• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

திருமாவுக்கு எதிராக பாஜகவின் ஆவேசம்.. மொத்த தலித் வாக்குகளையும் இழக்கும் அபாயம்.. செம ஸ்கெட்ச்!

|

சென்னை: திருமாவளவன் ஏன் மனு ஸ்மிருதியை கையில் எடுத்தார் என்பதற்கான காரணத்தை அப்படியே விட்டு விட்டு சற்றே தேர்தல் நோக்கில் உற்று நோக்கிப் பார்த்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போடும் ஸ்கெட்டை உணர்ந்து உள்வாங்க முடியும்... அது பாஜகவுக்குத்தான் பெரிய ஆபத்தைக் கொடுக்கக் காத்திருக்கிறது.

ஒட்டுமொத்தமாக பாஜகவை விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக திரும்பச் செய்வது.. அதன் மூலம் தமிழகம் முழுவதும் தலித் வாக்குகளை மொத்தமாக பாஜகவுக்கு எதிராக திருப்புவது.. இதுதான் அந்த ஸ்கெட்ச்சே.. கூட்டிக் கழிச்சுப் பாருங்க.. கணக்குப் போட்ட குமாரசாமிக்கே தலை குழம்பிப் போகும்.

Will Dalits rally against BJP in support of VCK and Thiurmavalavan

ரொம்ப சிம்பிளான லாஜிக்தான் இது.. ஒரே ஒரு கல்லை அடித்து மொத்தக் குளத்தையும் குழம்ப செய்யும் ரொம்பப் பழசான ஐடியாதான் இது. இந்த யோசனையை யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இது திருமாவளவனுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் மட்டுமல்லாமல் திமுக கூட்டணிக்குமே கூட லாபம் பயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மனு தர்மத்தை எதிர்த்து காலம் காலமாக பல தலைவர்களும் குரல் கொடுத்தபடிதான் உள்ளனர். அது புதிய விஷயமே இல்லை. ஆனால் திருமாவளவன் வலிமையாக இப்போது குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். தீவிரமாக இறங்கி விட்டார். இதுதான் பாஜகவினரையும், இந்து அமைப்புகளையும் கொந்தளிக்க வைத்துள்ளது. ஆனால் திருமாவளவன் படு தெளிவாகத்தான் பேசியுள்ளார். தன் பக்கம் எந்த குற்றச்சாட்டையும் வைக்க முடியாத அளவுக்குத்தான் தெளிவாக அவரது பேச்சும் உள்ளது. முழுப் பேச்சைக் கேட்டால் அது புரியும்.

மனுஸ்மிருதி விவகாரம்: திருமாவளவன் பேசியதற்காக மு.க.ஸ்டாலினுக்கு பாஜக பொதுச்செயலர் சிடி ரவி கண்டனம்

ஆனால் இப்போது இந்த விவகாரத்தை கையில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்றுதான் பலரும் கேட்கின்றனர். ஆனால் அதற்கும் திருமாவிடம் நிச்சயம் பதில் இருக்கிறது. இப்போது மட்டும் அவர் பேசவில்லை. காலம் காலமாக அவரும்தான் இதை எதிர்த்துப் பேசி வருகிறார். பாஜகதான் இப்போது இதை எதிர்த்து தீவிரமாக களம் இறங்கியுள்ளது. அக்கட்சிக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு போராட்டமாக மாற்றிக் கொள்கிறது. காரணம், தனது இருப்பை வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அந்தக் கட்சிக்கு.

அதேபோலத்தான் திருமாவளவன், விடுதலை சிறுத்தைகளுக்கும் ஒரு நிர்ப்பந்தம். தேர்தலுக்கு முன்பு தனது கட்சியின் பலத்தை சோதித்துப் பார்க்கவும், அதை பலப்படுத்திக் கொள்ளவும் திருமாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. அதைத்தான் அந்தக் கட்சியினரும் சரியாக செய்து கொண்டிருக்கின்றனர். பாஜகவின் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து தற்போது திருமாவுக்கு ஆதரவாக பல கட்சிகள் திரண்டு விட்டன. கூடவே தலித் சமுதாயத்தினரும், திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

நிச்சயம் இது தேர்தலிலும் எதிரொலிக்கும். மனுவைத் தூக்கி பிடிக்கும் பாஜகவுக்கு எதிராக தலித் வாக்குகள் திரும்பும். திருமாவளவனுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் இது லாபத்தையே கொடுக்கும். அதாவது ஒவ்வொரு வாக்கு வங்கியாக குறி வைத்து பலப்படுத்தும் டெக்னிக்காகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. காரணம், இப்போது தேர்தல் நெருங்கி விட்டதால்.

ஹிட்டாச்சி மெஷின் வாங்கி கொடுத்த அண்ணாச்சி... மகிழ்ச்சியில் மணப்பாடு மீனவ மக்கள்..!

எந்த வகையில் பார்த்தாலும் இது நிச்சயம் திமுக கூட்டணிக்கோ அல்லது திருமாவுக்கோ பின்னடவைக் கொடுக்கக் கூடியதாக இருக்க வாய்ப்பில்லை. மாறாக அவர்களது வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொள்ளவே இது பயன்படும். அதேசமயம், பாஜகவுக்கு இந்த திருமா எதிர்ப்புப் போராட்டங்கள் எந்த அளவுக்கு பலன் தரும் என்றும் தெரியவில்லை. அதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 
 
 
English summary
Will Dalits rally against BJP in support of VCK and Thiurmavalavan?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X