காவிரியில் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட ஆணையத்தில் வலியுறுத்தப்படும்: துரைமுருகன்
சென்னை: காவிரியில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படும் என காவிரி ஒழுங்காற்று குழு கூறியது போதாது என்று கூறிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரியில் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட ஆணையத்திடம் வலியுறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காவிரி நீர் ஒழுங்காற்று குழு என்று ஒன்று உள்ளது. அந்த குழுவில் நாள் ஒன்றுக்கு 24 ஆயிரம் கன அடி நீர் என 10 நாளைக்கு திறந்து விடும் படி ஒரு கோரிக்கையை வைத்தோம். ஆனால் அந்த குழுவினர் என்ன முடிவெடுத்து இருக்கிறார்கள் என்றால், 5 ஆயிரம் கன அடி நீர் தான் 15 நாளைக்கு திறந்துவிடும்படி பரிந்துரை செய்துள்ளது. ஆனால் அது போதாது என்பது நமது கோரிக்கை.. இன்று மதியம் இரண்டரை மணிக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் நடக்கிறது.

நம்முடைய செயலாளர் மற்றும் சிடிசி சேர்மேன் சுப்பிரமணியன் அவர்களும் கலந்துகொள்கிறார்கள். அவர்களிடத்திலே நாம் இந்த கோரிக்கைகளை வற்புறுத்தக்கோரி சொல்லியிருக்கிறேன்.. 24 ஆயிரம் கன அடி நீர் திறந்தால் தான் பயிர்கள் கருகாமல் இருக்கும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லும்படி கூறியிருக்கிறேன். இந்த கோரிக்கையினை அந்த கூட்டத்தில் அவர்கள் வைப்பார்கள்.. அதன்பிறகு என்ன என்பதை அவர்கள் சொல்வார்கள்.. இவ்வாறு அவர் கூறினார்.
-
பெரும் தலைகளையே ‘போட்டுப் பார்த்த’ வாக்காளர்கள்.. காமராஜர், அண்ணாவை தோற்கடித்த தேர்தல் வரலாறு! -
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
"மாதவிடாய் விடுமுறை என்பது அடிப்படை உரிமை!".. கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications