Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரம், கும்மிடிப்பூண்டி கலங்குதே.. பெரம்பூரில் 4வது ரயில் முனையம் அமைந்தால் மிகப்பெரிய சிக்கல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் நிலம் கிடைக்காத காரணத்தால் பெரம்பூரில் 4வது ரயில் முனையம் அமைக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 4வது ரயில் முனையத்தை ராயபுரம் அல்லது தண்டையார்பேட்டையில் அமைத்தால் வட சென்னை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அதற்கு போதிய நிலம் உள்ளதாகவும் கோரிக்கை எழுந்துள்ளது.

ரயில்வே பட்ஜெட் விவரங்களை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விளக்கம் அளித்தார்.அப்போது மாநிலங்களுக்கான ஒதுக்கீடு பற்றி பேசும் போது, தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீடு பற்றி அறிவித்தார். அப்போது அவர் கூறும் போது, "கடந்த 2009-2014-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டு ரயில்வே மேம்பாட்டு திட்டங்களுக்காக ஆண்டு சராசரி ரூ,879 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இந்த ஆண்டு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ரூ,6 ஆயிரத்து 362 கோடி ஒதுக்கி இருக்கிறார். இது முந்தைய ஆட்சியைவிட 7 மடங்கு அதிகம் ஆகும்.

Chennai railway Perambur

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 1,302 கிலோ மீட்டர் நீளத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆண்டுக்கு குறைந்தபட்சம் 215 கிலோ மீட்டர் என்ற அடிப்படையில் மொத்தம் 2152 கிலோ மீட்டர் தூரம் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டு உள்ளது. 687 ரெயில்வே மேம்பாலங்களும், சுரங்கப்பாதைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது 22 புதிய ரயில்பாதை திட்டங்கள் ரூ,33 ஆயிரத்து 467 கோடிக்கு நடந்து வருகிறது. அம்பாசமுத்திரம், அம்பத்தூர், சென்னை கடற்கரை, எழும்பூர், பூங்கா, சிதம்பரம், மதுரை, கோவில்பட்டி, ராமேஸ்வரம், நெல்லை உள்பட 77 ரயில் நிலையங்கள் அம்ரித் ரயில் நிலையங்களாக மாற்றப்படுகிறது என்றார்.

இதுபற்றி விளக்கம் அளித்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், "தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்களில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம், கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம், ராமேசுவரம், காட்பாடி ஆகிய ரயில்நிலையங்கள் முற்றிலுமாக சீரமைக்கப்படுகின்றன. எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணி இன்னும் 2 ஆண்டுகளில் முடிவடைந்துவிடும்.

புதிய ரயில்வே மேம்பாலங்கள், ரயில்வே சுரங்க பாதைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. 40 ரயில்வே மேம்பாலங்களை அமைப்பதில் ரயில்வே துறையின் பணி முடிந்துவிட்டது. ஆனால், தமிழ்நாடு அரசின் பணிதான் நிலுவையில் இருக்கிறது. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையேயான 4-வது ரயில் பாதை அமைக்கும் பணி வரும் அக்டோபர் மாதம் நிறைவு பெறும். திண்டிவனம் -நகரி, ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி, ராமேசுவரம் - தனுஷ்கோடி உள்ளிட்ட பல்வேறு புதிய ரயில் பாதை திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் முனையங்களை தொடர்ந்து 4-வது ரயில் முனையம் பெரம்பூரில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வு பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இப்பணி ஒரு மாதத்தில் முடியும். அதைத்தொடர்ந்து விரிவான திட்டஅறிக்கை தயாரிக்கப்பட்டு நிதி கோரப்படும். நிதி ஒதுக்கப்பட்டால் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் பணி முடிந்துவிடும். வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனையம் அமைக்க தேவையான நிலம் எங்களுக்கு கிடைக்கவில்லை" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் 4வதாக பெரம்பூரில் ரயில் முனையம் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே துறை பொதுமேலாளர் ஆர் என் சிங் அறிவிப்பிற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

இது தொடர்பாக ரயில் பயணிப்போர் உரிமைகள் தீர்வகத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஏ.வி.எஸ் மாரிமுத்து கூறும் போது, "பெரம்பூரில் ரயில் முனையம் அமைக்கப்படும் என சொல்லி இருப்பது வெறும் கண்துடைப்பாக பார்க்க வேண்டும். சதானந்த கௌடா மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோதே ராயபுரம் ரயில் நிலையத்தை சென்னையின் நான்காவது ரயில் முனையமாக மாற்ற வேண்டி பல மனுக்களை கொடுத்துள்ளோம்.

மேலும், ராயபுரத்தில் ரயில் முனையம் அமைவதற்கு போதுமான இடமும் உள்ளது. சென்ட்ரலில் இருந்து டெல்லி இயக்குவதற்கும், சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்வதற்கும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கோரிக்கை வைத்தோம். இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். ராயபுரம் அல்லது தண்டையார்பேட்டையை 4வது முனையமாக மாற்றலாம் என ரயில்வே துறையினரே தெரிவித்து வந்தார்கள். தண்டையார்பேட்டையில் 200 ஏக்கர் வரை இடம் இருப்பதால் அதை பயன்படுத்தலாம் என்று கூறினார்கள், ஆனால், அந்த பணி அப்படியே கைவிடப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென தெற்கு ரயில்வே மேலாளர் பெரம்பூரில் நான்காவது முனையம் அமையும் என தெரிவித்துள்ளார்.

தண்டையார்பேட்டை அல்லது ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக்கினால் தான் பொருத்தமாக இருக்கும். மக்களுக்கும் எந்த இடையூறும் இல்லாமல் இருக்கும். பெரம்பூர் ரயில் நிலையத்தை முனையமாக்கினால் எந்த லாபமும் மக்களுக்கு இல்லை. பெரம்பூர் ஏற்கனவே நெருக்கடியான இடமாகும். அதில், நான்காவது முனையம் அமைப்பது ஏற்றுக்கொள்ளும் படியாக இருக்காது.

பெரம்பூரில் அமைக்கப்படுவதால் காலப்போக்கில் சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில்களை பெரம்பூரிலிருந்து இயக்குவதற்கு வாய்ப்பு ஏற்படும். இது தாம்பரம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து வருபவர்களுக்கு சிரமமானதாக மாறும். பெரம்பூர் வரவேண்டும் என்றால் தனி வாகனம் பிடித்து வர வேண்டிய சூழல் ஏற்படும்.

ஆனால், ராயபுரம் அல்லது தண்டையார்பேட்டையில் அமைத்தால் ஒரே ரயிலில் வந்து விட முடியும். அதேபோலஅரக்கோணம் மார்க்கம் செல்லும் வழியில் அதிக அளவு ரயில்கள் இருக்கிறது. இதனால் சிக்னல் பிரச்னைகளும் ஏற்படும். ஆனால், கும்மிடிப்பூண்டி செல்லும் வழியில் குறைவாக இருக்கிறது. நான்காவது முனையம் ராயபுரத்தில் அமைந்தால் தான் அனைத்து வழிகளுக்கும் சரியாக இருக்கும்.

தண்டையார்பேட்டை, ராயபுரத்தில் அமைத்தால் தென் மாநில ரயில்களையும், வட இந்தியாவுக்கு செல்லக்கூடிய ரயில்களையும் இயக்க முடியும், இது தொடர்பாக பொதுமக்களிடமும், ரயில் பயணிகள் சங்கத்திடமும் எந்த கருத்தும் கேட்கவில்லை" என்று ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+