சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தலில் தோற்றால் அரசியலில் இருந்து விலகி விடுவீர்களா? இதுக்கு கமல் சொன்ன செமையான பதில் இதுதான்!

Google Oneindia Tamil News

சென்னை: சினிமா எனது தொழில்; ஆனால் அரசியல் எனது நோக்கம். வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவே நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று கமல்ஹாசன் கூறினார்.

எனது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன்; தேர்தலில் தோற்றாலும் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன் என்று அவர் கூறினார்.

Will you stay out of politics if you lose the election? This is the perfect answer given by Kamal

சென்னையில் நடந்த ''இந்தியா டுடே கான்க்ளேவ் சவுத் 2021'' நிகழ்ச்சியில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:- சினிமா எனது தொழில்; ஆனால் அரசியல் எனது நோக்கம். வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவே நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். எம்.ஜி.ஆர், எம்.எல்.ஏ ஆனபின் சுமார் 50 படங்களில் நடித்தார்.காந்தி, காமராஜர் போன்றோர் ஏழைகளின் தலைவராக இருந்தனர்; நாங்களும் அப்படித்தான் இருக்க ஆசைப்படுகிறோம்.

தி.மு.க.வில் சிறந்த திரைக்கதை எழுத்தாளர் இல்லை. அவர்கள் என்னிடம் சொல்லக்கூடியதை விட அதிகமான கதைகளை அவர்களிடம் என்னால் சொல்ல முடியும். அது ஒன்றுமில்லை ஆனால் திமுகவின் கற்பனையின் ஒரு உருவம். அவர்கள் முழு இரவு தூக்கத்திற்கு தகுதியானவர்கள் என்று கூறினார். கட்சிக்கு நிதி ஆதாரத்தை வலுப்படுத்தவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

கேம் ஸ்டார்ட்.. கமல்ஹாசன் குறி வைக்கும் கேம் ஸ்டார்ட்.. கமல்ஹாசன் குறி வைக்கும் "அந்த 2" வாக்கு வங்கி.. மக்கள் நீதி மய்யம் செம உற்சாகம்

ரஜினி அரசியல் ஓய்வு குறித்து பதிலளித்த அவர் 'நல்லவர்கள் இணைந்து செயல்பட வேண்டுமென நினைத்தேன். அதேசமயம் அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகள் என ஒட்டுமொத்தமாக கூறிவிட முடியாது. அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் நல்ல முன்னுதாரணம்; திமுக, அதிமுகவில் சில நல்லவர்களும் உள்ளனர்'' என்று தெரிவித்தார். தேர்தலில் தோற்றால் அரசியலிலிருந்து விலகி விடுவீர்களா? என்ற கேள்விக்கு, ''இல்லை; எனது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன்; தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன்'' என்று கூறினார்.

English summary
Cinema is my profession; But politics is my purpose. "We are contesting the elections because we want to win," Kamal Haasan said
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X