அடிச்சது சான்ஸ்.. எல். முருகன் மத்திய அமைச்சராகிறார்.. ஓபி ரவீந்திரநாத்துக்கு ஏமாற்றம்!
எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சென்னை: இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் இருக்குமா? என்ற ரீதியில் நிறைய எதிர்பார்ப்புகள் எழுந்தன. அந்த வகையில், எல்.முருகனுக்கு அமைச்சர் பதவி உறுதியாக கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
அந்த வகையில் 2 தமிழக தலைவர்கள் மிகுந்த கவனத்தை பெற்று வருகிறார்கள்... ஒருவர் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், இன்னொருவர் எம்பி ஓபி ரவீந்திரநாத்குமார்.
இதில் ரவீந்திரநாத் குமாரை பொறுத்தவரை கிட்டத்தட்ட 3 வருடமாகவே கேபினட் பதவிக்கு முயன்று வருகிறார்.. முதல்வர் வேட்பாளர் விவகாரம், சசிகலாவின் வருகை, எடப்பாடியின் அதிகாரம் போன்ற எத்தனையோ விஷயங்களில் ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல் இருப்பினும், மகனுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காகவே அமைதி காத்தவர்.

மவுனம்
ஓபிஎஸ் ஏன் வாய் திறக்கவில்லை என்று பல மீடியாக்கள் கேள்விகளை கேட்டதையும் மறக்க முடியாது.. ஆனால், இப்போது நிலைமை சிக்கல் ஆகும் போல தெரிகிறது.. இவருக்கு அந்த முறை அமைச்சரவை விரிவாக்கத்தில் இடமிருக்காது என்றே டெல்லி தகவல்கள் சொல்கின்றன.. இதற்கு 2வித காரணங்கள் சொல்லப்படுகின்றன.

சீனியர்கள்
ஒன்று, அதிமுகவில் இவர் சூப்பர் ஜூனியர்.. எத்தனையோ சீனியர்கள் கட்சிக்குள் இருக்கும்போது, வெற்றி பெற்ற ஒரே ஒரு காரணத்துக்காக மத்திய அமைச்சர் பதவியை தர கூடாது என்று அதிமுக தலைகளிடம் இருந்து எதிரப்பு குரல்கள் எழுகின்றன.. இப்படி ஒரு முட்டுக்கட்டை ரவீந்திரநாத்துக்கு இப்போதும் உள்ளது.. எனவே,தான் பதவி கிடைக்காது என்கிறார்கள்.

ரவீந்திரநாத்
ஆனால், தீவிர பாஜக விசுவாசியாக ரவீந்திரநாத் இருப்பதால் அவரது கையே இப்போதைக்கு ஓங்கியுள்ளது என்றும் ஒரு தரப்பு சொல்கிறது.. மற்றொரு காரணம், அதிமுக மாஜிக்களில் மீதான ஊழல் புகார் லிஸ்ட்டில் ஓபிஎஸ் பெயரும் உள்ளது.. நாளைக்கு இவர் மீதும் திமுக நடவடிக்கை எடுத்தால், அது பாஜகவுக்கு சங்கடத்தை தந்துவிடும்.. இதுபோக, நேற்று சிவி சண்முகம் பேசிய பேச்சு நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது. அதனால், இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி இருக்காது என்றுகூட தெரிகிறது.

திமுக
அப்படியென்றால், பாஜக திமுகவுடன் இணக்கம் ஆகவும் நிறைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.. இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால், ஓபிஆருக்கு பதவி இல்லை என்றே தெரிகிறது.. அடுத்த முறை பார்த்துக்கலாம் என்று பாஜக தலைமை சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்.. மோடி மீது ஓபிஎஸ் குடும்பம் தனி பாசம், மரியாதை வைத்துள்ள நிலையில், இதற்கு ஓகே சொல்லவும் தயங்க மாட்டார்கள் என்கிறார்கள்.

டெல்லி
ஆனால், எல்.முருகனுக்கு நிறைய சான்ஸ் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.. அமைச்சர் பதவியை பெற்றே தீருவது என்று டெல்லியிலேயே முருகன் முகாமிட்டுள்ளதால் இந்த பரபரப்பு மேலும் எகிறியிருக்கிறது... இந்த ஒரு வருடமாகவே தமிழகத்தில் முருகனின் செயல்பாடுகள் பாஜகவுக்கு திருப்தியை தந்து வரும் நிலையில், முருகனுக்கு ஓகே ஆகும் என்றே சொல்லப்பட்டது... எதிர்பார்த்தது போலவே முருகனுக்கு அடிச்சது சான்ஸ்.. நிச்சயம் அமைச்சர் பதவி இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது,. இன்னும் சற்று நேரத்தில் இதற்கான அறிவிப்பும் வெளியாக உள்ளது.












Click it and Unblock the Notifications