பழைய வருமான Regime நீக்கமா? வருமான வரி காலக்கெடு மாறுமா? சம்பளதாரர்களுக்கு போன ஷாக் தகவல்
சென்னை: புதிய வருமான வரி சட்டத்தில் வருமான வரி சட்டம் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால் இந்த சட்டத்தில் வருமான வரி Return தாக்கல் செய்வதற்கான நேரம் மாற்றி அமைக்கப்படாது, காலக்கெடு நீட்டிக்கப்பட்டது என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் பழைய வருமான வரி சட்டம் நீக்கப்பட வாய்ப்பு குறைவு என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுக்க பல லட்சம் சம்பளதாரர்கள் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் அதை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சம்பளதாரர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வருமான வரி தாக்கல் முறை:
பல்வேறு வகையான வரி செலுத்தும் முறை இருப்பதால் வரி செலுத்துவோருக்கு வெவ்வேறு காலக்கெடு உள்ளது. கணக்குகள் தணிக்கை செய்யத் தேவையில்லாத தனிநபர்கள் மற்றும் பிற வரி செலுத்துவோர் மதிப்பீட்டு ஆண்டின் ஜூலை 31 ஆம் தேதிக்குள் அசல் ITR ஐ தாக்கல் செய்ய வேண்டும். கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டியவர்கள் அதாவது audit செய்த பின் வரி செலுத்துவோர், மதிப்பீட்டு ஆண்டின் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தணிக்கை அறிக்கையை முதலில் சமர்ப்பிக்க வேண்டும். தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், வரி செலுத்துவோர் மதிப்பீட்டு ஆண்டின் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.
சர்வதேச பரிவர்த்தனைகளைக் கொண்ட வரி செலுத்துவோர் மதிப்பீட்டு ஆண்டின் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், வரி செலுத்துவோர் மதிப்பீட்டு ஆண்டின் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் ITR ஐ தாக்கல் செய்ய வேண்டும்.
அதே சமயம் தனிநபர் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான தேதியைத் தவறவிட்டால், அவர்கள் தாமதமான வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்யலாம். தற்போதைய வருமான வரிச் சட்டத்தின்படி, தாமதமான வருமானத்தைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மதிப்பீட்டு ஆண்டின் டிசம்பர் 31 ஆகும். இதேபோல், அசல் அல்லது தாமதமான ITR இல் தவறு ஏற்பட்டால், ஒரு தனிநபர் திருத்தப்பட்ட வருமானத்தை தாக்கல் செய்யலாம். திருத்தப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மதிப்பீட்டு ஆண்டின் டிசம்பர் 31 ஆகும். வருமான வரிச் சட்டத்தின் 234F பிரிவின் கீழ், தாமதமாக ரிட்டன் தாக்கல் செய்வதற்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
வருமான வரி சட்டம்
ஆனால் நாளை தாக்கல் செய்யப்படும் புதிய வருமான வரி சட்டத்தில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான நேரம் மாற்றி அமைக்கப்படாது, காலக்கெடு நீட்டிக்கப்பட்டது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் நடைமுறையில் உள்ள தற்போதைய வருமான வரிச் சட்டம் 1961 ஆம் ஆண்டு நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது, தற்போது புதிய வருமான வரிச் சட்டம் 21 ஆம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப தற்போதுள்ள வழக்கில் உள்ள சட்டத்திற்குப் பதிலாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் பின்வரும் முக்கியமான மாற்றங்களை செய்ய உள்ளனர்.
வருமான வரி சட்டத்தை எளிமையாக்க உள்ளனர். எல்லோரும் புரிந்துகொள்ளும்படி வருமான வரி மாற்றப்படும். வருமான வரி தாக்கல் செய்வது எளிமையாக்கப்படும். புதிய தளம், செயலி உருவாக்கப்படும். தனி நபர் வருமான வரி மேலும் எளிமையாக்கப்படும்.
பிஸ்னஸ் வருமான வரி இப்போது சிக்கலாக உள்ளது. இதை மிக எளிமையாக எல்லோரும் புரிந்துகொள்ளும்படி மாற்றுவார்கள். பழைய வருமான வரி regime நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதில் உண்மை இல்லை என்கிறார்கள். இப்போது நடைமுறையில் உள்ளன பழைய வருமான வரி regime, புதிய வருமான வரி regime இரண்டும் வழக்கத்தில் இருக்கும். ஆனால் பழைய முறையில் உள்ள சலுகைகள் நீக்கப்படலாம்.
பட்ஜெட்டில்தான் ஸ்லாப் மாற்றப்பட்டது என்பதால் வருமான வரி ஸ்லாப் இந்த சட்டத்தில் மாற்றப்படாது. அதே சமயம் புதிய வருமான வரி regimeல் புதிதாக சலுகைகள் சேர்க்கப்படலாம். அதாவது வீட்டு லோன் சலுகை போன்ற சலுகைகள் சேர்க்கப்படலாம். முந்தைய சிக்கலான சட்டத்திற்குப் பதிலாக நாட்டில் புதிய வருமான வரிச் சட்டத்தை கொண்டு வர சமீபத்தில் ஆய்வுக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. குழுவின் பரிந்துரையின் பேரில் புதிய வருமான வரி மசோதாவை அரசு தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தான் தாக்கல் செய்ய உள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications