2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ்
சென்னை: தமிழ்நாட்டில் ஏற்கனவே அமலில் இருந்த புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு பதிலாக, கடந்த ஜனவரி 1 முதல் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு விருப்ப ஓய்வுபெற்ற அரசு உதவி பெறும் ஆங்கிலோ - இந்தியன் பள்ளி ஆசிரியையான திருவான்மியூரைச் சேர்ந்த ரேணுகாதேவி உள்ளிட்ட சிலர் வழக்கு தொடரந்தனர். இந்த வழக்கில் ஆசிரியை வைத்த கோரிக்கை என்ன என்பதை பார்போம். இந்த வழககில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2004ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் இல்லை.. அதற்கு பதிலாக புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இது அரசு ஊழியர்களுக்கு போதிய நன்மை இல்லாமல் இருந்தது. இதனால் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராகவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கோரியும் அரசு ஊழியர்கள் 22 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்து வந்தனர்.

திமுக தந்த உறுதி
இந்த விவகாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் உறுதி அளித்தார். அதன்படி ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படாமல் இருந்தது. கடந்த ஆண்டு இறுதியில் அரசு ஊழியர்கள் தீவிர போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனால் கடந்த ஜனவரி முதல் அமலுக்கு வரும் வகையில் உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்தது.
திருவான்மியூர் ஆசிரியை வழக்கு
இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு விருப்ப ஓய்வுபெற்ற அரசு உதவி பெறும் ஆங்கிலோ - இந்தியன் பள்ளி ஆசிரியையான திருவான்மியூரைச் சேர்ந்த ரேணுகாதேவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ''கடந்த 2005-ம் ஆண்டு பணியில் சேர்ந்து 2017-ல் விருப்ப ஓய்வு பெற்றும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இன்னும் எனக்குரிய ஓய்வூதியப் பணப் பலன்கள் வழங்கப்படவில்லை. இதற்காக ஓய்வூதிய பணப்பலன்கள் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறேன்.
2025 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக பணி ஓய்வு பெற்றவர்கள்
ஆனால் தமிழக அரசு பணி ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடையுடன் சேர்த்து, கடைசி மாதம் பெறும் ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறும் வகையில் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை 2026 ஜனவரி 1-ம் தேதி முதல் அறிமுகம் செய்து, அரசாணையும் பிறப்பித்துள்ளது. மேலும், 2025 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக பணி ஓய்வுபெற்றவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட் டுள்ளது. இதனால் என்னைப் போன்றோர் தொடர் ஓய்வூதியம் பெற முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மாதாந்திர ஓய்வூதியம்
பங்களிப்புத் தொகை செலுத்தாத அரசு ஊழியர்கள் தொடர்ச்சியாக மாதாந்திர ஓய்வூதியம் பெற முடியும் என்றால், ஓய்வூதிய திட்டத்துக்காக தங்களது பங்களிப்புத் தொகையை செலுத்தி ஓய்வு பெற்றவர்களுக்கும் தொடர் ஓய்வூதியம் பெற அனைத்து உரிமை இருக்கிறது. அரசின் நிதிச்சுமையை குறைப்பதற்காகவே பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதற்கு எதிர்மறையாக இப்போது செயல்படுவது சரியானது இல்லை.
எந்த சிக்கலும் வராது
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் ரூ.73 ஆயிரம் கோடி எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக நிதியமைச்சர் கூறியுள்ள நிலையில், அந்த தொகை வட்டியுடன் சேர்ந்துள்ளதால், 2025 டிச.31-ம் தேதிக்கு முன்பாக ஓய்வு பெற்றவர்களுக்கும் தொடர் ஓய்வூதியம் வழங்குவதில் எந்த சிக்கலும் ஏற்படாது.
மாதாந்திர ஓய்வூதியம்
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு இதுநாள் வரை எந்தவொரு விதிகளும் வகுக்கப்படவில்லை என்பதால், எனக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அகவிலைப்படியுடன் சேர்த்து மாதாந்திர ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும். அத்துடன் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும்" இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். இது தொடர்பாக தமிழக அரசு மார்ச் 26-க்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications