதங்களில் இவருக்கு இளைஞரணி தலைவர் பதவி வழங்கப்பட்டது. அப்போது 4 மாதங்களுக்கு முன் கட்சிக்குள் வந்தவருக்குப் பதவி வழங்க வேண்டுமா என அன்புமணி ஏன் கேட்கவில்லை என்பது ஊடகங்களின் கேள்வியாக உள்ளது.

பாமகவுக்குள் நடக்கும் உட்கட்சி மோதல் குறித்துப் பேசிய இருக்கும் ராஜேஸ்வரி பிரியா, "கட்சிக்கு யார் எப்போது வருகிறார் என்பது பிரச்சினை இல்லை. அவர் தகுதியாக இருக்கிறாரா? அவர் திறமையாகச் செயல்படுவாரா? என்பதுதான் முக்கியம்.
இன்று கட்சியில் வந்த உடனேயே பதவிக் கொடுக்கிறார்கள் என்கிறார் அன்புமணி. கட்சியில் உறுப்பினராகக் கூட இல்லாதவர்களுக்கு எம்பி சீட் கொடுத்தார்களே ஏன்? செளமியா அன்புமணி கட்சியில் இல்லை. அதேபோல் தங்கர்பச்சான் கட்சி உறுப்பினர் இல்லை. இருவருக்கும் எம்பி சீட் கொடுத்தார்களே ஏன்?" என்று கேட்கிறார்.
"பசுமை தாயகம் என்பது சுற்றுச்சூழல் இயக்கம். அதில்தான் செளமியா இருக்கிறார். பாமகவில் இல்லை. பின் ஏன் சீட்டு வழங்கப்பட்டது. என்னதான் அக்கா மகனாக இருந்தாலும் ஒரு பொது மேடையில் 'அவனுக்கு என்ன தெரியும்?' என்று ஒருமையில் பேசுகிறார் அன்புமணி. அது ஒரு தலைமைப் பண்பு கிடையாது. யாராக இருந்தாலும் மதிப்பளித்துப் பேச வேண்டும். அவர் ராமதாஸை மேடையிலேயே மறுத்து பேசி இருக்கக்கூடாது. அடுத்த நாள் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசி இருக்கலாம். அல்லது வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அதை வலியுறுத்தி இருக்கலாம்.
ஆனால், கட்சிக்குள் ஜனநாயக ரீதியாக இப்படியான குரல்கள் எழுவது சரியானதுதான் என்று சிலர் சொல்கிறார்கள். அந்த இடத்தில் அன்புமணி இல்லாமல் வேறு ஒரு நிர்வாகி அப்படி ராமதாஸை எதிர்த்துப் பேசிவிட முடியுமா? அதை உட்கட்சி ஜனநாயகம் என எடுத்துக் கொள்வார்களா?"என்கிறார்.
ஒரு கட்சியின் பொதுக்குழுவில் அன்புமணி தனக்கு தனி அலுவலகம் இருப்பதாக அறிவித்தது பற்றி இவர் சில சந்தேகங்களை முன்வைத்திருக்கிறார். பாமகவில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரை தலைமையாகக் கொண்டு செயல்படுவது? என்ற குழப்பத்தை அந்த அறிவிப்பு ஏற்படுத்தி இருப்பதாகவும் இவர் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
அன்புமணிக்கு கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்றும் அவரை மீறி ஒருவர் கட்சிக்குள் அடையாளத்தை உருவாக்கினால் தனக்கு ஆபத்து என என்றும் அவர் நினைக்கிறார். அந்த அதிகாரப் போட்டியில்தான் முகுந்தன் பதவி மோதல் ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார் ராஜேஸ்வரி.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications