இஸ்ரோ மாற்றிய சின்ன விஷயம்! சந்திரயான் 2க்கு நேர்ந்த கதி..சந்திரயான் 3க்கு ஏற்படாது! ஏன் தெரியுமா?
சென்னை: சந்திரயான் 2 திட்டம் தோல்வி அடைந்த நிலையில் அதிக எதிர்பார்ப்புடன் தற்போது சந்திரயான் 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் இன்று நிலவில் இறங்க உள்ளது. இன்று மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்க உள்ளது.
நிலவை ஆய்வு செய்யும் இந்தியாவின் விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோவின் திட்டம்தான் சந்திரயான். இந்த திட்டத்தின் 3வது பகுதியான சந்திரயான் 3வது திட்டம் விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் விக்ரம் லேண்டர் தற்போது நிலவை சுற்றி வந்து கொண்டு இருக்கிறது.

சந்திரயான் 2 தோல்வி: முன்னதாக நிலவை ஆய்வு செய்யும் பொருட்டு சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்டது. ஜூலை 22, 2019ம் ஆண்டு நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திராயன் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் அதே வருடம் செப்டம்பர் மாதம் 6ம் தேதி நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அதன் லேண்டர் விக்ரம் தரையில் இறங்கும் முன் 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன்பின்னர்தான் நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
சந்திரயான் 2 திட்டம் தோல்வி அடைந்த நிலையில் அதிக எதிர்பார்ப்புடன் தற்போது சந்திரயான் 3 திட்டம் நாளை விண்ணை நோக்கி ஏவப்பட உள்ளது. இந்த சந்திரயான் 3 திட்டத்திற்கும் 2 திட்டத்திற்கும் இடையில் முக்கியமான சில வேறுபாடுகள் உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
ஆர்பிட்டர் இல்லை: சந்திரயான்-2வில் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை இருந்தது. அதேசமயம் சந்திரயான்-3 ஆர்பிட்டர் இல்லை. இதில் ஒரு லேண்டர்(LM), ப்ராபல்ஷன் மாட்யூல் (PM) மற்றும் ஒரு ரோவர் ஆகியவை உள்ளது.
இதில் சந்திரயான் 2 ஆர்பிட்டர் என்பது நிலவை சுற்றி ஆய்வு செய்யும். ஆனால் சந்திரயான் 3ல் ப்ரோபல்ஷன் மாடுல் அப்படி இல்லை. இது சந்திராயன் ராக்கெட்டின் தலை பகுதியில் இருக்கும் மொத்த அமைப்பில் கீழ் உள்ள பகுதி ஆகும். சந்திராயன் 3 பூமி வட்டப்பாதையில் நிறுத்தப்பட்ட பின் அதை நிலவை நோக்கி கொண்டு செல்ல அவ்வப்போது பாதை மாற்ற பயன்படும் சிறிய எஞ்சின்தான் இந்த ப்ரோபல்ஷன் மாடுல். பூமியின் வட்டப்பாதையில் இருந்து நிலவில் இருந்து 100 கிமீ தூரம் உள்ள வட்டப்பாதை வரை சந்திராயன் 3வை கொண்டு செல்ல போவது இந்த ப்ரோபல்ஷன் மாடுல்தான். இது ஒரு பாக்ஸ் போல கீழே ராக்கெட் போன்ற திரஸ்டர்கள் கொண்ட அமைப்பு ஆகும்.
இதில் திரஸ்டர்களுக்கு சார்ஜ் கொடுப்பதற்காக சோலார் பேனல் இருக்கும். இதில்தான் லேண்டர் பொருத்தப்பட்டு இருக்கும். அதன் உள்ளே ரோவர் இருக்கும். இதில் லேண்டர், ரோவர் தவிர்த்து ஷேப் - Spectro-polarimetry of Habitable Planet Earth (SHAPE) எனப்படும் அமைப்பும் உள்ளது. இது பூமியின் அளவை குறித்த ஆய்வை நிலவின் வட்டப்பாதையில் இருந்து மேற்கொள்ளும்.
வேறு இடத்தில் இறங்குகிறது: இதனால்தான் தற்போது சந்திரயான் 2 ஆர்பிட்டர் உடன் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் தொடர்பை ஏற்படுத்தி உள்ளது. சந்திரயான் நிலவில் 70.9 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றும் 22.7 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை பகுதியில் களமிறங்க முயன்றது. ஆனால் சந்திரயான் 3 வேறு இடத்தில் தரையிறங்க உள்ளது.
