“ஊழல்..” வாயை விட்ட விஜய்! ப்ளூ சட்டை மாறன் கேட்ட நறுக் கேள்வி! தவெக பதில் சொல்லுமா?
சென்னை: மாமல்லபுரம் கூட்டத்தில் பேசிய விஜய், தீய சக்தியாக இருக்கட்டும்.. ஊழல் சத்தியாகட்டும்.. இரண்டுமே தமிழ்நாட்டை ஆளக்கூடாது. என்று திமுக மற்றும் அதிமுகவை விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஊழலை பற்றி பேசும் விஜய், ப்ளாக்கில் டிக்கெட் விற்பனை குறித்து இத்தனை நாட்கள் வாய் திறக்காதது ஏன்? என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருக்கிறார்.
வழக்கமாக திமுகவை கடுமையாகவும், பாஜகவை தொட்டும் தொடாமலும் விமர்சித்து செல்லும், விஜய்.. இந்த முறை தனது டோனை கொஞ்சம் மாற்றி, அதிமுகவையும் உள்ளே இழுத்திருக்கிறார்.

விஜய் பேசியது என்ன?
"தீய சக்தியாக இருக்கட்டும்.. ஊழல் சத்தியாகட்டும்.. இரண்டுமே தமிழ்நாட்டை ஆளக்கூடாது. அப்படிப்பட்ட கட்சிகளை உண்மையாகவே எதிர்க்கிற தைரியம், நம்மிடம் மட்டும் தான் இருக்கிறது. அதனால் எந்த சூழ்ச்சி செய்தாலும், எந்த அழுத்தம் கொடுத்தாலும்.. பணிந்து போக, அடிமையாய் இருக்க நான் அரசியலுக்கு வரவில்லை. என் மண்ணுக்கும், மக்களுக்கும் யார் தீமை செய்தாலும்.. அதை எதிர்த்து அவர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க தான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்.
அதிமுகவை தாக்கி விஜய்
அண்ணா தொடக்கி வைத்த கட்சியும், அண்ணாவையும் மறந்து சுயநலமாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. அண்ணா பெயரில் இருக்கும் கட்சியும் அவரை மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், நாம் அவரை மறந்து விடக்கூடாது" என்று பேசியிருந்தார் விஜய்.
ஊழல் கிடையாதா?
அதிமுக மீதான விமர்சனத்திற்கு, அக்கட்சி காட்டமாகவே பதிலடி கொடுத்திருந்தது. விஜய்யை பனையூர் பண்ணையார் என்றும், ஊழல் குறித்து பேசும் விஜய் தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் கோடிகளை அள்ளியது மட்டும் ஊழல் கிடையாதா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தது.
மண்டியிடுவதும் ஊழல்தான்
தனது படம் வெளியாக அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கை கட்டி நின்றதாக விமர்சித்திருக்கும் அதிமுக, ஊழல் என்பது வெறுமனே அரசியலில் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. Undue influence மூலம் தனக்கான வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுவதும்தான் என்று காட்டமாகவே விஜய்யை வைத்து செய்திருந்தது.
தைரியம் இருக்கா விஜய்?
இப்படி இருக்கையில் திரைப்படம் விமர்சகரும், யூடியூபருமான ப்ளூ சட்டை மாறனும் விஜய்க்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். தனது x பக்கத்தில், "ஊழலை நேரடியாக செய்யாவிட்டாலும்.. அதை வேடிக்கை பார்த்து அமைதியாக இருப்பதும் ஊழல்தான். இத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது 'எனது ரசிகர்கள் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கவோ, விற்கவோ கூடாது' என சொன்னதுண்டா? ஜனநாயகன் வரும்போது இதை சொல்ல தைரியம் உண்டா?" என்று நறுக்கென கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்கு தவகெவினர் என்ன பதிலை சொல்லப்போகிறார்கள் என்பது எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.
-
“மக்களை நாய்கள் என்று சொல்லவில்லை.. நான் பேசியதை தவறாக பரப்புகின்றனர்” - ராகவா லாரன்ஸ் விளக்கம்! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு? -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
அந்த குழந்தையே நீங்க தான் சார்.. தவெக கூட்டணி.. துரை வைகோ கொடுத்த ஹின்ட் -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை











Click it and Unblock the Notifications