கத்தரிக்கோல் பல்..எலும்பே உடையும்! சோறு போடும் ஆளுக்கு தான் அடங்கும்..இவ்வளவு கொடூரமானதா ராட்வீலர்?
சென்னை: சென்னையில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை ராட்வீலர் வகை நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராட்வீலர் இன நாய்களை வளர்க்க இந்தியாவில் தடை ஏன்? அதன் ஆக்ரோஷ குணத்துக்கு என்ன காரணம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்..
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி அருகே உள்ள மாநகராட்சி பூங்காவில் ரகு என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். அவருடன் அவரது மனைவி சோனியா 5 வயது மகள் சுதக்ஷா ஆகியோர் அங்கேயே தங்கியிருந்தனர்.

பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று ரகு விழுப்புரம் சென்றுள்ளார். இந்நிலையில் அவரது மகளும் மனைவியும் அங்கே இருந்தனர். இந்நிலையில் காலையில் பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி தான் வளர்க்கும் இரண்டு ராட்வீலர் வகை நாய்களுடன் பூங்காவுக்கு நடை பயிற்சிக்குச் சென்றார்.
சிறுமிக்கு சிகிச்சை: அப்போது சுதக்ஷாவை இரண்டு நாய்களும் கடித்துக் குதறின. அப்போது அதனை புகழேந்தி வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில் புகழேந்தி வளர்த்த ராட்வீலர் வகை நாய்கள் இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட இனம் எனவும் இது தொடர்பாக அவரிடம் லைசன்ஸ் இல்லாததும் தெரிய வந்தது.
மக்கள் ஆர்வம்: வீட்டில் நாய்கள் உள்ளிட்டவற்றை வளர்க்க கடும் கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் தடையை மீறி அவர் நாயை வளர்த்து வந்ததும் அம்பலமாகி இருக்கிறது. இந்த நிலையில் ராட்வீலர் நாய்கள் குறித்து தெரிந்து கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் ராட்வீலர் வகை நாய்கள் மிகவும் ஆபத்தானவை. இந்தியாவைப் பொறுத்தவரை ராட்வீலருக்கு மட்டுமல்லாமல் 23 நாய்களுக்கு தடை இருக்கிறது.
சென்னையில் அதிர்ச்சி: அந்த வகையில் பிட்புல், பெரியர், நாசிட்டிஃபீஸ், அமெரிக்கன் புல்டாக், சவுத் ரஷ்யன் ஷெப்பர்ட் டாக் உள்ளிட்ட நாய்களுக்கு தடைகள் இருக்கிறது. இவை அனைத்துமே வளர்த்தவர்களை தவிர மற்றவர்களை மிகக் கொடூரமாக தாக்கும் தன்மை கொண்டவை. குறிப்பாக உரிமையாளருக்கு மட்டும் கட்டுப்படும் ராட்வீலர் வகை நாய்கள் மற்றவர்களை எந்தவித அச்சமும் இன்றி கடிக்கக் கூடியது. இரு உரிமையாளர்கள் அந்த நாயை பாசத்தோடு வளர்த்து வந்தாலும் தினமும் யார் அந்த நாய்க்கு உணவு வைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே கட்டுப்படும் மற்றவரை அது கொடூரமாக தாக்க தயங்காது.
கட்டுக்கோப்பான உடலமைப்பு: உடல்ரீதியாக மிகப்பெரியதாக இருக்கும் ராட்வீலர் நாய்கள், ஜிம்முக்கு செல்லும் ஒரு நபரைப் போல கட்டுக்கோப்பான உடலமைப்புடன் இருக்கும். நம்ப முடியாத அளவு வலிமை கொண்ட அவை ஒரு வயது வந்த மனிதனை எளிதாக வீழ்த்த முடியும். மற்ற வகை நாய்கள் ஒரு மனிதனை தாக்கலாம் என முடிவெடுக்க ஒரு நிமிடம் எடுத்துக் கொள்கிறது என்றால் ராட்வீலர் வகை நாய்கள் பத்து நொடிகளுக்குள் ஒருவரை தாக்க முடிவெடுத்து தாக்கி விடும். அதன் பற்கள் கத்தரிக்கோல் போல வரிசையாக
அமைந்திருக்கிறது. ஒரு மனிதனை கையில் முழு பலத்தை கொண்டு இந்த வகை நாய் கடித்தால் எலும்பு முறிவு ஏற்படக்கூட வாய்ப்புள்ளது.
பழங்கால வரலாறு: தற்போது மட்டுமல்ல பழங்காலத்தில் இருந்தே செல்லப்பிராணிகளாக மட்டுமல்லாமல் காவலர்களாகவும் ராட்வீலர் வகை நாய்கள் இருந்திருக்கிறது. ரோமானியர்கள் காலத்தில் இருந்தே அந்த வகை நாய்களை கால்நடைகளை மேய்ப்பது, வீடுகள் பண்ணைகளை பாதுகாப்பது, வண்டிகளை இழுத்துச் செல்ல பயன்படுத்தியிருக்கின்றனர். கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் இருக்கும் ராட்வீலர் வகை நாய்கள் அந்த காலங்களில் வண்டிகளை இழுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்றால் அதன் பலத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ரோமானியர்கள் தங்கள் கால்நடைகளை வளர்க்கும் போது ஓநாய்களிடம் இருந்து காப்பதற்காக ராட்வீலர் வகை நாய்களை வளர்த்திருக்கின்றனர் என வரலாறுகள் இருக்கிறது.

தடை எங்கு?: தமிழ்நாடு- இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் ராட்வீலர் வகை நாய்களால் தாக்கப்பட்டவர்கள் மரணம் அடைந்த சம்பவங்கள் அதிகம் இருக்கின்றன. சக்தி வாய்ந்த தாடைகளை கொண்ட இவை ஒரு குழந்தையின் தலை முழுவதையும் கடித்து நொறுக்கும் தன்மை கொண்டது. மேலும் கடித்த பிறகும் அந்த பிடியிலிருந்து கடி வாங்கியவரை விடாது. இஸ்ரேல், ரஷ்யா, ஸ்பெயின், உக்ரைன், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் இந்த வகை நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
என்ன செய்யலாம்: இந்த வகை நாய்களை வளர்த்தாலும் அதனை கூண்டிலோ அல்லது மூடப்பட்ட நிலங்களிலோ வளர்ப்பதுதான் நல்லது. பொதுமக்களை பார்க்கும்போது திடீரென ஆக்ரோஷமடைந்து அவர்களை எந்த நேரமும் தாக்குவதற்கு தயங்காத இந்த வகை நாயை, பயிற்சி அளித்தே வளர்க்க வேண்டும் எனும் கால்நடை ஆர்வலர்கள்,பொது இடங்களில் ராட்வீலர் உள்ளிட்ட நாய்களை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications