சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"யூடர்ன்".. இன்னும் முறியலையாமே.. "அவர்" மூலம் கூட்டணி பேசும் பாமக.. அப்ப "அந்த" கட்சி வெளியேறுமா??

பாமக திமுகவுடன் விரைவில் இணையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: என்னதான் திமுக - பாமக இடையேயான கூட்டணி இல்லை என்று ஆகிவிட்டாலும், இன்னொரு பக்கம் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவே கூறப்படுகிறது.. இந்த தகவல் உண்மையா? அல்லது வேண்டுமென்றே யாராவது கிளப்பி விட்டு கொண்டிருக்கிறார்களா தெரியவில்லை.

பாமகவை பொறுத்தவரை, அதிமுக, திமுக என ஏதாவது ஒரு கட்சியுடன் இணைந்துதான் தேர்தலை சந்தித்து வருகிறது.. யார் அதிகம் சீட் தருகிறார்களோ, அவர்களுடன் இணைந்து கூட்டணி வைக்கும்.. இதைதான் தமிழகம் இத்தனை வருடமாக கண்ணால் பார்த்து வருகிறது.

ஆனால், இந்த முறை 2 கட்சிகளில் எந்த கட்சியுடனுமே கூட்டணி முடிவாகவில்லை.. உள்இடஒதுக்கீடு என்ற முக்கிய பிரச்சனையை ராமதாஸ் கையில் எடுத்துள்ளார்... அந்த கோரிக்கையில் இப்போது வரை உறுதியாகவும், பிடிவாதமாகவும் உள்ளார்.

அதிமுக

அதிமுக

கோரிக்கையை நிறைவேற்ற அதிமுக தயாராக இல்லை என்பது கடந்த மாதமே தெரிந்து விட்டது.. 2 முறை அமைச்சர்கள் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்த சென்றாலும், அதை இடஒதுக்கீடுக்கான பேச்சுவார்த்தையாகவே பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. அதேசமயம், திமுக தரப்பிலும் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருவதாக சொல்லப்பட்டது.

சேலம்

சேலம்

ஆனால், தயாநிதி மாறன் சேலத்தில் தந்த பேட்டி, மற்றும் 2 முறை முரசொலியில் பாமகவை விமர்சித்து கட்டுரை வெளியிட்டது போன்றவை எல்லாம் வைத்து பார்க்கும்போது, திமுகவுடன் பாமக கூட்டணி இல்லை என்றே கணிக்கப்பட்டுள்ளது.. நேற்றுகூட ஸ்டாலின் பேசும்போது, "வன்னியர் சமுதாயம், திமுக ஆட்சியில் தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவிக்கப்பட்டது... ராமதாஸ், தன் சொந்த ஆதாயத்திற்காக, சுய நலத்திற்காக, வன்னியர் சமுதாயத்திற்கு திமுக செய்த சாதனைகளை மறைத்து, பொய் பிரசாரம் செய்து வருகிறார்... பாமகவினர் திமுகவை நோக்கி இன்னும் அதிகமாக வரப்போகின்றனர், அதில் சந்தேகமே இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

ஆனாலும், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னமும் நடந்து வருவதாகவே உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.. திமுகவுடன் கூட்டணி வைக்க அன்புமணி விரும்புகிறார்.. அதேபோல பாமகவுடன் கூட்டணி வைக்க துரைமுருகன் விரும்புகிறார்.. இவர்கள் 2 பேரும்தான் இதற்கான முயற்சியை இதுவரை எடுத்து வந்தனர்.. ஆனால், அதற்கான சாத்தியங்கள் சாதகமாக அமையாமலேயே உள்ளது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

நேற்று முன்தினம் டாக்டர் ராமதாஸ் இன்னொரு போராட்டத்திற்கான அறைகூவலை விடுத்திருந்தாலும், நேற்று ஸ்டாலின் பாமகவை விமர்சித்திருந்தாலும், கூட்டணிக்கான பேச்சுவார்த்தை இப்போதும் நடந்து வருகிறதாம்.. ஆனால் இந்த முறை சபரீசன் மூலமாக பேச்சுவார்த்தை நடத்த முயலுவதாக தெரிகிறது.. இதற்கு திமுக தரப்பும் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.. ஒருவேளை பாமக உள்ளே வந்தால், விசிக கண்டிப்பாக கூட்டணியை விட்டு வெளியேற கூடும்.. இதை ஏற்கனவே திருமாவளவன் உறுதிப்பட தெரிவித்து விட்டார்.

விசிக

விசிக

இப்போது, விசிக தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்புகிறது.. உதயசூரியன் சின்னத்தில் மொத்தமாக நின்று போட்டியிட தயக்கம் காட்டுகிறது.. இதனால் மிக குறைந்த அளவிலான அதாவது 5-க்கும் குறைவான தொகுதிகளை விசிகவுக்கு ஒதுக்க திமுக யோசிக்கிறது.. 2 சீட் தருவதாகவும் ஒரு பேச்சு உள்ளது.. ஆனால், இதற்கு எப்படியும் விசிக ஒப்புக் கொள்ளாது.. சின்னம், சீட் இப்படி எல்லாமேபிரச்சனையாக இருக்கும்போது, கூட்டணியை விட்டு வெளியேறக்கூடும்.. அப்படி வெளியேறினால், பாமகவை உள்ளே கொண்டு வரவும் எளிதாக இருக்கும் என்ற கணக்கு திமுகவுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

திமுக

திமுக

பாமக - திமுக பேச்சுவார்த்தை இந்த முறை முடிவாகிவிடுமா? ராமதாஸ் - ஸ்டாலின் இணங்கி வருவார்களா? அல்லது விசிக கூட்டணியை விட்டு வெளியேறக் கூடுமா? என்பன போன்ற எதிர்பார்ப்புகள் கூடி வருகின்றன.. இதற்கெல்லாம் உடனடி பதில் நமக்கு கிடைக்காவிட்டாலும், நாளை மறுநாள் அதாவது ஜனவரி 31-ம் தேதி பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவில் ஓரளவு நமக்கு தெரிந்துவிடும்.

English summary
Will Dr Ramadoss alliance with DMK soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X