Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சக்ஸஸ்" எடப்பாடி.. அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஜூலை 11 பொதுக்குழு விவகாரங்கள் நாங்கள் எப்படி தலையிட முடியும் என்று கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற ஒரு அமர்வு முடிவெடுக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.. அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீடு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த 23ம் தேதி நடத்தப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.

இந்த கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வருவது என்பது குறித்து சென்னையில் கடந்த 14ம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

 எடப்பாடி டென்ஷன்

எடப்பாடி டென்ஷன்

அதுவரை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.. திடீரென சம்பந்தமேயில்லாமல், அதிமுகவுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது.. இதை ஓபிஎஸ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. அப்போது முதலே ஓபிஎஸ் - எடப்பாடி தரப்பினரின் மோதல்கள் அதிகரித்து விட்டன.. இரு தரப்பிலும் கண்டனங்களும், குற்றச்சாட்டுகளும், புகார்களும், மாறி மாறி தெரிவிக்கப்பட்டு வருகிறது.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

கட்சிக்குள் மட்டுமே நடந்து கொண்டிருந்த விவகாரம், திடீரென சட்டரீதியாக திசை திரும்பிவிட்டது.. இதற்கு காரணம் ஓபிஎஸ்தான்.. எம்எல்ஏக்கள், மா.செ.க்கள் ஆதரவை அளவுக்கு அதிகமாக கையில் வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, எந்நேரமும் கட்சியை கைப்பற்றலாம் என்ற கலக்கம் ஓபிஎஸ்ஸுக்கு ஏற்பட்டுவிட்டது என்றே சொல்லலாம்.. அதனால்தான், அவர் கோர்ட்டுக்கு ஓடினார்.. மற்றொரு பக்கம் தேர்தல் ஆணையத்தையும் நாடினார்.. எப்படியும் இரட்டை இலையை முடக்கிவிடலாம் என்ற ஒரே நம்பிக்கையில் காத்து கொண்டிருக்கிறார் ஓபிஎஸ்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், 23-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீலுக்கு போனார்கள்.. அந்த வழக்குதான் இன்றைய தினம் விசாரணைக்கு வருவதாகவும், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண முராரி அடங்கிய அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெற போவதாகவும் தகவல்கள் முன்னமேயே வெளியாகின. முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பொருளாளர்

பொருளாளர்

ஓபிஎஸ்ஸின் நடத்தையால் அதிமுகவின் செயல்பாடுகள் முடங்கியுள்ளதாகவும், அதிமுகவின் செயல்பாட்டிற்கும், உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கும் ஓபிஎஸ் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை, கட்சியின் பொருளாளர் ஆன ஓபிஎஸ், கட்சி நிதியை விடுவிக்காததால் ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது... இதற்காக கூடுதல் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன

டென்ஷன்

டென்ஷன்

அத்துடன், ஒற்றைத் தலைமை கோரி 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது... ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிவை குறித்தும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.. இவ்வளவு ஆதாரங்களும் எடப்பாடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பு இதற்கெல்லாம் இன்று என்ன பதில் தர போகிறது என்ற ஆரவம் அதிகரித்தது.

எடப்பாடி

எடப்பாடி

முன்னதாக, பொதுக்குழுவுக்கு வருகை தந்தவர்கள் எத்தனை பேர் என்பது தெளிவாக தெரியவில்லை.. வருகைப்பதிவேடும் முறையாக இல்லை, அதிலும் கலந்து கொண்டவர்களில் உண்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் எத்தனை பேர் என்றும் உறுதியாக தெரியவில்லை.. அந்த உறுப்பினர்களில் பெரும்பாலானோர், எடப்பாடியின் உறவினர்கள் கூட கலந்துகொண்டுள்ளதாக செய்திகள் கசிந்தன.

 வீடியோ ரிப்போர்ட்

வீடியோ ரிப்போர்ட்

இது தொடர்பான உண்மையான ரிப்போர்ட்டை ஓபிஎஸ் கேட்டிருப்பதாகவும், அந்த பொதுக்குழு நடந்த வீடியோவை, ஆதாரமாக திரட்டி, ஓபிஎஸ் கோர்ட்டில் சமர்ப்பிக்க போவதாகவும் தகவல்கள் பரபரத்தன. ஒருவேளை போலி உறுப்பினர்கள், பொதுக்குழுவில் இடம்பெற்றிருப்பது நிரூபணமானால், இது எடப்பாடிக்கு சறுக்கலாகவும் அமையும் என்றும் கருதப்பட்டது.. அந்த வீடியோவை ஓபிஎஸ் தரப்பு தயார் செய்துவிட்டதா? இல்லையா? இன்றைய தினம் யாருக்கு சாதகமாக உத்தரவு வரப்போகிறது என்றெல்லாம் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக எழுந்தது.

எடப்பாடி

எடப்பாடி

முன்னதாக, எடப்பாடி தரப்பில் நடத்தப்பட்ட பொதுக்குழு குறித்து சில தகவல்கள் வெளியாகின.. அதாவது, அந்த பொதுக்குழுவில் வருகை தந்தவர்கள் எத்தனை பேர் என்பது தெளிவாக தெரியவில்லை.. வருகைப்பதிவேடும் முறையாக இல்லை, அதிலும் கலந்து கொண்டவர்களில் உண்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் எத்தனை பேர் என்றும் உறுதியாக தெரியவில்லை.. அந்த உறுப்பினர்களில் பெரும்பாலானோர், எடப்பாடியின் உறவினர்கள் கூட கலந்துகொண்டுள்ளதாக செய்திகள் கசிந்தன.

 வீடியோ ரிப்போர்ட்

வீடியோ ரிப்போர்ட்

இது தொடர்பான உண்மையான ரிப்போர்ட்டை ஓபிஎஸ் கேட்டிருப்பதாகவும், அந்த பொதுக்குழு நடந்த வீடியோவை, ஆதாரமாக திரட்டி, ஓபிஎஸ் கோர்ட்டில் சமர்ப்பிக்க போவதாகவும் தகவல்களும் பரபரத்தன. ஒருவேளை, போலி உறுப்பினர்கள், நடத்தப்பட்ட பொதுக்குழுவில் இடம்பெற்றிருப்பது நிரூபணமானால், இது எடப்பாடிக்கு சறுக்கலாகவும் அமையும் என்றும் கருதப்பட்டு வருகிறது.. அந்த வீடியோவை ஓபிஎஸ் தரப்பு தயார் செய்துவிட்டதா? இல்லையா? இன்றைய தினம் யாருக்கு சாதகமாக உத்தரவு வரப்போகிறது என்றெல்லாம் தெரியவில்லை.. இதனால், அதிமுகவே டென்ஷனில் உள்ளது.

 பரபர உத்தரவு

பரபர உத்தரவு

"ஜூலை 11 பொதுக்குழு விவகாரங்கள் நாங்கள் எப்படி தலையிட முடியும் என்று கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற ஒரு அமர்வு முடிவெடுக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.. மேலும், அதிமுக பொதுக்குழு, ஜூன் 23-ம் தேதியே முடிந்துவிட்ட நிலையில் தற்போது ஏன் முறையீடு செய்கிறீர்கள், உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று எப்படி நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிதிகள், அதிமுக உடகட்சி விவகாரங்களை பொதுக்குழுவில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி உத்தரவிட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மகிழ்ச்சி

எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மகிழ்ச்சி

ஜூன் மாதத்தில் பொதுக்குழுவை நடத்த அதிமுக முடிவு செய்தபோது அப்போதும் நீதிமன்றத்திலே ஓபிஎஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது சென்னை உயர்நீதிமன்றம் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும். அதை தவிர வேறு எதையும் நிறைவேற்ற கூடாது எனவும் உத்தரவிட்டனர். ஓபிஎஸ் தரப்பு வாதத்தின் அடிப்படையில் இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால் அந்த கூட்டத்தில் 23ல் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை அப்படிப்பட்ட சூழ்நிலையில் அதற்கு எதிராக ஏதேனும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் தங்களுடைய கருத்தை கேட்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இடைக்கால பொதுச் செயலாளர்

இடைக்கால பொதுச் செயலாளர்

அதற்குப் பிறகு ஓபிஎஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில் 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்ற சென்னை ஹைகோர்ட்டின் பழைய உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. எனவே வரும் 11-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் புதிதாக எந்த ஒரு தீர்மானத்தையும் கொண்டுவருவதற்கு அதிகாரம் கிடைத்துவிட்டது. இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பதவியை அதிமுகவில் உருவாக்கி இருப்பதாக கூறுகிறது. அதிமுக பொதுக்குழுவில் இந்த தீர்மானம் முன்மொழியப்பட உள்ளதாம். இதன்படி பார்த்தால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக உருவாவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+