அவ்வளவு கஷ்டப்பட்டாரே! தமிழக வீரரை பட்டென அழைத்த டிராவிட்.. இந்திய டீமே மாறும்.. எதிர்பாராத டிவிஸ்ட்
சென்னை: இந்திய அணியில் வீரர்கள் அடிக்கடி காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறுவது வழக்கம் ஆகி உள்ளது. காயத்தின் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் ஆடாத பும்ரா, மீண்டும் உலகக் கோப்பை டி 20 தொடருக்கு முன்பாக காயம் அடைந்துள்ளார். அதேபோல் ஜடேஜாவும் காயம் காரணமாக ஆசிய கோப்பை, டி 20 உலகக் கோப்பை தொடர் இரண்டிலும் ஆடவில்லை.
இன்னொரு பக்கம் இவர்களுக்கு மாற்றாக வந்த வீரர்களும் சரியாக பவுலிங் செய்யவில்லை. இதனால் இந்திய அணி மிகவும் கஷ்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் புதிய திருப்பமாக தீபக் சாஹரும் காயம் அடைந்துள்ளார்.
தீபக் சாஹர் கடந்த தென்னாபிரிக்க டி 20 தொடரில் ஆடினார். அதேபோல் தற்போது ஒருநாள் தொடரிலும் அவர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
ஆனால் இப்போது அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டு உள்ளது .

தீபக் சாஹர்
தீபக் சாஹர் நன்றாக ஸ்விங் செய்ய கூடியவர். பவர் பிளேவில் சிறப்பாக பவுலிங் செய்வார். அதேபோல் விக்கெட்டுகளை எடுப்பார். டெத் ஓவர்களில் அவ்வளவு சிறப்பாக இவர் பவுலிங் செய்தது இல்லை. என்றாலும் பவர் பிளேவில் சிறப்பாக பவுலிங் செய்து இருக்கிறார். இதனால் தென்னாபிரிக்க தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இன்னொரு பக்கம் அவர் நன்றாக பேட்டிங்கும் செய்ய கூடியவர். கடந்த முதல் ஒருநாள் போட்டியில் கூட அவர் நன்றாக பேட்டிங் செய்தார்.

பேட்டிங்
ஆனால் தீபக் சாஹருக்கு அடிக்கடி காயம் ஏற்படுகிறது. இவர் ஆசிய கோப்பை உட்பட பெரிய தொடர்களில் ஆடாமல் இருந்தது கூட இந்த காயம் காரணமாகவே. ஏன் கடந்த ஐபிஎல் தொடரில் கூட இவர் அதிக தொகைக்கு ஏலம் சென்றார். ஆனால் காயம் காரணமாக இவரால் தொடர் முழுக்க ஆடவே முடியவில்லை. அந்த தொடரில் சிஎஸ்கே அணியின் பவுலிங்கும் மிக மோசமாக இருந்தது. இந்த நிலையில்தான் இந்திய அணியில் மீண்டும் அவர் காயம் காரணமாக ஓரம்கட்டப்பட்டு உள்ளார்.

வாஷிங்டன் சுந்தர்
இந்த நிலையில்தான் தற்போது இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. சுந்தர் சாஹருக்கு மாற்றாக அணியில் இடம் பிடித்து உள்ளார். சுந்தர் ஏற்கனவே காயம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று கஷ்டப்பட்டு வந்தார். அதன்பின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இவர் காயத்தில் இருந்து மீண்டும் பின்னர் பயிற்சியும் பெற்றார். அங்கு அவர் பிட்னஸை நிரூபித்தார்.

பிட்னஸ்
இந்த நிலையில்தான் பல கஷ்டங்களுக்கு பின் வாய்ப்பிற்காக காத்து இருந்த சுந்தரை மீண்டும் டிராவிட் இந்திய அணியில் இறக்கி உள்ளார். தவான் தலைமையிலான அணியில் அவர் மீண்டும் இடம் பிடித்து இருக்கிறார். இதன் மூலம் இந்திய அணியின் பார்முலாவே பெரிதாக மாறும். ஏனென்றால் இவர் நன்றாக பேட்டிங் செய்வார். அதேபோல் மிடில் ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்வார். ரன் செல்லாமல் கட்டுப்படுத்துவார்.

இந்திய அணி
இந்த தென்னாப்பிரிக்க தொடரில் சிறப்பாக ஆடும் பட்சத்தில் கடைசி நேரத்தில் டி 20 உலகக் கோப்பை இந்திய அணியில் சுந்தர் இடம்பெறும் வாய்ப்புகளும் உள்ளன. ரவி பிஸ்னோய்க்கு பதிலாக இன்று ஆடும் இந்திய அணியில் சுந்தர் இடம்பெற வாய்ப்பு உள்ளது. ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அவேஷ் கான், முகமது சிராஜ் ஆகியோர் இன்று ஆடும் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புகள் உள்ளன.

சுந்தர்
இவர் சிறப்பாக ஆடும் பட்சத்தில் கடைசி நேரத்தில் டி 20 உலகக் கோப்பை இந்திய அணியில் சுந்தர் இடம்பெறும் வாய்ப்புகளும் உள்ளன. எப்படி என்றால் ஜடேஜா தற்போது அணியில் இல்லை. இரண்டு ஸ்பின் பவுலர்கள் தேவை. அஸ்வின், சாஹல் இருவருமே சரியாக பவுலிங் செய்வது இல்லை. இதனால் அக்சர் மட்டுமே நம்பிக்கை அளிக்கிறார். அஸ்வின், சாஹலுக்கு பதிலாக சுந்தரை மீண்டும் அணிக்குள் கொண்டு வரலாம். ஆனால் அவர் இதற்கு, தென்னாப்பிரிக்க தொடரில் தன்னை நிரூபிக்க வேண்டும். இன்று அவர் ஆடும் பட்சத்தில் அது நல்ல வாய்ப்பாக அவருக்கு இருக்கும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications