புரட்டாசி முடிந்ததும்! காசிமேடு மீன் மார்க்கெட்டில் வஞ்சிரத்தை வாஞ்சையோடு எடுக்கும் மக்கள்!
சென்னை: புரட்டாசி மாதம் நேற்று முன் தினம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கிய நிலையில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமையில் அதிகாலையிலேயே மீன் வாங்க கூட்டம் அலைமோதியுள்ளது. இதனால் மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக டல்லடித்த வியாபாரம் இன்று காலை முதல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி ஆகும். இந்த மாதம் பெரும்பாலானவர்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள். சிலர் முதல் சனிக்கிழமையே படையலை போட்டுவிட்டு அசைவம் சாப்பிட தொடங்குவார்கள்.

அந்த வகையில் புரட்டாசி மாதம் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி பிறந்தது. இது கடந்த 17-ஆம் தேதி முடிந்தது. நேற்று 18ஆம் தேதி முதல் ஐப்பசி 1ம் தேதி பிறந்தது. இந்த முதல் நாள் சனிக்கிழமை என்பதால் பலர் அசைவம் சாப்பிடவில்லை.
ஆனால் இன்று ஞாயிற்றுக்கிழமை பிறந்ததும் காசிமேடு மீன்பிடி சந்தையில் மீன் வாங்க அதிகாலை முதலே கூட்டம் குவிந்தது. குறைந்தளவு விசைப்படகுகளே கரைக்கு திரும்பியதால் மீன் வரத்தும் குறைவாகே இருந்தது. விலையும் சராசரியாக இருந்தது.
வஞ்சிரம், வவ்வால், பால் சுறா, திருக்கை மீன், பாறை, சீலா, சங்கரா உள்ளிட்ட மீன்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். அது போல் கடலூர் துறைமுகத்திலும் மீன்களை வாங்க மக்கள் குவிந்தனர். தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் நாளை மாலை அமாவாசை விரதமும் தொடங்கப்படுவதால் இன்றே மீன் கடைகளிலும் இறைச்சி கடைகளிலும் மக்கள் குவிந்துள்ளனர்.
ஆட்டுக் கறி கிலோ 1000 ரூபாய்க்கும் கோழி கறி ரூ 280-க்கும் விற்பனையாகிறது. அது போல் வஞ்சிரம் மீன் 800 ரூபாய், வவ்வால் ரூ 600, சங்கரா ரூ 300, இறால் ரூ 300, நண்டு ரூ 400க்கு விற்பனையாகிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications