சுப்புலட்சுமிக்கு மாமியார் பாசம்.. பக்கத்து வீட்டிற்கு பக்கா ஸ்கெட்ச்... மிரண்ட வண்ணாரப்பேட்டை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் பக்கத்து வீட்டிற்குள் ஆள் இல்லாத நேரமாக பார்த்து, மாற்று சாவியை எடுத்து திறந்து நுழைந்து நகைகளை திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்..

சென்னை புதுவண்ணாரப்பேட்டை புச்சம்மாள் தெருவில் 46 வயதாகும் பூமாதேவி என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் தமிழரசி என்ற பெண் வசித்து வருகிறார். இவருடைய மருமகளான தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த 28 வயதாகும் சுப்புலட்சுமி தனது மாமியாரை பார்ப்பதற்காக அடிக்கடி புதுவண்ணாரப்பேட்டை வந்து செல்வாராம்.

Woman arrested for stealing jewelery from a neighbors house in new Washermanpet, Chennai

அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பூமாதேவியுடன் சுப்புலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த அக்டோபர் 20ம் தேதி பூமாதேவி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டாராம்.

பின்னர் பூமாதேவி வீட்டுக்கு திரும்பி வந்தபோது பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பூட்டு உடைக்கப்படாத நிலையில் நகை மட்டும் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் புது வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் மாமியார் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற சுப்புலட்சுமி குறித்து விசாரித்தனர். அவர் பூமாதேவி வீட்டில் திருடியதை விசாரணைக்கு பின்னர் ஒப்புக்கொண்டார். ஏற்கனவே பூமாதேவி வீட்டுக்கு சென்ற சுப்புலட்சுமி, அவரது வீட்டின் ஒரு மாற்று சாவியை திருடி வைத்துக்கொண்டுள்ளார்..

பின்னர் சமயம் பார்த்து பூமாதேவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஏற்கனவே திருடி வைத்து இருந்த மாற்று சாவியை வைத்து வீட்டை திறந்து உள்ளே சென்றுள்ளளார்.. அங்கு பீரோவை திறக்க முடியாததால் அதன் சாவியை தொலைத்து விட்டதாக பீரோவை பழுது பார்க்கும் நபரை அழைத்து வந்து பீரோவை திறந்து நகையை திருடியதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

சுப்புலட்சுமியிடம் இருந்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பக்கத்து வீட்டிற்குள் ஆள் இல்லாத நேரமாக பார்த்து மாற்று சாவியை எடுத்து திறந்து நுழைந்து நகைகளை திருடிய சம்பவம் சென்னை வண்ணாரப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+