"ஹலோ சி.ஆர்.எஸ்".. வளர்மதி கூப்பிட.. சரஸ்வதி சிரிக்க.. திருவல்லிக்கேணியில் திடீர் திருப்பம்!
அமமுக - அதிமுக இணைப்பு விரைவில் நிகழும் என்கிறார்கள்
சென்னை: திமுகவை சமாளிக்க முடியாமல் அதிமுகவும், அமமுகவும் திணறி வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில்தான் திருவல்லிக்கேணியில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது...!
ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவின் நிலைமையே வேறுமாதிரியாக இருந்தது.. கட்சி பொறுப்பாளர்கள் எதிர்க்கட்சிகளுடன் பேசுவது என்பதே அபூர்வம்.. தெரிந்தவர்களாக இருந்தாலும்சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி.. அவங்க வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வதற்கு கூட நடுங்குவார்கள். தயக்கம் காட்டுவார்கள்.
அதையும் மீறி யாராவது கலந்து கொண்டாலோ, நெருக்கம் காட்டினாலோ, "அடிமட்ட உறுப்பினர் பதவியில் இருந்து" என்ற அறிக்கை மின்னல் வேகத்தில் வந்து விழும்... அதனால் திமுக-அதிமுக தரப்பினர் நேருக்கு நேர் பார்த்தால்கூட முகத்தை திருப்பி செல்லும் நிலை இருந்தது.

இயல்பு
ஆனால் இப்போது அப்படி ஒரு நிலை இல்லை... பயம், நடுக்கங்கள் உடைந்து விழுந்து கொண்டிருக்கின்றன. கட்சியின் பொறுப்பாளர்கள் சர்வ சாதாரணமான இயல்புடன் நடந்து கொள்கிறார்கள்.. குறிப்பாக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்தே அரசியல் கட்சிகளுக்குள் இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது.. அதேசமயம், திமுகவின் இந்த அசுர வளர்ச்சி எதிர்க்கட்சிகளுக்கு தினம் தினம் கலக்கம் தந்து வருகிறது.

மாஜிக்கள்
அந்த வகையில், அளவுக்கு அதிகமாக பீதியில் உள்ளது அதிமுகதான்.. ஊழல் புரிந்த முன்னாள்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதால், இந்த கலக்கம் மேலும் அதிகமாக உள்ளது.. மற்றொருபுறம் சசிகலாவின் ஆடியோ ரிலீஸ்களும் பதட்டத்தை உண்டு பண்ணி உள்ளன.. இதனால் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அதிமுக தொண்டர்கள் குழம்பி போயுள்ளனர்.

சமாளிப்பு
கூடிய விரைவில், சசிகலா அதிமுகவை கைப்பற்றக்கூடிய நிலைமை வரலாம் என்றும் தெரிகிறது.. திமுகவை சமாளிக்க இரு கட்சிகளும் இணைந்தால் அது அதிமுகவுக்கு பலம் தரும் என்றும் நம்பப்படுகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது.. நேற்று முன்தினம் கண்ணியத்துக்குரிய காயிதேமில்லத் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது இல்லையா?

பள்ளிவாசல்
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவருடைய நினைவிடத்தில், முதல்வர் ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.. ஸ்டாலின் சென்றபிறகு அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.. அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வளர்மதி போன்றோர் அஞ்சலி செலுத்தினர்.. இவர்கள் அஞ்சலி செலுத்தி கொண்டிருந்தபோதே, அங்கு மாஜி அமைச்சர் செந்தமிழன் வந்திருந்தார்..

மறைவு
இவர் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர்.. பிறகு அவரது மறைவுக்கு பிறகு அமமுகவுக்கு சென்றுவிட்டார். அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் இவரை பார்த்த ஜெயக்குமார், "வாங்க... செந்தமிழன்" என்று வாயார மகிழ்ச்சி பொங்க கூப்பிட்டார்.. அதேபோல, அங்கு அமமுகவின் சிஆர் சரஸ்வதி வந்தார்.. அவரை பார்த்ததும், "ஹலோ சிஆர்எஸ்... எப்படி இருக்கீங்க" என்று வளர்மதி கேட்கவும், சிஆர் சரஸ்வதி பதிலுக்கு வளர்மதியிடம் நலம் விசாரித்தார்.

சாத்தியக்கூறு
கடந்த 4 வருடங்களில் அதிமுக, அமமுக தலைவர்களிடையே சரியான பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது.. மேலும், அமமுகவை அதிமுகவுடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை என்று ஜெயக்குமார் அடித்து சொன்னார்.. ஆனால், இப்போது நிலைமை மாறுகிறது.. காலங்கள் மாறுகிறது.. காட்சிகளும் மாறுகின்றன.. எதற்கான குறியீடு இது என்றுதான் தெரியவில்லை.. !
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications