ஸ்தம்பிக்குமா தமிழக போக்குவரத்து? பஸ் ஓடுமா? அத்திப்பள்ளியில் போலீஸ் குவிப்பு! எல்லையில் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தை கண்டித்து, கர்நாடகா - தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இன்று கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன. இதன் காரணமாக, "தமிழக வாகனங்களும், தமிழக மக்களும் இன்று கர்நாடகாவுக்குள் வரக்கூடாது" என்று கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த போராட்ட அறிவிப்பால் எல்லையில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.. எனினும், இன்று தமிழக பேருந்துகள் கர்நாடகாவுக்குள் வழக்கம்போல் ஓடுமா?' என்ற கேள்விக்குறியும் பதற்றமும் நிலவுகிறது.

காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் மீண்டும் தீவிரமான பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.

Tamil Nadu Transport Attibele Karnataka Border

மேகதாது அணை விவகாரம்

கர்நாடகாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாத சூழலில், மைசூரு கபினி அணையின் உபரிநீர் மட்டுமே தமிழகத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பதைக் கண்டித்தும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்தை உடனே அமல்படுத்தக் கோரியும் கன்னட அமைப்புகள் தங்களது போராட்டத்தை எல்லை வரை கொண்டு வந்துள்ளன.

வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி கர்நாடகா தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு இதுவரை 2,000க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அந்த எண்ணிக்கை 3000 ஆக உயரும் என்றும், பெங்களூரு மற்றும் மைசூரு உணவக உரிமையாளர்களும் கடைகளை மூட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வாட்டாள் நாகராஜ்

இதனிடையே இந்த போராட்டத்தை வாபஸ் பெறக் கோரி கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வைத்த கோரிக்கையை வாட்டாள் நாகராஜ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

முழு அடைப்பு போராட்டத்திற்கு முன்னோட்டமாக, இன்று அதாவது ஆகஸ்ட் 10ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணிக்குள் அத்திப்பள்ளி மாநில எல்லையை முற்றுகையிட்டு இருவழிப் போக்குவரத்தையும் மூடப்போவதாகக் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

வார்னிங் தந்த நாகராஜ்

"இன்று தமிழக வாகனங்களோ, தமிழக மக்களோ கர்நாடகாவுக்குள் வரக்கூடாது. காவிரி, மேகதாது மட்டுமல்லாது மகதாயி மற்றும் கலசா-பண்டூரி திட்டங்களையும் அரசு உடனே செயல்படுத்த வேண்டும். கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் கர்நாடக விவசாயிகளுக்காகக் கட்டப்பட்டவை.. நாம் திறக்கும் தண்ணீர் தமிழகத்தில் வீணாகக் கடலில் கலக்கிறது" என்று அவர் பேசியுள்ளார்.

மேலும், நடிகர் விஜய்யின் கர்நாடக வருகை குறித்துப் பேசிய அவர், மேகதாது அணைக்கு ஆதரவு தெரிவித்தால் மட்டுமே விஜய் பெங்களூருவுக்குள் வர முடியும், இல்லாவிட்டால் விமான நிலையத்தை முடக்கி தரையிறங்க விடமாட்டோம் என்றும் எச்சரித்துள்ளார்.

தமிழக அரசுப் பேருந்துகள்

தமிழக டெல்டா மாவட்டங்களில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி நீரை வைத்து விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாட்டால் குறுவை சாகுபடி ஏற்கனவே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் விவசாயமே மொத்தமாக அழியும் அபாயம் இருப்பதால், தமிழக அரசு உட்பட அனைத்து தரப்பினரும் இந்த திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

வாட்டாள் நாகராஜின் இந்த அடாவடி முற்றுகை எச்சரிக்கையை தொடர்ந்து, "இன்று தமிழக அரசுப் பேருந்துகள் கர்நாடகாவுக்குள் ஓடுமா?" என்ற கேள்வி பயணிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்லையில் பதற்றம்

அசம்பாவிதங்கள் மற்றும் தாக்குதல்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக அரசுப் பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் கர்நாடகாவுக்குள் செல்ல அனுமதிக்கப்படாமல், அத்திப்பள்ளி எல்லையிலேயே நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தமிழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலையாமல் இருக்கவும், வாகனங்களைப் பாதுகாக்கவும் நூற்றுக்கணக்கான போலீசார் அத்திப்பள்ளி சோதனைச் சாவடியில் குவிக்கப்பட்டுப் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் பகுதி கொண்டு வரப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+