'இந்த தேர்தலில் ரீடேக்' .. விஜய் ஆண்டனி பதிலால் ஆடிப்போன திமுக
சென்னை: நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இன்று வாக்களித்த பின் அளித்த பேட்டி அரசியல் கட்சிகளால் பெரிய அளவில் விவாதிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் ரீடேக் வருமா சார்" என செய்தியாளர்கள் மழுப்பலாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு கழுவுற மீனில் நழுவுற மீன் போல் சாதுர்யமாக பதில் அளித்த விஜய் ஆண்டனி, "வராது சார்.. வராது.. யாராவது ஒருவர் வந்து தானே ஆகணும்" என கூறினார்.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சென்னை சாலிகிராமத்தில் தனது வாக்கை இன்று மாலை பதிவு செய்தார்.. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த நாள் அரசாங்கத்தை தீர்மானிக்கும் முக்கியமான நாள். நான் வெளியூரிலிருந்தேன். அங்கிருந்து வந்ததால் தான் இவ்வளவு நேரமாகிவிட்டது. இன்றைய தேர்தலில் நிறைய பொதுமக்கள் வந்து வாக்களிப்பதை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த முறையை விட இந்த முறை வாக்களிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதை காண முடிகிறது.

தேர்தலில் வாக்கு பதிவு அதிகரிக்க விழிப்புணர்வு தான் காரணம். படித்த மக்கள் இப்போது அதிகமாகிவிட்டனர். வாக்காளர்களிடையே ஓட்டு போட வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துவிட்டது. இந்த முறை வாக்குப்பதிவு அதிகமாகியிருப்பது நல்லது. 5 வருடத்துக்கு ஒருமுறை அரசியலில் ரீ-டேக் எடுக்கலாம். அனைத்து துறைகளும் கடினமானது தான். எதுவும் ஈஸி இல்லை" என்று கூறினார்.
தொடர்ந்து விஜய் ஆண்டனியிடம், "இந்த தேர்தலில் ரீடேக் வருமா சார்" என செய்தியாளர்கள் மழுப்பலாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு கழுவுற மீனில் நழுவுற மீன் போல் சாதுர்யமாக பதில் அளித்த விஜய் ஆண்டனி, "வராது சார்.. வராது.. யாராவது ஒருவர் வந்து தானே ஆகணும்" என கூறி, "என் வாயில இருந்து எதாச்சும் வர வைக்காதீங்க" என விஜய் ஆண்டனி மீடியாக்களின் வலையில் சிக்காமல் சாதூர்யமாக சுதாரித்துக்கொண்டார். எனினும் அவர் மீண்டும் திமுக அரசுக்கு ரீ-டேக் இல்லை என்று கூறியுள்ளதாக விஜய் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதே போல அதிமுகவினர், பாஜகவினரும் திமுக அரசுக்கு ரிடேக் இல்லை என்று கூறியதாகவே விமர்சித்து வருகிறார்கள்.
இந்த முறை சட்டசபை தேர்தலில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு வாக்கு பதிவு நடந்து இருக்கிறது. வாக்காளர் சிறப்பு சீர்திருத்த பணிகளுக்குப் பிறகு வாக்குப்பதிவு எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. அதேபோல் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இந்த முறையா களமிறங்கி இருப்பதும் இளம் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிப்பதற்கு காரணமாக அமைந்திருக்கிறது .
பொதுவாக அதிக அளவில் வாக்குப்பதிவு நடந்தால் ஆளுங்கட்சிக்கு எதிராக பார்க்கப்படும். ஆனால் கருத்துக் கணிப்புகள் இதுவரை வந்த வகையில் பார்த்தால் திமுகவுக்கு சாதகமாக இருந்தது. எனவே உண்மை நிலவரம் என்ன என்பதை அறிய மே நான்காம் தேதி வரை மக்கள் காத்திருக்க வேண்டும்.














Click it and Unblock the Notifications