ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலித்துக்கு பரிந்துரைப்பாரா ஆர்என் ரவி?பாலச்சந்திரன் ஐஏஎஸ் நறுக்
சென்னை: தமிழ்நாட்டில் தலித் ஒருவர் முதல்வராக வேண்டும் என்று பேசியிருக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் பதவியில் மட்டுமல்ல ஆளுநர் பதவியிலும் கூட ஒரு தலித் இருக்க வேண்டும் என்பதற்காக தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலித் ஒருவரை நியமிக்க வேண்டும் என மத்திய அரசிடம் பரிந்துரைப்பாரா? என சமூக செயற்பாட்டாளரான பாலச்சந்திரன் ஐஏஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
மாலைமுரசு டிவி சேனல் விவாதத்தில் பாலச்சந்திரன் ஐஏஎஸ் கூறியதாவது: ஆளுநர் கூறியதை நான் வரவேற்கிறேன். பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் (தலித்) தமிழக முதல்வராக வரவேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதை வரவேற்கிறேன். அப்படி வந்தால் படிப்படியாக இடஒதுக்கீடு மூலம் சமுதாய மறுமலர்ச்சி பாதையில் இன்னும் முன்னேற்றம் இருக்கிறது என்பதாக இருக்கும்.

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலித்துக்கு பரிந்துரைக்கலாம்
முதல்வர் பதவி என்பது மட்டுமல்ல தமிழ்நாட்டு ஆளுநராகக் கூட பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் (தலித்) வரவேண்டும் எனவும் ஆசைப்படுகிறேன். நம்முடைய ஆளுநர் ஆர்.என்.ரவியே இதற்கு முன்மாதிரியாக இருந்து, மத்திய அரசிடம், தாம் பதவியை ராஜினாமா செய்கிறேன்; தமக்கு பதிலாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவரை (தலித்) தமிழ்நாட்டு ஆளுநராக நியமியுங்கள் என
சொல்லலாம். அப்படி ஆளுநர் ஆர்.என்.ரவி சொன்னார் எனில், சொல்வதை செய்யக் கூடியவர்தான் ஆளுநர் என்ற நம்பிக்கையும் வரும்.
சமூக நீதி என்பது என்ன?
சமூக நீதி என்பது அடிப்படையில் பிறப்பால் எல்லோரும் ஒன்று; எந்தவிதமான ஏற்றத் தாழ்வும் கிடையாது என்பதுதான். சனாதன தர்மத்தை ஆதரிக்கிறோம் என பாஜக மீண்டும் மீண்டும் சொல்ல்விட்டது. உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் மகா
கும்பமேளாவில் கூட சனாதனத்தை ஆதரிப்பவர்களையே இனி வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று கூட தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றனர்; சனாதன தர்மத்தை ஆதரிப்பவர்கள்தான் வாக்காளர்களாக இருகக் வேண்டும் என்றெல்லாம் கூட சொல்லி இருக்கின்றனர்.
பகவான் கிருஷ்ணர் சொன்னது என்ன?
வருணாஸ்ரம தர்மம், சனாதன தர்மம் என்பது பிறப்பால் ஒருவர் உயர்ந்தவர்; தாழ்ந்தவர் என்கிறது. பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் சொன்னதாக, யார் யார் எந்த தொழில் செய்ய வல்லமை படைத்தவர்களோ என்பதை அவர்கள் பிறப்புக்கு முன்னரே
அறிந்து அத்தகைய தொழிலைச் செய்பவர்களாக நான் படைத்தேன் என தெரிவித்துள்ளார். இது சனாதன தர்மத்தை, வருணாஸ்ரம தர்மத்தை ஆதரிக்கிற கூற்று. கிருஷ்ணர், குணதர்மம் தொடர்பாக 2-வது வரியில் சொல்லி இருக்கிறார்.. அதை மட்டும் கிருஷ்ணர் சொல்லி இருந்தால் ஏற்கலாம். அப்படியானால் முதல் வரியை சொல்லி இருக்கக் கூடாது. இவ்வாறு பாலச்சந்திரன் ஐஏஎஸ் தெரிவித்தார்.
ஆளுநர் ரவி பேசியது என்ன?
அண்மையில் சிதம்பரத்தில் நடைபெற்ற 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த ஆன்மிக தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான சுவாமி ஏ.எஸ். சகஜானந்தர் அடிகளார் 135 -ஆவது பிறந்தநாள் விழாவில் பேசிய ஆளுநர் ரவி, தலித் ஒருவர் முதல்வராக வேண்டும்; தலித்துகளை தீய சக்திகள் பிரித்து வைத்துள்ளதாக கூறியிருந்தார். இதுதான் சர்ச்சையாக வெடித்தது. இது தொடர்பான டிவி விவாதத்தில் பாலச்சந்திரன் ஐஏஎஸ், ஆளுநர் ரவிக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications