சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆளுநரின் அந்த சிரிப்பு! காதுக்கு தகவல் வந்ததும் ரவி அப்படி செய்தாரா? அதுக்கு என்னங்க அர்த்தம்? பரபர!

Google Oneindia Tamil News

சென்னை: துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதாவை ஆளுநர் ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஊட்டியில் துணைவேந்தர்களின் 2 நாள் மாநாட்டை நடத்தினார் கவர்னர் ரவி. தமிழ்நாடு அரசு ஆளுநரின் இந்த தனிப்பட்ட மாநாட்டை விரும்பவில்லை.

இந்த மாநாட்டில் தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். ஆனால் இணை வேந்தர் என்ற முறையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன் முடிக்கு இது தொடர்பான அழைப்பு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

 தமிழக முன்னேற்றத்துக்கு தொழில் அமைதி மட்டுமே அடித்தளம்! முதலமைச்சர் மே தினம் வாழ்த்து! தமிழக முன்னேற்றத்துக்கு தொழில் அமைதி மட்டுமே அடித்தளம்! முதலமைச்சர் மே தினம் வாழ்த்து!

மசோதா

மசோதா

துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கு இருக்கிறது. இதனால்தான் ஆளுநர் இப்படி செய்கிறார் என்பது உணர்ந்து கொண்ட தமிழ்நாடு அரசு துணை வேந்தர்கள் நியமனம் செய்யும் மசோதாவை தாக்கல் செய்தது. துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து பறித்து, மாநில அரசுக்கே அதிகாரம் என்பதாக சட்டத்திருத்த மசோதாவை பேரவையில் நிறைவேற்றியது ஆளும் திமுக.

ஒப்புதல்

ஒப்புதல்

இந்த மசோதா சபாநாயகர் அப்பாவு மூலம் ராஜ்பவனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமசோதா நிறைவேறிய அந்த நாளில் துணை வேந்தர்களின் மாநாட்டை நடத்திக்கொண்டிருந்தார் கவர்னர். மசோதா குறித்து கவர்னரிடம் அவரது செயலாளர் சொல்லியிருக்கிறார். அதை கேட்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தாராம் கவர்னர் என்கிறார்கள்.. ஆளுநர் தரப்பு வட்டாரங்கள்.

 என்ன அர்த்தம்

என்ன அர்த்தம்

அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் என அதிகாரிகள் தரப்பில் விசாரிக்கும் போது, நீட் தேர்வு உள்பட 12-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் கவர்னரின் மேஜையில் இன்னும் காத்திருக்கிறது. அந்த மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருக்கிறார். ஒவ்வொரு மசோதாவிலும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கிறது. அந்த வரிசையில் இந்த சட்டத்திருத்த மசோதாவும் சேர்ந்து விடும்.

மசோதா மேல் மசோதா

மசோதா மேல் மசோதா

அதாவது, தனது அதிகாரத்தை பறிக்கும் மசோதாவை அவரே எப்படி குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார்? ஆளுநர் இதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார் என்று எந்த வகையில் இந்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது? என்கிற யோசனையில் வெளிப்பட்டது அந்த நமட்டுச் சிரிப்பு'' என்கிறார்கள் அதிகாரிகள். ஆளுநர் இந்த நாளுக்குள் மசோதாவை டெல்லிக்கு அனுப்பி வேண்டும் என்று விதி எதுவும் கிடையாது. அவருக்கு இதில் நெருக்கடி எதுவும் கொடுக்க முடியாது.

 நீட் மசோதா

நீட் மசோதா

இதனால் ஆளுனர் ரவி இப்போதைக்கு இந்த மசோதா மீது முடிவு எடுக்க வாய்ப்புகள் இல்லை என்றே கூறப்படுகிறது. ஆளுனர் ஏற்கனவே நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை. இதை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப போவதாக கடந்த வாரம் சில செய்திகள் வந்தன. ஆனால் ஆளுநர் அந்த முடிவை இதுவரை எடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

English summary
WIll governor Ravi send the TN govt's universities vc bill to president? துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதாவை ஆளுநர் ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X