சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பிளாஸ்டிக் சேர்" தானா தலைவா?.. சிண்டு முடியும் கட்சி.. நொறுக்கி தள்ளும் திருமாவளவன்.. சைலண்ட் திமுக

திமுகவுக்கு எதிராக திருமாவளவனை வைத்து பாஜக செய்யும் பிளான் ஒர்க்அவுட் ஆகுமா?

Google Oneindia Tamil News

சென்னை: 10 தாமரைகளை தமிழகத்தில் மலர வைப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு பாஜக ஒரு முடிவோடு உள்ளது.. இதற்காக அக்கட்சி எடுத்து வரும் அதிரடிகள் பிற கட்சிகளை மிரள வைத்து கொண்டிருக்கிறது.

அமித்ஷா சென்னை வந்துபோனபோது, 5 தாமரைகளாவது தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு வர வேண்டும் என்ற அசைன்மென்ட்டை, அண்ணாமலைக்கு தந்துவிட்டு போனதாகவும், அதற்கு பிறகுதான் தமிழக பாஜகவின் அரசியல் சூடுபிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியர்களின் ஆயுள் 5 வருசம் குறையுமாம்.. காரணம் என்ன தெரியுமா? - சிகாகோ பல்கலை. அதிர்ச்சித் தகவல் இந்தியர்களின் ஆயுள் 5 வருசம் குறையுமாம்.. காரணம் என்ன தெரியுமா? - சிகாகோ பல்கலை. அதிர்ச்சித் தகவல்

சொந்த கட்சியின் செயல்பாடுகளை, அறிவிப்புகளை, திட்டங்களை, பிரச்சாரம் செய்து, அதன்மூலம் மக்களின் வாக்குகளை பெறுவது ஒருவகை.. எதிர்தரப்பை சீண்டி விமர்சித்து, டேமேஜ் செய்து, குறைகளை பிரச்சாரம் செய்து வாக்குகளை பெறுவது இன்னொரு வகை.

 டார்கெட் திமுக

டார்கெட் திமுக

அப்படித்தான் திமுகவை டார்கெட் செய்து வருகிறது தமிழக பாஜக.. ஊழல் புகார்களை வெளியிட்டது முதல், ஒவ்வொன்றையும் பொதுவெளியிலேயே வெளியிட்டு கேள்வி கேட்டு வருகிறது.. இப்போது பாஜக மேற்கொள்ள போகும் இன்னொரு பிளான் கசிந்துள்ளது.. சில மாதங்களுக்கு முன்பு, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜக்கண்ணப்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல திருமாவளவன் சென்றிருந்தார்.. அப்போது, பிளாஸ்டிக் அவருக்கு வழங்கப்பட்டது மிகபெரிய சர்ச்சையானது.

 பிளாஸ்டிக் சேர்

பிளாஸ்டிக் சேர்

"அமைச்சர் சொகுசான சோஃ பாவில் உட்கார்ந்தபடியும், பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்து அமைச்சரிடம் பேசுகிறார், அதுவும் அந்த பழைய உடைந்த சேரில் அந்த நேரத்திற்கு மட்டுமே எடுத்து வந்து போட்டுள்ளனர்.. திருமாவளவனுக்கு ஏன் நாற்காலி தரவில்லை? இதுதான் திமுகவினரின் சுயமரியாதையா? இதுதான் உங்களது சுயமரியாதையா?" என்று திருமாவையும் சேர்த்துதான் அன்று பலர் கேள்வி எழுப்பினார்கள்.. இரு தரப்பிலுமே விளக்கங்கள் தரப்பட்டன.. விஷயம் அதற்கு மேல் அந்த விஷயம் பெரிதாக்கப்படவில்லை..

 திருமாவளவன்

திருமாவளவன்

ஆனால், இதே பிரச்சனை கடந்த வாரமும் வெடித்தது.. எம்பி திருமாவளவனுக்கு, திமுக எம்எல்ஏ அன்பழகன் பிளாஸ்டிக் சேர் கொடுத்தது, விவாதத்தை ஏற்படுத்தியது.. திருமாவளவன் கடந்த 6ம் தேதி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கும்பகோணம் சென்றார்... பிறகு, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகனை சந்தித்து பேசினார்... அப்போது குஷன் சேரில் திமுக எம்எல்ஏ அன்பழகன் உட்கார்ந்திருக்க, அருகில் திருமாவிற்கு பிளாஸ்டிக் சேர் தரப்பட்டுள்ளது.. நெட்டிசன்கள் பலர் இந்த போட்டோவை ஷேர் செய்து விமர்சனங்களை வைத்தனர்.

 சுயமரியாதை இதுதானா?

சுயமரியாதை இதுதானா?

இதுவே, திருமாவளவன் டெல்லி போனபோது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எவ்வளவு மரியாதையாக நடத்தினார்? அதுபோல் உங்களுக்கு நாகரீகம் தெரியவில்லையே? நீங்களே சுயமரியாதையை கடைப்பிடிக்காவிட்டால் எப்படி? என்று தாறுமாறாக கேள்விகள் எழுப்பப்பட்டன.. இப்போது இந்த சர்ச்சையும் ஓய்ந்துவிட்டது.. ஆனால், பாஜகவில் ஒருசிலர் இதை விடவில்லை.. தங்களுடைய அஸ்திரமாக சோஷியல் மீடியாவில் முன்னெடுத்து வருகிறார்களாம்.

பாஜக

பாஜக

"எங்கே போனாலும் உனக்கு பிளாஸ்டிக் சேர் தானா தலைவா?" என்று கிண்டல் வசனத்தை, அரசியல் ஆயுதமாக கையிலெடுத்துள்ளனராம் சில பாஜகவினர்.. அதாவது திமுக தலைவர்கள் யாருமே திருமாவளவனை மதிப்பதில்லை என்று சோஷியல் மீடியாவில் பகிர தொடங்கி உள்ளனராம்.. இதுஒருபக்கம், விசிகவுக்கும் திமுகவுக்கும் இடையே நெருடலை உண்டுபண்ணும் என்றாலும், திமுகவை டேமேஜ் செய்ய இந்த சம்பவம் பேருதவியாக இருக்கும் என்கிறார்கள்..

திருமாவளவன்

திருமாவளவன்

திமுகவை குறை சொல்ல, பாஜக என்னதான் பிளான்களை போட்டு வந்தாலும், தமிழ்நாட்டை குறி வைத்திருக்கிற சங் பரிவார்களையும், அகில இந்திய அளவில் சங்பரிவாரின் ஆதிக்கத்தையும் வீழ்த்துவது இன்றைக்கு உடனடி தேவையாக இருக்கிறது என்று தொடர்ந்து முழங்கி கொண்டு வருகிறார் திருமாவளவன்.. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அரசியலை விடாமல் விமர்சித்து, தமிழக மக்களை எச்சரித்தும் வருகிறார்.

 ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ்

ஒரு பேட்டியில் சொல்கிறார் திருமாவளவன், "இந்த அரசு மீண்டும் 2024-ல் உருவாகிவிடக்கூடாது.. அதை தடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஜனநாயக சக்திக்கும் இருக்கிறது.. அதனால், இடதுசாரிகள், காங்கிரஸ் அகில இந்திய அளவில் ஒருங்கிணையும் தேவை இருக்கிறது.. திமுக, காங்கிரஸ், விசிக என்ற இந்த அணிகள்தான், வரும் தேர்தலிலும் வகுத்தாக வேண்டும். தொடர வேண்டும் என்பதே எங்கள் திட்டம்" என்று திட்டவட்டமாக திமுக கூட்டணியை தெளிவுபடுத்தி விட்டார் திருமா.. இதில், பாஜகவின் பிளான் எந்த அளவுக்கு எடுபடுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..!

English summary
Will Thirumavalavan's political work out against the BJP and What are the BJP's next plans against DMK திமுகவுக்கு எதிராக திருமாவளவனை வைத்து பாஜக செய்யும் பிளான் ஒர்க்அவுட் ஆகுமா?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X