அதேசமயம் சந்திரயான் 3 திட்டத்தில் 69.36 டிகிரி தெற்கு, 32.34 டிகிரி கிழக்கு பகுதியில் கொஞ்சம் தள்ளி தரையிறங்க உள்ளது. நிலவின் தென் துருவப் பகுதியில் ரோவர் தரையிறங்கும். 2 கிமீ வேகத்திற்கும் குறைவாக இது தரையிறங்கும்.
எத்தனை நாட்கள்: தரையிறங்கிய பிறகு, லேண்டர் 14 பூமி நாட்களுக்கு (ஒரு சந்திர நாள்) மேற்பரப்பில் பொருட்களை இந்த ரோவர் சேகரிக்கும். இரண்டுமே இதே அளவு நாட்கள் நிலவில் ஆய்வு செய்ய வேண்டும் என்றுதான் திட்டமிடப்பட்டது.
வேற்று நாட்டு ஆய்வுகள் இல்லை: சந்திரயான் 2ல் இருந்தது போல அமெரிக்க ஆய்வு ஊடகங்களோ வேறு நாட்டு ஊடகங்களோ சந்திரயான் 3ல் இல்லை.
அந்த விபத்து நடக்காது?: சந்திரயான் 2ல் இருந்த அதே விக்ரம், பிரக்யான் பெயர் கொண்ட லேண்டர், ரோவர்கள்தான் இதிலும் உள்ளன. சந்திரயான்-3 விண்கலத்தில் விக்ரம் (சமஸ்கிருதத்தில் "வீரம்") என்ற பெயரிடப்பட்ட லேண்டர் உள்ளது. இது பாக்ஸ் போன்ற தோற்றம் கொண்டது ஆகும். உள்ளே இருக்கும் பிரக்யான் ரோவரை நிலவில் களமிறக்க இதுதான் உதவும். இது தரையிறங்கும் பகுதியில் வெப்ப கடத்துத்திறனைப் பதிவுசெய்யவும் மற்றும் நிலநடுக்கங்களை உணரவும் உதவும். இதில் நான்கு கால் பகுதிகள் இருக்கும். அதேபோல் நான்கு பக்கமும் திரஸ்டர்கள் இருக்கும். இது 800 நியுட்டன் பவரை கொடுக்க கூடியது.
சந்திரயான் 2 லேண்டரில் 5 திரஸ்டர்கள் இருந்தன. ஒன்று செயல் படமால் போனால் பாதுகாப்பிற்கு 5வதாக ஒரு திரஸ்டர் சந்திரயான் 2 லேண்டரில் இருந்தது. ஆனால் கூடுதல் திரஸ்டர்கள் இருப்பது கூடுதல் எடையை ஏற்படுத்தி விபத்திற்கு காரணமாக இருப்பதால் சந்திரயான் 3ல் உள்ள லேண்டரில் 4 திரஸ்டர்கள் மட்டுமே உள்ளன.

முன்பு சந்திராயன் 2ல் எல்லா திரஸ்டர்களும் ஒரே நேரத்தில் கீழே இறங்கும் போது இயங்கும். ஆனால் சந்திரயான் 3ல் முதலில் 2 திரஸ்டர்கள் செயல்படும். அவை செயல் இழக்கும் பட்சத்தில் மற்ற 2 திரஸ்டர்கள் இயங்கும்.
கேமரா இருக்கும்: முன்பு சந்திரயான் 2 சிக்னல்களை மட்டுமே பூமிக்கு அனுப்பும். இதை வைத்தே ரோவர் சரியாக செல்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடித்தோம். ஆனாலும் சிக்னல் போனால் ரோவருக்கு என்ன ஆனது என்று தெரியாது. மாறாக சந்திரயான் 3ல் கேமரா இருக்கும். இவை ஒவ்வொரு மீட்டருக்கும் புகைப்படம் எடுத்து அனுப்பும்.
இதனால் ரோவர் எங்கே செல்கிறது எப்படி செல்கிறது என்று தெரியும். அதோடு நிலவின் தரைப்பகுதியில் பெரிய கல் இருந்தால் ரோவரை தள்ளி நகர்ந்து தரையிறங்க வைக்க முடியும். கேமரா மூலம் ரோவரை இனி சிறப்பாக கணிகாணிக்க முடியும். இந்த முறை சந்திரயான் 3ல் உள்ள சென்சார் மற்றும் கேமரா காரணமாக பாறைகளை தவிர்த்துவிட்டு சமதளத்தில் ரோவர் களமிறங்க முடியும். இதனால் சந்திரயான் 2க்கு ஏற்பட்ட நிலைமை இந்த முறை சந்திரயான் 3க்கு ஏற்பட வாய்ப்பு குறைவு என்கிறார்கள்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications