ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: தவெக விஜய் தேர்தலை புறக்கணித்தது சீமானுக்கு லாபாமா? திமுகவுக்கு லாபமா?
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதிமுக, பாஜக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகமும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், விஜய் ஆதரவு வாக்குகள் சீமானுக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால் சீமானின் கடந்த கால பேச்சுகள் காரணமாக விஜய் வாக்குகள் சீமானுக்கு செல்லாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்..
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த பத்தாம் தேதியிலிருந்து வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக வேட்பாளராக சந்திரகுமாரை அறிவித்திருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திமுக - நாம் தமிழர் கட்சி இடையே இந்த தேர்தலில் நேரடி போட்டி ஏற்பட்டிருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகமும் தேர்தலில் போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
மேலும் தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
அதனடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின்பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்.” என கூறியிருந்தார்.
இதனால் திமுக எதிர்ப்பு வாக்குகளான அதிமுக பாஜக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குகள் தனக்கு கிடைக்கும். இதனால் 50,000 வாக்குகளை எட்டலாம் என திட்டமிட்டு இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான். ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு விஜய் ஆதரவு வாக்குகள் செல்லாது என்கின்றனர் தேர்தல் அரசியலை கவனிக்கும் நிபுணர்கள்.
விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாக ’தம்பி’ என அழைத்து வந்த நிலையில் கட்சி ஆரம்பித்த பிறகு கூட்டத்தை பார்த்து விஜயை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் ’செத்துப் போயிருவ நீ’ என ஒருமையில் விமர்சித்தது விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. பொதுவாகவே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தான் சமூக வலைதளங்களில் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆனால் விஜய் ரசிகர்கள் அனைவருமே ஒரு படி மேலே போய் நாம் தமிழர் கட்சியினரையே விமர்சித்து வருகின்றனர்.
மேலும் இரு கட்சியினரிடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் தேர்தலில் சீமானுக்கு விஜய் கட்சியினர் வாக்களிக்க மாட்டார்கள். அதே நேரத்தில் தேர்தலை புறக்கணிக்க விஜய் அழைப்பு விடுத்து இருப்பதால் வாக்களிக்காமல் கூட இருக்கலாம். ஆனால் சீமானுக்கு வாக்கு செலுத்த மாட்டார்கள். மேலும் அதிமுக பாஜக வாக்களும் திமுகவுக்கு செல்லவே வாய்ப்பு இருக்கிறது. பாதிக்கு பாதி அதிமுக வாக்குகள் சீமானு கிடைக்கலாம். பொது வாக்காளர்கள், திமுகவினர், திமுக கூட்டணி கட்சி வாக்குகள் திமுக வேட்பாளருக்கு பலமாக இருப்பதால் பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications