பாஜக போனை எடுக்காத அதிமுக.. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பிரதமர் வேட்பாளராகிறார் எடப்பாடி? திருப்பம்
சென்னை; 2024 லோக்சபா தேர்தலில் தனி கூட்டணி அமைக்கும் பட்சத்தில் அதிமுக தனது பிரதமர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக லோக்சபா தேர்தல் என்பது பிரதமர் பதவிக்காக நடக்க கூடிய தேர்தல். அதாவது நாட்டை மொத்தமாக ஆளப்போகும் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதை அடிப்படையாக வைத்தே வாக்கும் கேட்கப்படும்.

மக்கள் தேர்வு செய்யும் ஒவ்வொரு எம்பியும் லோக்சபா தேர்தலில் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான மிக முக்கியமான காரணியாக இருப்பார்கள். தமிழ்நாட்டில் 39 எம்பிக்கள் இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் தொங்கு அவை உருவாகும் பட்சத்தில் இந்த எம்பிக்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பது மிக முக்கியம்.
திமுக - இந்தியா கூட்டணி: ஒரு பக்கம் திமுக இந்தியா கூட்டணி இந்த விவகாரத்தில் தெளிவாக உள்ளது. பிரதமர் வேட்பாளராக ராகுலோ, மம்தாவோ, நிதிஷ் குமாரோ, ஸ்டாலினோ வரும் வாய்ப்புகள் உள்ளன. அல்லது தேர்தலுக்கு பின் இவர்கள் வெற்றிபெறும் பட்சத்தில் எம்பிக்கள் அடிப்படையில் ஒரு பிரதமரை தேர்வு செய்யும் வாய்ப்புகள் உள்ளன.
யார் வந்தாலும் மோடி வரக்கூடாது என்பதில் இவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதனால் மோடிக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களை செய்வார்கள். கடுமையான வாதங்களை வைப்பார்கள். மோடியை மிக கடுமையாக எதிர்த்து அரசியல் செய்வார்கள்.
பாஜக என்டிஏ கூட்டணி: இன்னொரு பக்கம் பாஜகவும் மோடிதான் பிரதமர் என்பதில் தீர்க்கமாக உள்ளது. அவர்களுக்கும் பிரதமர் வேட்பாளர் உறுதியாகிவிட்டார். அவர் இல்லை என்றால் நிதின் கட்கரி கூட வரலாம். ஆனால் பாஜக கண்டிப்பாக மோடியையே பெரும்பாலும் முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும்.
மோடி வேண்டாம் என்று சொல்லியே இந்தியா கூட்டணி பிரச்சாரம் செய்யும். மோடி வேண்டும் என்று கூறியே பாஜக கூட்டணி பிரச்சாரம் செய்யும். இதனால் பாஜகவிற்கு பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும். மொத்தத்தில் திமுக கூட்டணிக்கு தேர்தல் பிரச்சாரத்தில் சிக்கல் இல்லை. பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் தேர்தலில் யாரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வது என்பதில் சிக்கல். ஆனால் இதில் இடையில் மாட்டிக்கொண்டது என்னவோ அதிமுகதான். இரண்டு கூட்டணியிலும் இல்லாத அதிமுக எங்கே செல்லும் என்பதில் பெரிய குழப்பம் உள்ளது.
பிரதமர் வேட்பாளர்: இதனால்தான் 2024 லோக்சபா தேர்தலில் தனி கூட்டணி அமைக்கும் பட்சத்தில் அதிமுக தனது பிரதமர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. என்றால் பாஜகவிற்கு ஆதரவாக அதிமுக வாக்கு கேட்க முடியாது. மோடியை பிரதமராக்க வேண்டும் என்று கூறி வாக்கு கேட்க முடியாது. ஏனென்றால் அதிமுக என்டிஏ கூட்டணியில் இல்லை.
மோடியை அதிமுக எதிர்க்கும் வாய்ப்புகளும் இல்லை. மோடிக்கு வாக்களிக்காதீர்கள் என்று எடப்பாடி சொல்ல சான்ஸ் இல்லை. இன்னொரு பக்கம் இந்தியா கூட்டணிக்கும் அதிமுக செல்ல முடியாது. அங்கே திமுக உள்ளது. அப்படி இருக்க எதுவும் சொல்லாமல் போட்டியிட்டால் அதிமுக படுதோல்வியை சந்திக்கும். ஏனென்றால் இது நாடாளுமன்ற தேர்தல்.
வெறுமனே இரண்டு தரப்பிற்கும் பேசாமல் போட்டியிட்டால் அதிமுக படுதோல்வி அடைந்து அது 2026 சட்டசபை தேர்தலிலும் அதிமுகவிற்கு சுணக்கத்தை ஏற்படுத்தும்.
எடப்பாடி வேட்பாளர்; இதனால் எங்கே எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது தொங்கு அவை உருவானால் எடப்பாடியை பிரதமராக்கலாம் என்று முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க அதிமுக ரெடியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2014ல் ஜெயலலிதா இப்படித்தான் அரசியல் காய்களை நகர்த்தினார்.
அதேபோல் மீண்டும் எடப்பாடி பழனிசாமி நேரடியாக சொல்லாமல்.. மறைமுகமாக தன்னை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க ரெடியாக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications